Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
மனம் - உடல் - உயிர்ப்பு மனம் - உடல் - உயிர்ப்பு சர சூத்திரம்
முதல் பக்கம் » யோக தீபம்
பிராண யோகா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2015
16:32

பிராணாயாமம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்பøரிள் நிறைய இருப்பினும் அவை அனைத்தையும் கற்றுக்கொண்ட பின் அல்லது புரிந்து  கொண்டபின்தான் பிராணாயாமப் பயிற்சி செய்ய வேண்டும் என்ற விதியினை எவரும் சொல்லவில்லை என்றே தோன்றுகிறது.

ஏனென்றால் எண்ணிலடங்காப் பிராணாயாம முறைகள் மற்றும் அதன் சாரம் பிற உத்திகளோடு ஒன்றுபடுத்தியோ அல்லது வேறுபடுத்தியோ பார்ப் பதற்கும் கூட ஏதாகிலும் ஒன்றையாவது பின்பற்றி கற்றபின்பே மற்றவைகளைப் பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும். எந்தப் பிராணாயாமம் எந்த  அடிப்படைக்குள் வருகிறது. எந்த முறை சாதகர்களுக்குச் சிறந்தது என்பதை விட, எது ஏற்றது எனவும் அவரவர்கள் நிலைக்கு ஏற்ப குருவின்  தீர்மானமே சிறந்ததாகும் என பல சித்த புருஷர்கள் ஒன்று போலக்கூறுவதை அறியலாம்.

ஜாதகத்தில் கோள் நிலைகள் சாதகனின் பிறப்புக் காலத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் இருப்பது போலவும் கர்ப்பகாலம் நீக்கி வரும்  திசைகளில் காலக் கணக்கு போலவும் ஒவ்வொரு சாதகனுடைய பல்வேறு பிறவிகளில் கற்றது போக மற்றதைத் தொடர்வது அல்லது எதை எதிலி ருந்து தொடர்வது என்பதையும் குருவால் தீர்மானிக்கப் படுவதாகும்.

திறமையான சாதகர்கள் கற்றுக்கொள்ளும் போதே தனக்குரிய வழிமுறைகளை காலப்போக்கில் உணர்ந்து கொள்வான். அவ்வமயம் அவனுக்குப்  பலப்பல உண்மைகள் புரியத்துவங்கும்.

பிராணாயாமம் என்பது ஒரு வெறும் மூச்சுப்பயிற்சி மட்டுமே என்று பலரும் நினைத்துக் கொண்டிருப்பது தவறாகும். இயல்பான சுவாசத்திலிருந்து  அது வேறுபடுகிறது என்பதோடு வேறுபடுத்தப்படுகிறது ஒழுங்குபடுத்தப்படுகிறது. மேம்படுத்தப்படுகிறது. சக்தியூட்டப்படுகிறது. மேலும் கால  நிர்ணயம் மற்றும் அவை ஒரு கணிதத்திற்கு உட்படுகிறது என்றெல்லாம் கூறலாம்.

ஓடுதல், குதித்தல், தாண்டுதல், நீந்துதல், பளு தூக்குதல், அதிக நிறை உள்ளவற்றை நகர்த்துதல் நீண்ட நேரம் களைப்படையாமல் பணிபுரிதல் ÷ பான்றவற்றை எந்தவிதப் பயிற்சியும் இல்லாத சாதாரண ஒரு மனிதனை விட யோகப்பயிற்சியினை பெற்ற ஒருவரின் மேற்கண்ட செயல்பாடுகள்  மிகச்சுலபமாகவும் விரைவாகவும் அதிசயத் தக்க வகையில் செய்யக்கூடியதாகவும் இருக்கும்.

உதாரணமாக பயிற்சி பெற்ற ஒரு சர்க்கஸ்காரன் (வித்தைக்காரன்) செய்யும் சாகசங்களைப் பயிற்சியற்ற மற்ற ஒருவர் செய்ய இயலாது என்பதைப் போல இயல்பான மூச்சை பிராணாயாமத்தின் மூலம் வகைப்படுத்தப்படும் போது மனிதனின் உடல் ஆற்றல் மற்றும் உள்ள ஆற்றல் பல மடங்கு  பெருகுகிறது. எனவே பிராணாயாமம் என்பது ஆற்றல்களைப் பெருக்கும் ஒரு வித்தையும் ஆகும்.

இந்த வித்தையினை மூச்சுக்கலை, சரகலை, வாசிக்கலை, என பல பெயர்களை கொண்டதாகும். பிராணாயாமம் என்பதற்கு அடக்குதல் என்பது ஒரு  பொதுப்பெயர், பொதுச்சொல் ஆகும். சாதகாணீன் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருவதாகும்.

சற்குரு ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி பகன்ற பிராணனும் பிராணாயாமமும்

பிராணன்

மனிதன், தான் இயங்குவதற்கு இப்பிரபஞ்சத்திலிருந்தே சக்தியினை மூச்சாக இழுத்துக கொள்கிறான், அந்தச் சக்தி தான் பிராணண் எனக் கூறப் படுவதாகும். உயிரற்ற ஒருவனால் மூச்சை இழுத்து வெளிவிட முடியாது. எனவே, உயிர் என்பது வேறொன்றாகிறது. எனவே பிராணண் என்பதும்  உயிர் என்பதும் ஒன்றல்ல. வேறு வேறு என்பது புலனாகிறது.

பிராண இயக்கத்திற்குப் பிராண வாயு  தேவைப்படுகிறது. உடல் இயக்கத்திற்குப் பிராணனும், அப்பிராணனுக்கு பிராணவாயுவும், என இம்மூன்றும்  சேர்ந்து தொழிற்படுவதே மனித உடலியக்கமாகும். இது எல்லா உயிர்களுக்கும் பொதுவானதாகும்.

உயிர்

உயிர் என்பது பற்றி விஞ்ஞானம் இதுவரை ஒரு சரியான முடிவுக்கு வரவில்லை அல்லது வரமுடியவில்லை.

உடல் இயங்கும் வரை உயிர் இருப்பதாவும், அது இயக்கமற்று நின்று போனவுடன் உயிர் போய்விட்டதாகவும் கூறுகின்றனர். அதை மரணம் என்று  கூறும் முன்பாக, அம்மரணத்தை நிகழாதிருக்கச் செய்யமுடியவில்லை.

உயிரைத் தனியாக அடையாளம் கண்டுவிட்டால், உடலில் அது எங்கிருக்கிறது என முடிவு செய்துவிட்டால் அது வெளிப்போகாமல் தடுத்திடலாம்  அல்லவா?

உடலுள்ளுறுப்புகள் செயல்திறமை குறைபாட்டில் அல்லது செயல்திறன் முற்றும் கோளாறுடையவர்கள் இறக்கும் நிலைக்குப்போய் பிழைத்து  விடுவதும் மிகச்சிறிய கோளாறு காரணமாக இறப்பதும் ஏன்?

மரணத்தை கிளினிக்கல் டெத், பிரைன்டெத் என்று கூறுகிறது விஞ்ஞானம்

உடல்

ஒரு சிசு கற்பத்தில் தோன்றியது முதல் இயல்பான வளர்ச்சிக்குப்பின் வயிற்றினின்றும் வெளிவரும் வரை அச்சிசு வேறு ஒரு உயிரைச் சார்ந்தே  வளர்கிறது. வெளிவந்த பின் சுவாசிக்கத்தொடங்கியது முதல் தன் உடல் வளர்ச்சிக்கு வித்திடுகிறது எனலாம்.

அதன் உடல் வளர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக நடைபெறுகிறது., அதற்கு வளர்சிதை மாற்றப்பண்புகளின் இயக்க இயல்பும் அடிப்படையாகிறது.  இந்த மாற்றப்பண்புகளுக்கு உணவும் காற்றும் தொடர்ந்து தேவைப்படுகிறது.

இவ்வுடல் வளர உயிரின் பங்கு என்ன?  உயிருக்குப் பரிமாணம் உண்டா? விஞ்ஞானத்தில்  இதற்கு சரியான பதிலில்லை. வளர்ச்சி ஒரு இயற்கை  நியதி என்று மட்டும் தற்கால அறிவியல் கூறுகிறது.

