பதிவு செய்த நாள்
15
ஏப்
2015
01:04
கோவை : தண்டு மாரியம்மன் கோவில் சித்திரைத்திருவிழா கொடியேற்றம் மற்றும் பூச்சாட்டு நிகழ்ச்சியோடு நேற்று துவங்கியது. கோவை, அவிநாசி ரோடு மேம்பாலம் அருகே உள்ள தண்டு மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா, விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழாவை நேற்று கோவில் சிவாச்சாரியார்கள் கொடியேற்றி துவக்கி வைத்தனர். நேற்று மாலை ஆதினங்கள் முன்னிலையில் பூச்சாட்டு துவங்கியது. விழா நாட்களில் தினமும், காலையும், மாலையும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. நாளை மாலை, 6.30 மணிக்கு அக்கினிச்சாட்டு, 17ம் தேதி திருவிளக்கு வழிபாடு நடக்கிறது. ஏப்., 20 இரவு, 7:00 மணிக்கு குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 21ம் தேதி மாலை, 6:30 மணிக்கு திருவிளக்குவழிபாடு, இரவு, 8:00 மணிக்கு அன்ன வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.ஏப்.,22ம் தேதி காலை, 7:00 மணிக்கு சக்தி கரகம், அக்னிச்சட்டி ஊர்வலம், கோனியம்மன் கோவிலில் துவங்கி, தண்டுமாரியம்மன் கோவில் வரை நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு, திருக்கல்யாண உற்சவமும், இரவு, 8:30 மணிக்கு தங்கரத புறப்பாடும் நடக்கிறது. இரவு, 9:00 மணிக்கு மலர் பல்லக்கில் அம்மன் வீதி உலா, 23ம் தேதி காலை, 9:00 மணிக்கு மகா அபிஷேகம், காலை, 10:00 மணிக்கு மஞ்சள் நீர், மாலை, 6:00 மணிக்கு கொடி இறக்குதல், இரவு, 7:45 மணிக்கு கம்பம் கலையும் நிகழ்ச்சி நடக்கிறது.ஏப்.,24 காலை, 6:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை தமிழில் லட்சார்ச்சனை நடக்கிறது. 26ம் தேதி காலை, 7:00 மணிக்கு சங்காபிஷேகமும், இரவு, 7:00 மணிக்கு வசந்தோற்சவமும் நடக்கிறது.