செஞ்சி: செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணருக்கு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்தனர். செஞ்சி வெங்கட்ரமணர் கோவிலில் நேற்று தமிழ் புத்தாண்டு விழா நடந்தது. இதை முன்னிட்டு காலை 9 மணிக்கு பூதேவி, ஸ்ரீதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, சந்தன காப்பு அலங்காரம் செய்தனர். பகல் 12 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. சக்கராபுரம் பகுதி பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்தனர். இதில் வழக்கறிஞர் பூபதி, பேரூராட்சி கவுன்சிலர் பத்மா சாகர், வழக்கறிஞர் வைகை தமிழ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.