பிராணண்

காற்று (வாய்வு-ஆக்சிஜன்) என்ற ஒரு குதிரையின் மீது சவாரி செய்து கொண்டிருப்பதே பிராணனாகும். இப்பிரபஞ்ச உயிர்கள். அசையும் அணுப் பொருட்கள் என அனைத்து உயிரிகளுக்கும் இன்றியமையாத்தேவை காற்று Oதுதூஞ்ஞுண ஆகும்.

இக்காற்று. உயிரிகளுக்கு தக்கவாறு எடுத்துக் கொள்ளும் அளவு மாற்றம் இருக்கலாம், ஆனால் அது இன்றி பிராணண் செயல்பட முடியாது. உயிரை  ஜீவன் என்று கூறப்புகுவோமெனில், பிராணண் ஜீவசக்தி என்று கூறுதல் சரியாகும்.

மனிதனில் பிராணண்

புலன் உணர்வுகள் தூண்டப்படுவதற்கும், அதற்கேற்றபடி செயல்படவைப்பது பிராணனே. அறிவு, புத்தி, சித்தம், மனம், உடலனுபவம் அனைத்தும்  பிராணண் இயங்குவதாலயே இயக்கம்பெறுகிறது.உணரப்படுகிறது.

கோள்களில் பிராணண்

பிரபஞ்சத்தில் எண்ணற்ற கோள்களின் இந்த இயக்கத்திற்கும் காற்று, மழை, மின்னல், இடியோசை என அத்தனை இயற்கையின் இயக்க  நிகழ்வுகளுக்குள்ளும் பிராணணின் செயல்பாடு. அல்லது பிராணச்சலனமே காரணமாகும்.

பிரபஞ்சத்தோற்றத்தில் பிராணண்

ஏதுமற்ற ஒன்றிலிருந்து எதுவும் தோன்ற முடியாது. எத்தோற்றத்திற்கும் ஒரு (முன்) இருப்பு இருந்ததாலயே தோற்றம் நிகழ்ந்தது. நாம் குறிப்பிடும்  முக்கிய கோள்கள். மில்க்கிவேஸ், கேலக்ஸி அனைத்தும் உருவாகும் முன்பு காண முடியாத அணுப்பிரமாணமாக, பரமாணுக்கூறாக இருந்தது  என்கிறது வேதம்.

இறைவனின் சித்தத்தால் அணுக்கள் அத்தனையும் உயிர்ப்பெற்று பிராண சக்தியினை வெளிப்படுத்தத் துவங்கியது. அணுச்சலனமும், அணுக்கூட்டச்  சேர்க்கை யால், பிரபஞ்சத்தில் (வெட்டவெளியில்) திடப்பொருட்களும், அத்திடப் பொருட்களின் திரட்சியின் காரணமாக வெடிப்புகளும்,  அவ்வெடிப்பின் பிரிவுகளே கோள்கள் எனவும், அவ்வெடிப்பின்போது ஏற்பட்ட ஒளி, வெப்பம், தொடர்சலனம், ஈர்ப்பு போன்ற பல நிகழ்வுகளை  அதனுள்ளிருந்து, நிகழ்வுறச்செய்ததும், என அனைத்துமாய் இருப்பது பிராணணே.

பிராணாயாமம்

பிராணண் செயல்படப் பிராண வாயு துணை செய்கிறதென முன்பார்த்தோம். மனித உயிரிகள் அவ் வாயுவினை பிரபஞ்சத்திலிருந்தே (காஸ்மிக்)   பெறுவதால் பிரபஞ்சத்திற்கு நாம் கட்டுப்பட்டவர்களாகிறோம். அதே போல் அப்பிரபஞ்சத்தையும் நாம் கட்டுப்படுத்த முடியும் என்கிறது யே õகக்கலை.

மூச்சு விடுவதற்கும், மூச்சினை உள்ளிழுக்கவும் பிராணணே அடிப்படையாய் இருப்பதால். மூச்சுவிடுதல் (சுவாச மாற்றங்களை) பலப்பல  கணக்குகளின்படி நெறிப் படுத்துதலும். கட்டுப்படுத்தலுமே பிராணாயாமம் எனப்படும்.

மனிதன் குண இயல்புகளும் கூட மூச்சை நெறிப் படுத்துதல் மூலம் கட்டுப்படுத்துகிறது என்பதை யோகிகள் கண்டறிந்து சொன்னவைகளை யோக  மதம் அல்லது யோக வேதம் என்று கூறுவர்.

கோபம், துக்கம், மகிழ்வு, போன்ற எண்ண வேறுபாடுகளின் போது மூச்சு மாறுகிறது. இயல்பான மூச்சினின்றும் வித்தியாசப்படுகிறது என்பதைக்  கண்டு. அதே முறையில் மூச்சை (சுவாசத்தை) மாற்றி எண்ணங்களைச் சமனப்படுத்தவும் கூடும்.

மனமகிழ்வு, நிம்மதி  போன்ற மன ஆரோக்கியத்தை மன ஆற்றலைப் பெருக்கிக்கொள்ளும் பல்வகையான பிராணாயாம முறைகளை யோகம்  கூறுகிறது, யோக மார்க்கம் என்ற யோக வழியின் தந்தை ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் அட்டாங்க யோகமே உலகிற் சிறந்த யோக சாஸ்திரமாக விள ங்குகிறது.

மனிதச்செயல்பாடுகளால் மாண்புபெறும் வழிகளை நான்கு நிலைகளில் எய்தலாம் எனப்பெரியோர் கூறுவர்.

1) சரியை 2) கிரியை  3) ஞானம் 4) யோகம். இவ்வழிகளில் மிகச்சிறந்ததாக யோகமே குறிப்பிடப் படுகிறது

1) சரியை - வயது வரும்போது ஒவ்வொரு மனிதனும் வினையாற்றத் தகுதி பெறுகிறறான். அவ்விதமே அவன் தனக்காகச்செய்யும் காரியங்கள்  சரியை எனப்படுகிறது.

2) கிரியை - தனக்காக மட்டுமல்லாது பிறருக்காகவும், இவ்வுலகத்திற்காகவும் பயன்படத்தக்க வகையில் வினையாற்றுவதே கிரியை யாகிறது.

3) ஞானம்- நற்கிரியைகளைச் செய்து நற்பேறு பெற்றிடும் நடுநிலையாள்கிறவர்கள் ஞானம் எய்துகின்றார் கள்.

4) யோகம் - இதற்கும் மேலாகத் தன்னையும் தன்பிறவியையும் நன்குணர்ந்திடவும் இறைவனோடு தம்மை இணைத்துக்கொள்ளும் மேன்மைப் படுத்திய உணர்வு ஆற்றலை, மன ஆற்றலை வளர்த்து வினையாற்றுவது யோகமாகிறது, இந்த யோக நெறியின் முதல்படியே பிராணாயாம (பிராண  வேள்வி) மாகும்

இயல்பான மூச்சினை பிராகிருத  வழியெனவும் முறையான மூச்சுவிடுவதை வைகருதம் எனவும் கூறுவர். மூச்சினால் பிராணன் இயக்கப்படுகிறது.  தூலமான மனம் உடல் ஆகிறது. நுட்பமான உடல் மனம் என்றாகிறது. மனமானது அடங்காத போது உடல் துன்பம் மொத்த வாழ்க்கையே துன்பமய மாகும் நிலைக்கு ஆளாகுகிறது.

பிராணனை அடக்கும்போது மனம் அடங்குகிறது. அதனால் வாழ்வு சிறக்கிறது. மனதை, புலன்களைக் கட்டுப்படுத்த பிராணாயாமம் முக்கியமாகிறது.  பசி, தாகம், மூச்சு, உடல் இயக்கம் இந்த நான்கும் பிராணனால் நடத்தபடுபவையே.

பிராணன் குறையும் போது இந்த நான்கு செயல்களாலும் உடல் துன்பம், உள்ளத்துன்பம், ஏற்படுகிறது.

உணவில், நீரில், காற்றில், பிராணன் உலவுகிறது.

தாவரம், விலங்குகள், நீர்வாழ்வன, பறப்பன போன்றவைகள் நமக்கு பிராணனைத்தரும் உணவாகின்றன. அவ்விதமே தாவரம், விலங்குகள், நீ ர்வாழ்வன, பறப்பன ஆகியவைகளுக்கும் பிராணனைத் தரும் உணவு தேவையாகிறது.

