கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரே கல்லில் ஒன்பது கிரகங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதை நவகிரக சக்கரம் என்றும்; சூரியனை மையமாகக் கொண்டு ஒன்பது கிரகங்களும் இயங்குவதால் சூரிய சக்கரம் என்றும் சொல்வார்கள். சனிப்பெயர்ச்சியையொட்டி இந்தச் சக்கரத்தை வழிபடுவோர்க்கு சனிதோஷ நிவர்த்தியும் செல்வச் செழிப்பும் ஆயுள் பலமும் ஏற்படும்.