பெண்ணாடம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, பெண்ணாடம் செல்வ விநாயகர் கோவிலில் நேற்று முன்தினம் தேர் உற்சவம் நடந்தது. அதையொட்டி, காலை 8:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், 9:00 மணிக்கு தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம், இரவு 7:00மணிக்கு தீபாராதனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு தேர் உற்சவம் நடந்தது.