இதையே பரஸ்பரம் ஒன்றிற்கு ஒன்றின் பிராண வேள்வியில் ஆநிஹதிகள் ஆகின்றன. (அளிக்கப்படும் உணவுகள்). எனவே இந்த பிராண ÷ வள்விக்கு மூச்சு ஒரு அடிப்படை ஆகிறது. மனிதன் மற்றும் ஏனைய அனைத்து உயிரிகளும் ஒவ்வொரு வகையில் சுவாசிக்கின்றன. எனினும்  மனிதர்களால் மட்டுமே மூச்சினை ஒழுங்குப்படுத்தவும், கட்டுபடுத்திக் கொள்ளவும் இயலுவதாக இருக்கிறது.

பூரகம், கும்பகம், ரேசகம், தம்பனம்

மூச்சு உள் இழுத்தல், உள்நிறுத்துதல், வெளி விடுதல், இந்த மூன்று வகையிலும் உள் நிறுத்துதல் என்பது  பிராணாயாம நெறிகளில் தலைமைச்செயல்  என கருதப்படுகிறது. வெளிப்பிராண வாயுவை  பிராணனுக்கு உணவளிக்கும் வகையில் பயன்படுத்துவதற்கு உள் இழுத்தல் பூரகம், உள் வந்தடைந்த   பிராண வாயு என்ற உணவைப் பரிமாறும் வகையில் கும்பகம் பயனாகிறது.

பயன்படுத்திய உணவில் பிராணன் ஏற்றுக் கொண்டது போக மீதம் உள்ள (உணவை) பிராண வாயு கழிவுகளை வெளியேற்றுதல் ரேசகமாகும்.

பிராணனுக்கு அதிகப் பலன் அளிக்கும் செயலே கும்பகம் ஆகும்.

பிராண வாயுவை பிராணனில் வெகுவாகக் கலக்கச் செய்வதே இதன் நோக்கமாகும். இந்தச் செயலுக்கு நிறுத்தப்படும் கொள்ளளவு, நிறுத்தப்படும்  கால அளவு  இதனைப் பொறுத்தே பிராணாயாம சித்தி அல்லது சுவாச சித்தி ஏற்படுகிறது.

இடம் வலம் என மூக்குத்துளைகளில் சுவாசத்தை மாறி மாறி உள்ளும் வெளியும்  இயங்கச்  செய்வதை நாடி சுத்தி எனக் கூறுவோம். இவ்வாறே பி ராண வாயு இயக்கத்தை தந்திரம் என பிராணாயாமத்தில் யோகிகள் கூறுவர்.

பிராணாயாமத்தின் பலன்கள்

பிராணாயாமத்தால் மூவகைப் பலன்களைப் பெறுவது சாத்தியம் என சித்தர் நெறிகள் செப்புகின்றன.

உடல் பலன்கள்: நீண்ட வாக்கியங்களைத் தொடர்ந்து நிறுத்தம் இன்றி நீண்ட நேரம் பேசுதல். அதுபோல் பாடுதல், பளு மிகுந்த பொருட்களை மூ ச்சடக்கித் தூக்குதல் பல்வேறு பணிகள் மற்றும் விளையாட்டுக்கள் போன்றவற்றில் ஈடுபட உடலுக்கு அதிக பலம் தேவைப்படும்போது மூச்சினை  அடக்கியும் அதிக மூச்சினை உள்ளிழுத்து வெளிவிடுதலும் முக்கிய காரணிகள் ஆகின்றன.

உள்ளப்பலன்கள்: சகிப்புத்தன்மை (பொறுமை), சமாளித்தல், சுற்றுப்புற துன்பங்களை சகித்தல், உடல் வேதனை (வலி) தாங்குதல், வாழ்க்கைப் ÷ பாரட்டங்களைத் தாங்கி நிற்றல், கவலை, கலக்கம், இவைகள் அனைத்திலும் பாதிப்பின்றி வெற்றியடைய, மனபலம் பெற, மனமடங்க, பிராணனை  அடக்குவதன் மூலம் இப்பலன்கள் கிட்டுவதாகின்றது.

ஆன்மீகப் பலன்கள்: நல்லியல்புகள், நற்குணங்கள், நற்செயல்கள் கூடுவது, உலகியல் வாழ்க்கை என்பது யாதென உணர்வது. நிலைப்பு, நிலைய õமை எதுவெனத் தேடுதல், இறையியல் அறிந்து இறையுடன் கூடுவது. மனிதனாக வாழும் போதே மனிதரில் தெய்வமாவது. மனிதத்திற்கும் ஏனைய  உயிரிகளுக்கும் உள்ள வேறுபாடுகளைக் கண்டுபிடித்து எந்த விதத்தில் மனிதம் உயர்ந்தது எனப் புரிந்து கொள்ளுதல்.

பிராணாயாம வகைகள்
அந்தர்ப் பிராணாயாமம்
அபூர்வப் பிராணாயாமம்
அதிதூலப் பிராணாயாமம்
ஆபத்யப் பிராணாயாமம்
ஆயுர்ப் பிராணாயாமம்
ஆத்யமப் பிராணாயாமம்
குருப் பிராணாயாமம்
சம்பூதப் பிராணாயாமம்
சம விருத்த பிராணாயாமம்
சதுஸ்ரப் பிராணாயாமம்
சுரப் பிராணாயாமம்
சுகப் பிராணாயாமம்
சுபப் பிராணாயாமம்
சூட்சமப் பிராணாயாமம்
தாபத்யப் பிராணாயாமம்
பூர்வப் பிராணாயாமம்
யோகப் பிராணாயாமம்
கேசரிப் பிராணாயாமம்
குருப் பிராணாயாமம்
மகத்ப் பிராணாயாமம்
மத்யமப் பிராணாயாமம்
வாசுகிப் பிராணாயாமம்

இன்னும் இதைப்போல பிராணாயாம வகைகளில் கும்பக வேறுபாட்டு நெறிகளும் பந்தம், முத்திரை, கலப்புடன் நீண்டு விரிந்த வித்தையாகிறது பி ரணாயாமம்.

பிராணாயாம மண்டலங்கள்
பிராணாயமத்தின் உருவம் பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவைகள் 16 ஆகும்.
1) அண்ட பிண்ட மண்டலம்
2) பிராண மண்டலம்
3) முக மண்டலம்
4) சுவாச கோச மண்டலம் (சுவாச, நிசுவாச) சுவாசபேதம்
5) ரத்த மண்டலம்
6) நாடி மண்டலம்
7) சக்கர மண்டலம்
8) அஸ்தி மண்டலம்
9) காலதேச மண்டலம்
10) கியாதி மண்டலம்
11) பரமாணு மண்டலம்
12) பிரக்ஞா மண்டலம்
13) அணு பிரக்ஞா மண்டலம்
14) சூட்சம பிராப்தி மண்டலம்
15) நாத, ரூப, காந்தி மண்டலம்
16) பரபிரம்ம மண்டலம்

உயிரின் ஆதாரம் எனப்படும் பிராண வாயு (உயிர்காற்று) வாசியினைக் கொண்டு இடகலை, பிங்கலை, (இடம், வலம்) என மாற்றி, ஏற்றி இறக்கும்  பிராணாயமத்தின் பல்நிலை வித்தையின் செயல்பாடாகும்.

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்குங் குரியது வாமே   (திருமூலர்)

உள்ளிழுத்து, உள்ளடக்கி, வெளிவிட்டு, வெளித் தங்கி விளையாடும் விளையாட்டே சித்தர்களின் தலையாய பணியும் பொழுதுபோக்கும் ஆகும்.  பூரக, ரேசக, கும்பக, தம்பன  என்ற   நால்வழி சுவாசப்பணிகள் முறையே

மூச்சை உள்ளிழுத்தல்
மூச்சை உள் நிறுத்தல்
மூச்சைவெளிவிடல்
மீண்டும் மூச்சிழுக்கக் காத்திருத்தல்

எனவாறு இவைகளைக் கால நிர்ணயத்தின் படி, (மாத்திரை), செயல்படுத்துவதோடு தொடர்ந்த பயிற்சி செய்தல் மற்றும் ஒவ்வொரு சுவாசச் செய ல்களின் மூலம்  மனத்தொடுகை (மனத்தொடர்பு) நாதம், மந்திரம் என்ற (ஒலித்தொடர்பு) தேஜஸ், பிரபை என்ற (ஒளித்தொடர்பு) தேசம் என்ற  சுவாசப் பரவலின் நிற்கும் தூரம் அந்த துடரத் தொடர்பு (வெளி நீள் தொடர்பு) என்றவாறு பல்வகைப் பாடத் திட்டங்களை சித்தர்கள் உபதேசி த்துள்ளனர்.           
        
