கடலூர்: கடலூர் வீர ஆஞ்சநேய கோவிலில் நேற்று லட்ச தீப விழா கோலாகலமாக நடந்தது. திருப்பாதிரிப்புலியூரில் உள்ள வீர ஆஞ்சநேயர் ÷ காவிலில் ஆண்டுதோறும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று லட்சதீப விழா நடைபெறுவது வழக்கம். அதேப்போன்று இந்த ஆண்டு லட்சதீப விழா விமர்சையாக நடந்தது. கோவில் வளாகத்தில் தீபம் ஏற்றுவதற்காக அகல்விளக்கு தயார் செய்து விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் தீபம் ஏற்றுவதற்கும், ஆஞ்சநேயரை தரிசனம் செய்வதற்கும் வசதியாக பாரிகார்டு அமைக்கப்பட்டிருந்தது. மாலையில் பக்தர்கள் வரிசைய õக சென்று தீபம் ஏற்றி ஆஞ்சநேயரை வழிபட்டனர். சாலையோரம் இரு பக்கங்களிலும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.