பதிவு செய்த நாள்
15
ஏப்
2015
12:04
தஞ்சாவூர்: தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாக, தஞ்சை பெரியகோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் நேற்று அதிகாலை முதலே, சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது.தஞ்சை பெரியகோவிலில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக மூலவர் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தணக்காப்பு அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி, அம்பாளை தரிசித்தனர். புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் திருக்கோவிலில் அம்பாளுக்கு சந்தணக்காப்பு அலங்காரத்துடன் மலர்களால் வடிவமைக்கப்பட்ட ஆடை அணிவித்து (பூவாடை) சிறப்பு பூஜைகள் நடந்தது.தஞ்சை மூல ஆஞ்சநேயர் கோவில், வெள்ள பிள்ளையார் கோவில், கொங்கணேஸ்வரர் கோவில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில், கலியுக பெருமாள் திருக்கோவில், பூக்காரத்தெரு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும், தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாக, நேற்று அதிகாலை முதலே, சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், தேங்காய், பழம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.