மனித உடலில் சங்கமித்த ஆன்மாவுடன் உறவு கொண்ட உயிரை (சீவனை) அண்டத்துடன் இணைக்கவும் அவ்விணைப்பின் நுட்பமிகு கரு விகளாகவும், களங்களாக வும், விளங்குபவையே, முன் சொன்ன 16  மண்டலங்கள் ஆகும்.

யாதொரு சுவாசப் பயன்பாட்டினையும் அதன் பிராணமயமாக்கல், வெவ்வேறுவித ஆற்றல்மிகு பலன்களைத் தருகின்றது புதிர்மிக்க இந்த கலையி னை ஆயுட்காலம் முழுதும் கற்றுக் கொண்டே இருக்கலாம். மனிதனின் பூரண ஆயுட்காலம் 120 வாழ்வாண்டு என்பர்.

இக்காலவரை இக்கலைக்கு ஒரு பொருட்டே அல்ல பொதுவாக சராசரி மனித ஆயுட்காலம் போதாதேன்பதே உண்மை. இதன் அடிப்படையில்  இக்கலையினாலே ஆயுட்காலத்தை நீட்டித்துக் கொள்ளவும் இயலும் என  இருடிகள் (ரிஷிகள்)  கூறியுள்ளனர்.

நாம் விடும் மூச்சு நுரையீரலின் இயக்கத்தை உண்டாக்கவில்லை. மாறாக நுரையீரல்களின் இயக்கமே மூச்சை உண்டு பண்ணுகிறது

நுரையீரலைப் பிராணனே இயக்குகிறது. பிராணன் நுரையீரலைச் செயல்படுத்தும் போது பிராணக் காற்று உள்ளிழுக்கபடுவதும் வெளிவிடுவதும்  நடைபெறுகின்றது.

நுரையீரல் என்ற கருவியினை இயக்கும் தசை, நரம்பு, ஆகியவைகளை நாம் கட்டுபடுத்த முடியுமானால் அதுவே நாம் பிராணனைக் கட்டுபடுத்துத லும் பிராணயாமம் செய்தலும் ஆகும்.

பிராணனும், பிராணக் காற்றும் ஒன்றை ஒன்று தழுவியவையே. இதில் இருந்தே இரண்டும் வெவ்வேறானது என அறியலாம்.

மூச்சு இன்றி உயிர் நிலைக்காது என்றால் யோகிகள் மூச்சு விடாமல் பல காலம் வாழ்ந்தும், தன் உடலை முழுதும் நீருக்குள்ளோ, மண்ணுக்குள்ளோ,  புதைத்துக் கொண்டு மூச்சற்று இருந்தபோது உயிரோடு இருந்திருக்கிறார்கள் எனின், பிராணனும் மூச்சும் வெவ்வேறானது என்பது உறுதியாகிறது.

பிராணாயாமம் என்பது பின் எதுவாக இருக்க முடியும்?

பின் எதற்காக அதைச் செய்தல் வேண்டும் யோகத்திற்கு அது எந்த வகையில் பயன்படுகிறது என்பதைப் பின்னும் பார்ப்போம்.

பிராணாயாம உத்தி

நரம்புகளில் செல்லும் சக்திப் பெருக்கினை புதுப்பாதையில் செலுத்த முயற்சி செய்வதும் பிராணாயாம உத்தி ஆகும்.

அவற்றை நரம்புகளில் பயணிக்கும் சக்திகள் எவ்விதமாக இயக்கமுறுகிறது எவ்விதமாக நாம் உணர்வது என்பதைத் துல்லியமாக கணிப்பதும்  அவ்வாற்றலை ஒரு நிலைநோக்கோடு இணிணஞிஞுணtணூச்tடிணிண) எவ்வாறு நம் கட்டுபாட்டிற் குள் கொண்டு வருவது என்பது யோகப்  பயிற்சியில் கண்டுகொள்ளக்கூடிய உண்மையாகும்.

அவ்விதமே நம் கட்டுபாட்டிற்குள் வசமாகிய நரம்பு உணர்வு சக்திகளை நமது உடலிலும், உடலின் வெளியிலும் நாம் விரும்பியபடி செலுத்தும்  முறை யோகத்தின் பிரதான அங்கமாகும்

மேற்கூறிய நரம்புகளின் வழியே பயணிக்கும் வழித் தடத்தினை (ராஜ பாட்டை) நீண்ட முதுகுந்தண்டின் மையத் துளையே என ரிஷிகள்  அதைக்கண்டு போதிக்கின்றனர். அத்துளையின் மூலம் சுவாச நிசுவாசத்தின் மூலம் தூண்டப் பெற்ற சுழுமுனை நாடி மூலம் அபூர்வ சக்தி உடலிலும்,  மனத்திலும் உடல் உணர்வைத் தாண்டிய வெளி என்ற ஆகாசத்தையும் தொடர்புப் படுத்தும் சக்தி மையங்களே ஆதாரங்கள் என்ற மடை  வாசல்களாலும் ஆறு ஆதார மையங்களில் உணர்வினைக் கலப்பதும் அவ்விடங்களில் நின்றும் அங்கிருந்தபடி அண்டம், பிண்டம் (உடல், உலகு)  இரண்டும் நம்மைத் தோற்றுவித்து தொடர்புறச்செய்யும் தந்திரமே யோகக் கலை.

மந்திரம், தந்திரம், எந்திரம் என முறையே மனதின் உள்ளாக பிராணனில் கலந்த ஆதார சக்கரங்களை சங்கமித்த ஊடகம் வாசிக்கலை.

இத்திறவுகோல் மூலம் இருவித இயக்கங்களை திறந்து பார்க்கவியலும் பௌதீக இயக்கம், பிராண இயக்கம் என இவ்விரண்டுமே பிரபஞ்ச ÷ தாற்றுவாய் ஆகும்.

பௌதீக இயக்கம் என்பது ஆகாசம், உருவாவதற்கு காரணியான, அணுக்கள் இயக்கமற்று, (சலனமற்று) நிச்சலன அமைதியாக இருந்த போது,  பௌதீக நிலையாகும்.

பிராண இயக்கம் என்பது நிச்சலனமாய் இருந்த (ஒடுக்கத்தில் இருந்த) அணுப்பரிமாண உயிர் இயக்கங்களை மீண்டும் சலனப் படுத்தி உருவமற்று  இருந்த பரமாணுக்களைக் கூட்டிப் பொருள் வடிவாய் ஆக்கியதும் பிராண இயக்கமே.

பிராணனும் தச வாயுக்களும்
 
உயிர்க்காற்று என்பது பிராணன்.
மலக்காற்று என்பது  அபானன்.

(மாணவர்களை நோக்கி) தொழிற்காற்று என்ன என்பதை தான் நீங்கள் கேட்டீர்கள், தொழிற்காற்று என்றால் தொழில்படுவது அல்லது செயல்படுவது.  எல்லாச் செயல்களுக்கும். அதாவது நீங்கள் நடப்பதானாலும். பேசுவதானாலும் எந்த ஒரு காரியத்தைச் செய்வதானாலும். செயல்படுவது.  தொழில்படுவது. இது நீங்களாக மட்டுமல்லாமல் உள்ளே இருக்கின்ற இயக்கங்களும் தொழிற்படுகிறது. உடலின் உள்ளே இதயம் இயங்குவது, சுர ப்பிகள் சுரக்கின்ற தொழிலைச் செய்வது, ஜீரணிப்பது. இரத்த ஓட்டம். இதயத்துடிப்பு இவையெல்லாம் தொழில்கள் தான். அவற்றிற்கெல்லாம் அடி ப்படையானது வியானன் என்ற காற்று. ஒலிக்காற்று உதானன், இதையெல்லாம் நாம் பார்க்க முடியாது என்ற போதிலும் உணர்ந்திருக்கச் சான்று  உள்ளது, உதாரணமாக குடலிரைச்சல் என்றெல்லாம் சொல்வார்கள். காற்று உள்பகுதியின் வழியாக நுழைந்து வரும்போது அது விசித்திரமான சப்த ங்களை உண்டாக்குகிறது,

ஆக உதானன் என்பது ஒலிக்காற்றாக உள்ளது

சமானன் என்பது நிரவு, பரவுக்காற்று, சமானன் என்பது எல்லாவற்றையும் சமப்படுத்துவது, மேலேயோ அல்லது கீழேயோ என்ற பாகுபாடில்லாமல்  அனைத்தையும் சமப்படுத்துவது,

வாசியில் இடகலை, பிங்கலை என்று நாம் எடுத்துக்கொள்கிற போது, சில நேரம் இடகலையில் மூச்சு ஒடுகிறபோது வலதில் காற்று குறைவாக இரு க்கும், வலது கலையில் மூச்சு ஒடுகிறபோது இடதில் காற்று குறைவாக இருக்கும், அதை நாம் சமப்படுத்துவோம் அல்லவா, அதைப்போல.

