விழுப்புரம்: விழுப்புரம் மேல்தெரு பகுதியில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது. விழுப்புரம் மேல்தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து காலை 8:00 மணிக்கு தீபாராதனை, மாலை 5:00 மணிக்கு காமாட்சி அம்மன் மீனாட்சி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறங்காவலர் சரவணன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.