மதுரை: எம். கல்லுப்பட்டி அருகே அய்யனார் கோயில் தடுப்பணை பகுதியில் வாழைகாத்த அய்யனார் கோயில் உள்ளது. தமிழ்ப்புத்தாண்டு தினமான நேற்று அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. எழுமலை, ராமநாதபுரம், எம்.கல்லுப்பட்டி, கிருஷ்ணாபுரம் பகுதி மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அன்னதானமும் நடந்தது.