சமானன் என்பது உடலின் வெப்பநிலையினை சமப்படுத்துவது. இரத்த அழுத்தத்தைச் சமப்படுத்துவது. உங்களுடைய நினைவலைகள்  முழுவதையும் சமப்படுத்து வது. முதலில் நீங்கள் நிற்பதையே சமப்படுத்துவது, உடலில் சமப்படுத்துவது என்பதில்லாமல் போகின்ற போது அதீத  வளர்ச்சி மற்றும் நோய் என்பது உண்டாகிறது. ஆக ஒட்டுமொத்தத்திலும் அனைத்தையும் சமப்படுத்துவது சமானன் என்ற காற்று.

இங்கே ஒரு அதிசயத்தைப் பாருங்கள்,

நாகன் என்ற காற்று உள்ளது, அது தும்மல் காற்றாக உள்ளது, சில அணுக்கள் உடம்பின் உள்ளே சென்றால் நோயினை உண்டாக்கலாம. எனவே  தும்மலை ஏற்படுத்தி மிகவும் வேகமாக வெளியேற்றுகிற காற்று நாகன் என்ற காற்று.

மூக்கில் ஏதாவது தகாதது ஒன்று நுழைந்து விட்டால் உடனடியாக மூளைக்கு தகவல் தெரிந்து தும்மலின் மூலமாக உடனடியாக அது வெளியேற்றப் படுகிறது.

ஒரு ஆடு தும்முவதற்கும். மாடு தும்முவதற்கும். மனிதன் தும்முவதற்கும் வெளிப்பாடுகளில் பயங்கர வித்தியாசம் உள்ளது, மனிதர்களில் மிகவும்  அதிக சப்தங்களில் தும்முபவர்கள் எல்லாம் உள்ளனர்,

பிராணண். அபானன், வியானன், உதானன், சமானன் என்பது 5 முக்கியமான வாயுக்கள், மற்ற 5 வாயுக்கள் என்பவை உப வாயுக்கள், அதில்  ஒன்றுதான் தும்மல் தரக்கூடிய நாகன்.

அடுத்தபடியாக விழிக்காற்று. அதற்குக் கூர்மன் என்று பெயர். கூர்மையாகப் பார்ப்பதனால் அதற்குக் கூர்மன் என்ற பெயர் வந்திருக்கலாம். விழியில்  நீர் உள்ளது, அந்த பாப்பா என்று சொல்லக்கூடிய கண்ணிண் மணித்திரை சுருங்கி விரிவதற்கும், பார்வை செயல்படுவதற்கும, உறுதுணையான காற்று  கூர்மன் என்ற காற்றாகும். இந்தக் காற்று சரியாகச் செயல்படாதபோதுதான்  பார்வைக்குறைவு மற்றும் பார்வை  இழப்பு என்பது ஏற்படுகிறது.

கூர்மன் என்ன செய்கிறான் என்றால், பார்வையில் எத்தனையோ பார்வைகள் உள்ளன. கருணையான பார்வை, கனிவான பார்வை, கோபமான  பார்வை, வெறுப்புப் பார்வை என்று பார்க்கும் பார்வையிலே நிறைய வேறுபாடுகள் உள்ளன, இவற்றையெல்லாம் அவர்தான் செய்கிறார் போலும்,  (ஒரே சிரிப்பு)

அடுத்ததாக தும்மல் மாதிரி நமக்கு இன்னும் ஓர் சிறந்த கெட்ட குணம் உள்ளது அது கொட்டாவி. கொட்டாவி எப்போது வருகிறது என்றால் உடலி ற்குத் தேவையான பிராண வாயு குறைகின்ற போது இந்தக் கிருகரன் என்ற கொட்டாவி வந்து பிராண வாயு தேவையினைச் சரிப்படுத்துகிறான்.

பிராண வாயு குறைகின்ற போது கொட்டாவி வருகின்றது. கொட்டாவி வருவதை நாம் உறக்கத்திற்கான அறிகுறி என்று எடுத்துக்கொள்கிறோம்,  உடம்பிற்கு தேவையான மூச்சுக்காற்று குறைகிறபோது கொட்டாவி வருகிறது,

ஒருவருக்கு அடிக்கடி கொட்டாவி வருகின்றது என்றால் அவரை கிருகரன் ஆள்கிறான் என்று தான் பொருள், அவருக்கு ஆக்ஸிஜன் குறைவாக  பெறப்படுகிறது என்பதே உண்மையான காரணமாகும்,

கண்ணுக்குக் கூர்மை என்பதை போல இமையின் செயல்பாட்டிற்கு ஒரு வாயு உள்ளது. அந்த வாயுவின் பெயர் தேவதத்தன்.மனிதன்  விழித்துக்கொண்டிருக்கும்போது எதையும் எதிர்பாராது செயல்பட்டுக்கொண்டே இருப்பான் இந்த தேவதத்தன். மனிதன் உறங்கும்போதுதான் இந்த  தேவதத்தனுக்கு வேலையில்லை. அதிலும் சிலர் இருக்கிறார்கள். கண்ணை திறந்து வைத்துக்கொண்டே உறங்குவார்கள், அவர்களுக்கு இமை என்பது  இமைக்காது.

நமக்கே தெரியாமல் கண்ணிற்கு அருகில் ஏதாவது தூசியோ. வேறு ஏதோ அருகில் வந்துவிட்டால் உடனடியாக இமை மூடி விடும், ஒவ்வொரு 6  வினாடிக்கும் ஒரு முறை இமையானது இமைக்கின்றச் செயலினை செய்து கொண்டே இருக்கிறது.

இந்த இமையானது கண்ணிற்கு ஏதும் ஏற்பட்டு விடாதபடி பாதுகாக்கிறது. கண்ணிற்கு உறுத்தலோ அல்லது வேறு ஏதோ பட்டுவிடாதபடி செய்கிறது.  இந்த தேவதத்தன் என்ற வாயு கண்ணிற்கு மிகப்பெரிய பாதுகாவலனாக விளங்குகிறது,

மனிதர்களைப்போல அல்லாமல் தன் பணியினை இந்த வாயுக்கள் சரியாக இடைவிடாது செய்கின்றன. ஆனால் சில நேரங்களில் இந்த  வாயுவினையும் மனிதன் தடுமாற வைத்துவிடுகிறான். அவன் மலங்க மலங்க விழித்தான் என்று கூறுவார்கள். எப்போது இப்படியெல்லாம்  பார்த்தான் என்றால் சில முக்கியமான நேரங்களில் (அவை முழுவதும் சிரிப்பு).

அடுத்ததாக தனஞ்செயன்.

தனஞ்செயனிற்கு எப்போது அதிகமான வேலை என்று கேட்டால் கிட்டத்தட்ட நம்முடைய இரத்த ஓட்டத்தில் ஏதேனும் பெரிய கோளாறு வருகின்ற  போதோ அல்லது இரத்தத்திலே இரத்த அணுக்கள் குறைகிறபோதோ அல்லது இரத்த ஓட்டமே நிற்கிற போதோ இந்தத் தனஞ்செயன் தன்னுடைய  பணியினை மேற்கொள்ளத் துவங்குகின்றான்.

