நவகிரகங்களில் ராகு பாம்பு வடிவுடையவன். ராகு தினமும் மூணே முக்கால் நாழிகை அதாவது 1 மணி 30 நிமிஷம் விஷத்தைக் கக்குகிறான். அந்த நேரத்தில் காரியங்கள் தொடங்குவதோ, செய்வதோ தடைப்படும். ஆனால் ராகு ஞாயிற்றுக்கிழமை மாலை ராகுகாலத்தில் 4.30 முதல் 6.00 மணிக்குள் சரபேஸ்வரரை வழிபடுகிறான். அப்போது ராகு கக்கும் விஷம் இறைவனருளால் அமிருதமாக வடிகிறது. ராகு சரபரை வழிபடும் இந்த நல்ல நேரத்தில் அமிருத கடிகையில் பக்த கோடிகள் சரபரை வழிபட்டால் ராகு தோஷங்கள் நீங்கி சகல ÷க்ஷமங்களும் உண்டாகும் என்பது ஐதீகம்.