திருவாரூர் மாவட்டம் நன்னிலத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது திருச்செங்காட்டங்குடி. இங்கு கோயில் கொண்டுள்ள வாதாபி கணபதிக்கு ஆண்டு தோறும் சித்திரை மாத பரணி நட்சத்திர நாளில் பிள்ளைக்கறியமுது விழா நடைபெறுகிறது. அரிசிமாவு, வெல்லம், ஏலக்காய் அரிசி, திப்பிலி, வால்மிளகு ஆகியவற்றைக் கொண்டு பொம்மை செய்யப்படுகிறது. இந்த பொம்மையை பிரசாதமாக சிறிது வாங்கி உண்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விரைவில் பிள்ளைப்பேறு உண்டாகிறது என்பது நம்பிக்கை.