இன்னும் சில பணிகள் அவருக்கு இருக்கிறது. கர்ப்பத்திலே உள்ள குழந்தையினைக் கூட திருப்பி விடுகிறார் என்று சொல்வார்கள். கர்ப்பத்திலே  குழந்தை பிறப்பதற்காக தனஞ்செயன் வாயு செயல்படுகின்றது என்பார்கள். ஆனால் பின் வருவதை ஒப்பிடும்போது இது மிகவும் சிறிய பணி தான்.

இந்த வாயு மனிதன் உயிரோடு இருப்பதை விட இறந்த பிறகுதான் அவனுக்கு இந்த வாயுவின் பணி அதிகமாக உள்ளது.

உயிரோட்டம் இல்லாத போது உணர்வணுக்கள் வேலை செய்யாது. அவ்வாறு உணர்வு அணுக்கள் வேலை செய்யாத போது உடலில் மயிர்க்கால்கள்  வரை உள்ள மிகச்சிறியத் துவாரங்கள் எல்லாம் அடைபட்டு விடுகின்றன. அவை எல்லாம் அடைபட்டவுடன் வெளியில் இருந்து ஒளி புகாது.

இதனால் நேரம் ஆக ஆக உடலானது பெரியதாக வீங்கிக்கொண்டே வரும். அதிகமாக வீங்கினால் என்ன செய்யும். உடல் வெள்ளரிக்காய் பழுத்தது  போல ஆகி விடும்.

இறந்த பிறகு மனித உடலை வீங்கச்செய்யும் பணிதான் மிகப்பெரிய பணி. ஆக இவைகள் எல்லாம் வாயுக்கள் ஆக இருக்கின்றன. உயிருள்ளபோது  தனஞ்செயனைத் தவிர உடலில் இந்த ஏனைய 9 வாயுக்களும் தொழிற்பட்டுக்கொண்டே இருக்கின்றன, அவை எதற்காக தொழிற்படுகின்றன என்று  கூறினால் உடல் வளர்சிதை மாற்றச் செயல்பாட்டில் பல அணுக்கள் புதியதாகத் தோன்றியும். பழைய அணுக்கள் மறைவதும் என்ற செயல்பாடு  நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். அந்த அணுக்களின் இயக்கத்திற்கு. அதிர்விற்கு இந்த தச வாயுக்கள் உறுதுணையாக இருக்கின்றன. அவை  அணுச்சலனத்திற்கு உறுதுணையாகப் பணிபுரிகிறார்கள். இங்கு சலனம் என்றால் சப்தம். எனவே இந்தச் சுரவழியினைப் பார்க்கின்ற போது இந்த  வாயுவிற்கும் சுரவழிக்கும் நிறையத் தொடர்பு உள்ளது. ஆகவே நம்முடைய உடலில் ஒவ்வொரு பாகங்களிற்கும் எல்லா இயக்கங்களிற்கும்  அணுச்சலனம் என்பது மிகவும் அத்தியாவசியம்.

ஆனால் யோக நெறியிலே இவன் சுர வழியிலே மேன்மை பெறுகிறபோது என்ன ஆகிறது, என்ன விளைவு நடக்கின்றது என்று கேட்டால்  இவனுடைய துடிப்பே நின்று விடுகிறது. அப்போது உடம்பில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் தன்னுடைய பணியினைச் செய்வதில்லை. இரத்த  ஓட்டம் நின்று விடுகிறது. இதயம் துடிப்பதில்லை.  ஆனால் உயிர் இருக்கிறது. உடனே அங்கே தனஞ்செயன் என்ற வாயுவெல்லாம் வந்துவிட முடி யாது. ஏனென்றால் அக உணர்வுகளின் அடிப்படையில் இவன் அணுக்கள் கட்டுப்பட்டு நிற்கின்றன.

இந்த நிலையினை அடைந்த சாதகன் அந்தச் சமயம் தன் உயிரோட்டத்தையே நிறுத்தி வைத்திருக்கிறான், ஆனால் உயிரோடு இருக்கிறான், ஆக அப் படிபட்ட சூழலிலே இந்தச் சுர வழி எதற்குப் பயன்படுகின்றது என்று கேட்டால் இவனுக்கு சப்தமும். ஓளியும் இந்த இரண்டும் அவனுடைய  உணர்வின் மூலமாக இந்த நிலையிலும் அவனுக்கு உதவுகின்றன. இவனுக்கு எப்படி தெரிகிறது? உடல் செயலற்று நிற்கிற போது மூளையும் தன்  செயலினை நிறுத்திவிட்டது. வளர்சிதை மாற்றம் உட்பட அனைத்து செயல்களும் நின்று விட்டன. இருப்பினும் இவனுக்கு எப்படி உணர்வு இருக்கும்  என்றால், அந்த நேரத்தில் இவனுக்கு உயிர் உணர்வு பெற்று அந்த அக உணர்வின் மூலமாகப் பல நாதங்கள் கேட்கின்றன. பல நிறங்கள் இவனுக்குப்  புலப்படும். பல காட்சிகள் தெரியும். பிரபஞ்சம் முழுவதையும் இவன் நின்ற இடத்தில் இருந்து பார்க்க முடியும். அவ்வளவு ஆற்றல்களையும் இந்த  அக உணர்வு இவனுக்குக் கொடுக்கிறது.அவ்வாறே சுர வழி இவனுக்கு கை கொடுக்கிறது,

இவனது உடல் இயக்கங்கள் நின்று விட்ட போதிலும் அக உணர்வின் மூலமாக அந்தச் சுரவழி இவனில் வேலை செய்கிறது. ஆக அந்தச்சுரவழியால்  சுரத்தினைத்தொட்டு நிற்கின்ற போது அந்த ஆதி பரம்பொருளைப் பார்க்கின்ற, இயற்கையை சிந்திக்கின்ற அந்தச் சூழல் ஏற்படுகின்றது. அங்கே  நாதம் எழுகிறது. ஒளி தோன்றுகிறது.

நாதம், விந்து, கலை என்பார்கள். இங்கே கலைகள் நின்று விட்டன. வேறு கலைகள் தோன்றுகின்றன. அவற்றைப் பின்னால் பார்ப்போம். அந்த  கலைகள் தன்னுடைய பணியினைச் செய்யச்செய்ய இவன் அந்தக் கலைகளோடு அமுதுண்கிறான் என்றெல்லாம் சொல்லப் படுகின்றது.

இவன் அக உணர்விலே அந்த சுவையினைக் காண்கிறான். சுவையினைக் காண்பது என்பது யாது? அதுதான் மடை மாறுவது. சுவையினைக் காண்பது  என்பதை அமுதம் பருகுவது என்றெல்லாம் சொல்வார்கள்.

நாம் பார்த்தோம், கேட்டோம் என்றல்லாது அந்த அனுபவத்தை அடையாமல் அதன் சுவையினை உணர முடியாது என்பதே உண்மை. இதை அவரவர்  அனுபவத்தில் உணராமல் வெறுமனே கேட்பதால் பயன் ஒன்றுமில்லை.

யோகக்கலையினை யார் கற்றுக்கொள்கிறானோ. யார் முழுவதும் அறிந்துணர்ந்து கொண்டு உள்ளே புகுகிறானோ, பயிற்சியில் யார் இருக்கிறானோ  அவனால் மட்டுமே இதை உணர முடியும். அவனால் மட்டுமே தனக்குத்தானே உதவி செய்ய முடியும். வேறு யாராலும் யாருக்கும் உதவி செய்ய  முடியாது.

குருநாதர் என்பது வேறு விஷயம்.

இவன் ஆத்ம அனுபவத்திலே இருக்கின்ற போது அவர் உதவுகிறார் என்று சொன்னால் அந்த நிலையிலே அவனும், இவரும் ஒன்றாகி விட்டார்கள்  என்று தான் பொருள்

இந்த நிலையிலே சரியை, கிரியை, ஞானம், யோகம் என்று சொல்கிற போது அவரவர் முன்னேற்றத்திற்கு அவரவர் பயிற்சியால், முயற்சி என்பது  மிகவும் முக்கியம். அப்போதுதான் குருவின் வழிகாட்டுதல் என்பதைச் செய்ய முடியும்.

ஏனென்றால் அந்தப் பயிற்சியின் விளைவாகிய சுகத்தை அனுபவிப்பவர்கள் அவர்களே. எனவே அந்த முயற்சியினைக் குருவின் அருளோடு  அவன்தான் மேற்கொள்ள வேண்டும்.

