பதிவு செய்த நாள்
16
ஏப்
2015
12:04
ஆனைமலை: ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் சித்திரைப் பெருவிழா பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்றுமுன்தினம் காலை, 7:30 மணிக்கு கிராமச்சாட்டுடன் துவங்கியது. இரவு, 11:00 மணிக்கு கம்பம் போடுதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், வரும் 20ம் தேதி இரவு, 8:00 மணிக்கு சக்திகும்பஸ்தானம், பூவோடு வைத்தல், சாட்டை போடுதல், ஆகியனவும், 28ம் தேதி காலை, 10:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம், இரவு, 7:30 மணிக்கு புஷ்ப பல்லக்கில் அம்பாள் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். முக்கிய நிகழ்ச்சியான மாவிளக்கு, ஊஞ்சல் உற்சவம் விழா ஏப்.,29ல் நடக்கிறது. அன்றிரவு, 11:00 மணிக்கு கம்பம் அகற்றுதல் நிகழ்ச்சி நடைப்பெறுகிறது. ஏப்.,30ல் மஞ்சள் நீராட்டும் மகா அபி?ஷகம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.