சாதகனுக்கு இதுதான் முக்கியம். வேறு என்ன முக்கியம். இதில் அவன் வெற்றி கண்டுவிட்டால். உலகில் எந்த விஷயத்தையும் அவனால் சரி செய்ய  முடியும்.

பிராணனின் தரிசனம் (6 ஆதாரங்களில் வாயுக்களின் பயணம்)

ஏற்கனவே தர்சனம் என்று சொன்னால் ஒன்றினால் ஒன்றை அறிவது. ஒன்றினால் ஒன்றை அறிவிப்பது என்று ஏற்கனவே தர்சனத்திற்கு நான் பொருள்  சொல்லியிருக் கிறேன். பிராணன்; எதையெல்லாம் நமக்குக் காட்டுகிறது. பிராணனால் எவையெல்லாம் நமக்குத் தெரிய வருகிறது என்பது போன்ற  ஒரு சிறிய அட்டவணையில் நாம் பாடத்தைத் துவங்குவோம்.

இங்கே முக்கியமான வாயுக்களை பற்றியும் அவை எங்கெல்லாம் கேந்திரங்களாகக் கொண்டு பணிபுரிகின்றன என்பதைப் பற்றிய ஒரு விளக்கம்  அளிக்கிறேன்.

அபானன் என்ற வாயு ஸ்டமக், ஆர்ம்ஸ், பெரினீயம்

இவையெல்லாம் உங்களுக்கு ஓரளவு தெரியும். (வயிறு, புஜங்கள். வயிற்றினுடைய அடிப்பகுதி) இவையெல்லாம் அபானன் என்ற வாயு கட்டுப் படுத்துகிறது. அங்கே தொழிற்படுகிறது.

அதிலே அடுத்தபடியாக கூர்மன் என்கின்ற வாயு இதோடு இணைந்து பணிபுரிகின்றது. இதில் கூர்மன் என்கிற வாயு ஐ-லிப்ஸ் என்று ஆங்கிலத்தில்  சொல்லக்கூடிய கண் இமைகளை மட்டும் அது தனியாக எடுத்துக்கொள்கிறது.

அந்த அபானனுக்கு எது சக்கரம் என்று சொன்னால் மூலாதார சக்கரம். மூலாதார சக்கரமாக இருப்பதற்கு எலிமெண்ட் என்னவென்று கேட்டால்  அதற்கு பூமி என்று சொல்லாலாம்.

ஆக 6 ஆதாரங்களை இங்கே 5 ஆதாரங்களாகப் பிரித்திருக்கிறோம், ஏனென்றால் பஞ்ச பூதங்களுக்காக கூறுகின்றபோது ஒன்று, இரண்டு ஆதார ங்களில் வருகின்றது, அதைப் பின்னால் பார்ப்போம்.

இரண்டாவதாக வியானன் என்ற வாயு அது ஸ்வாதிஷ்டான சக்கரத்துடன் இணைந்துள்ளது மற்றும் உடல் முழுவதையும் வியாபித்துள்ளது,  ஸ்வாதிஷ்டானம் என்ற அந்த சக்கரம் உடல் முழுவதும் அந்த வியானனுடைய ஆற்றலால் பரவி நிற்கிறது. அதற்கு உப வாயுக்களாக பார்க்கிறபோது  தனஞ்செயன் என்ற வாயு அதிலே பணிபுரிகிறது, இந்த வாயு எலும்புகள், தசை, தோல், இரத்தம். நரம்புகள், நகம், தலைமயிர் போன்றவை.

இதனுடைய ஆட்சி மணிபூரகத்தினுடைய ஆட்சிப் பகுதியில் இருக்கிறது, அந்தக் கேந்திரத்தின் வலுவினால் இந்த வாயு செயல்படுகிறது, அந்த  ஆதாரத்தில் இருந்து இந்த பகுதிக்கு எல்லாக் கட்டளையும் சக்தியும் கிடைக்கப்பெறுகிறது.

அடுத்ததாக சமானன் என்று சொல்லக்கூடிய வாயு இருக்கும் அந்த தொப்புள் பகுதி. இது எவற்றையெல்லாம் கட்டுப்படுத்துகிறது என்று கேட்டால்  வயிற்றுக்கு மேலேயும். அதற்கு கீழேயும் பிறகு விண்பைப் என்று சொல்லக்கூடிய மூச்சுக்குழல். இது மணிபூரகத்தின் பகுதியில் அமைந்துள்ளது.

சூரியன் சந்திரன், அக்னி என்ற மூன்று மண்டலங்களை இதற்கு முன்னால் பார்த்திருக்கிறோம். இது அதில் அக்னி என்ற எலிமெண்ட்களில் ஒன்றாக  இருக்கிறது.

அடுத்ததாக பிராண வாயு அல்லது பிராணன்

இந்த வாயு மிகவும் முக்கியமானது மற்றும் இது எல்லாவற்றையும் ஆளுகிறது. பிராணண் என்பது இல்லாவிட்டால் உப வாயுக்கள் எதுவும் இல்லை.  இருந்த போதிலும் அதற்கு என்று இங்கு தனியாக இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு மந்திரி சபையில் ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு மந்திரிகளை அமைப்பார்கள். சில பகுதிகளை  தலைமையேற்று செயல்படக்கூடிய  அந்த முதல்வரே அதை நிர்வகிப்பார். பிராணண் எல்லா வாயுக்களையும் அது ஆளுகை செய்வதானலும் கூட அதற்கு என்று தனியாகச் சில  பணிகளை அது ஏற்றுக்கொண்டிருக்கிறது.இதன் பகுதி இதயம் மற்றும் இதயத்தினைச் சுற்றி, இரத்தத்தை சுத்தம் செய்வதற்காக அதை அமிழ்த்திச்  செயல்படக்கூடிய மார்பு, இதயம் போன்ற பகுதிகளில் பிராணண் நிலை கொண்டிருக்கிறது. குடி கொண்டிருக்கிறது.

இதன் துணை வாயுவான நாகன் தொப்பூழ் என்ற பகுதியில் உள்ளது,

இந்த அனாகதம் என்று  சொல்லக்கூடியப் பகுதி பஞ்ச பூதங்களில் வாயுவாக அது இருக்கிறது,

பின்பு உதானன் என்ற வாயு இதயத்திலும், தொண்டையிலும் மற்றும் தொண்டையினைச் சுற்றி அந்தப் பகுதி முழுவதும் இது பரவியிருக்கிறது. அது  மட்டுமல்லாமல் கண், தலை என்று எல்லா இடங்களிற்கும் அது பரவி தன்னுடைய பணியினைச் செய்கிறது,

உதானை அடுத்து தனஞ்செயன் என்ற ஒரு வாயு உள்ளது. இதோடு உதான வாயவும் சம்பந்தப்பட்டிருக்கிறது.

இறப்பிற்குப் பிறகு ஒரு வாயு உள்ளது. அதைப் பற்றி ஏற்கனவே வீங்கற்காற்று என்று சொல்லியிருக்கிறேன். உதான வாயு நிலை கொண்டிருக்கிற  இடம் விசுத்தி. மேல் மூச்சுக்குழல் பகுதி. இதில் பஞ்ச பூதங்களில் ஆகாசம் என்ற நிலையைப் பெற்றிருக்கிறது. இவை ஆகாசத்தின் கட்டுப்பாட்டில்  உள்ளது.

இவையெல்லாம் ஒரு அட்டவணை மட்டுமே. இவற்றிற்கு என்னென்ன பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதற்காகக் கூறப்பட்டது.

இந்த பஞ்ச பூதங்களில் ஒன்று செயல்படாவிட்டால் மற்றொன்று அதனுடைய அதிகாரத்தைக் கைப்பற்றி அது  செயல்பட வேண்டிய நிலைப்பாட்டில்  செயல்படத்துவங்கும். அவ்வாறு வரும்போது தனஞ்செயன் என்ற வாயுவை உதாரணமாக வைத்து இதனை விளக்குகிறேன்.

பஞ்ச பூதங்களின் செயலாக்கம் நம்முடைய உடலில் சரியாக நிரவியிருக்க வேண்டும். அவ்வாறு நிரவாது இருக்குமேயானால் மனித உடல் சீராக இ யங்காது. இந்தக் குறைபாடானது பல நோய்களுக்கும் பல இயல்பு மாற்றங்களுக்கும் அவை காரணமாகி விடும். எனவே அவற்றையெல்லாம் சரி  செய்ய வேண்டும். சமச்சீர் செய்ய வேண்டும்.

அதற்குத்தான், தியானம் என்ற அதற்குள்ளேயே இருக்கின்ற பிராணாயாமம். பிராணாயாமத்திற்குள்ளே தியானம். அவற்றினால் பஞ்சபூத சீர்÷ கட்டைச் சரி செய்யலாம். அது அந்த ஆகாசத்தோடு பொருந்தியிருக் கிறது. பிராணன்; எங்கிருக்கிறது என்று கேட்டால், இந்த உலகம் முழுவதும் பி ராணன் நிலைபெற்றிருக்கிறது.

நம்முடைய உடலில் ஆகாசம் எங்கே இருக்கிறது என்று கேட்டால் அந்த உதான வாயு பரவியிருக்கின்ற பகுதிகளில் ஆகாசம் நிலைபெற்றிருக்கிறது.  அந்த விசுத்தி என்ற சக்கரத்தின் மத்தியிலே அது அமைந்திருக்கிறது.

பிராணனுடைய தலையாய பணி குண்டலினி; சக்தியினை எழுப்புதல். அது எழும்பாத வரை சாதாரண வாழ்க்கை என்று சொல்கிறார்கள். குண்டலி னியினை எழுப்பவில்லை என்றால் அந்த பிராணனிற்கே மரியாதை என்பது இல்லை.

மூலாதாரத்தில் இருந்து அவை புறப்படுகின்ற ஒரு சூழல். எப்போதும்  ஒரு சீராக உள்ளது. மூலாதாரத்தில் இருந்து அது துவங்கி மூளையின் இறுதிப் பகுதி அது மல்லிகை மொக்கு போல உள்ளது, அது முகுளத்தை சார்ந்து உள்ளது, முதல் இடம் என்று அதைச் சொல்லுவோம் ஆனால், கடைசி  இடமும் அதுதான்

அதற்குரிய கட்டளைகள் எல்லாம் இங்கிருந்து புறப்படுகின்றவை. நடுவில் ஒரு கோடு உள்ளது. அதுதான் சுழுமுனை அந்த இரண்டு கோடுகளுக்கும்  நடுக்கோடு சுழுமுனை நாடி. அந்தப் புள்ளியில் இருந்து பச்சை நரம்புக்கூட்டங்கள், நம்முடைய கட்டளை நரம்புகள் மட்டுமல்ல உயிர் நரம்புகள்,  உயிர் அணுக்களைச் சார்ந்த நரம்புகள், இவையெல்லாம் அந்த ஆதாரத்தில் இருந்து ஒவ்வொரு கொத்துக் கொத்தாக இருக்கின்றன. அந்தக் கொத்தில்  இருந்து, ஒரு செடியிலே அல்லது கொடியிலே இருப்பதைப் போல பல கிளைகள் இருக்கும். அந்த கிளைகளிலே சில இடங்களில் இருந்து சில பய ன்பாடுகள் இருக்கும்.

உதாரணமாக - பலாப்பழத்தை எடுத்துக்கொண்டீர்கள் என்றால் சில மேலே காய்ப்பது, மற்றும் சில வேரில் தோன்றுவது என இரண்டு வகையாக இ ருக்கும். அதனை வேரில் பழுத்தப் பலா என்றெல்லாம் கூறுவார்கள்.

மேலே காய்ப்பவைகளுக்கு அந்த மரத்தில் உள்ள சக்தியெல்லாம் சென்று அங்கு பழமாக உருவாகும். அவை கீழே தோன்றாது.

ஆனால் அவ்வாறாக இல்லாமல் நம்முடைய உடலில் ஒவ்வொரு கேந்திரத்திற்கும் ஒவ்வொரு சக்தி உள்ளது. முன்னர் கூறியது போல அந்த பச்சை  நரம்புக் கூட்டங்களில் இருந்து  ஒவ்வொரு கட்டளைகள் ஒவ்வொரு ஆதாரங்களிலும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன, ஆக அந்தக் குண்டலி னிச்சக்தியினை எழுப்புகின்ற அந்தப் பிராணாயாமத்தினால் எழும்புகின்ற அல்லது முக்கியமானப் பிராணாயாம சக்தியினால் அவை ஏறத்துவ ங்குகிற போது அப்போது மட்டும் தான் இந்த புள்ளிகளில் வரும் என்பதில்லை, நாம் இதுவரை அப்படித்தான் நினைத்துக் கொண்டு இருக்கிறோம்,

இந்த ஒவ்வொரு புள்ளியிலும் அந்த சக்திகள் நிலைகொண்டிருக்கின்றன, நரம்பு கொத்துக்களில் இருந்து ஒவ்வொரு ஆதாரங்களுக்கும்  நரம்புக்கட்டளைகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஓவ்வொரு ஆதாரங்களுக்கும் அத்தனைப் பூக்கள். அதற்கு எத்தனை இதழ்கள் என்ற இந்த படத்தின் மூலமாக விளக்குவதற்கு இதை வரைந்துள்÷ ளன். (போர்டை காண்பிக்கிறார்) ஒவ்வொரு ஆதாரத்திலும் ஓட்டம் என்பது நடந்து கொண்டே இருக்கிறது. அவ்வாறு அவை வேலை செய்ய வில்லை என்று சொன்னால் அந்த ஆதாரம் அதற்குரிய பணியினைச் செய்யாது.

இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. இந்த நிகழ்ச்சியினை அதாவது நாம் ஆதார சக்திகளை உணர்கிறபோது அந்தந்தப்  படிகளிலே அதனதன் இயக்கத்தை நாம் உணர்கிறோம்.

ஆறு ஆதாரங்கள் வழியாக நரம்புக்கூட்டங்களில் இருந்து கட்டளைகள் சென்று உடலில் உள்ள அந்தந்த உறுப்புகளை அவை இயங்க வைக்கின்றன.  இவ்வியக்கங் கள் கனவுப்பகுதியிலும் தொடர்ந்து செயல்படுகின்றன.

விழிப்புணர்வோடு உள்ளபோது உள்ள பகுதிகள் நினைவுப்பகுதியில் பஞ்சேந்திரியங்களுடன், கர்மேந்திரியக் கருவிகளின் செயல்பாட்டிற்கும்  துணை புரிகின்றன. அப்போதும் ஜீரணப்பகுதி, இதயம், உட்பட ஒவ்வொரு உடல்பாகங்களும் இயங்குவதற்கு இந்த சக்கரங்களில் இருந்து  கட்டளைகளும் சக்திகளும் செல்கிறது.

ஆதாரத்தைக்கிளப்பி அதனதன் வழியாக பயணிக்கிறபோது பிறகு நாம் அந்தந்த இடங்களுக்கு வந்து விடுவோம், ஏனென்றால் அடைப்புகளை  தகர்த்துச்செல்கிற ஒரே சீரான வேகமாக அந்தப்பயணம் இருக்கிறது, நாம் அவ்வாறு சீரான ஓட்டத்தில் கலந்து விடாமல் அந்தந்தக் கேந்திரங்களில்  நின்றுகொண்டு நிலைப்பதுதான் நம்முடைய வேலை.

ஆதாரங்களில் அடைந்துகொண்டு இருக்கிறோம், அந்தந்த இடங்களில் பற்றி இருக்கிறோம் என்று சித்தர்கள் சொல்வார்கள். அதுதான் இது.

ஓவ்வொரு ஆதாரத்திற்கும் வரும்போது எந்த இடங்களில் சக்தியினை அதிகரிக்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாம்  அதைக் கட்டுப்படுத்தி வருகின்றோம். அந்தக் கட்டுப்பாட்டை நாம் மேற்கொள்ள முடியும் என்று சொன்னால் அதை நாம் இங்கிருந்தே செய்யலாம்.

நம்முடைய உயிரின் கட்டுப்பாடாக கட்டைவிரலில் இருந்து நாடிகள் துவங்குகிறது என்று சொல்கிறார்கள்.  ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு  பணி.

உதாரணமாக ஒருவனுக்கு இடுப்பு செத்துப்போச்சு என்பார்கள். சிலருக்கு இடுப்புக்குக்கீழே செயல்படாத நிலைமை இருக்கும்.மேல் பகுதி நன்றாக  இருக்கும். அந்தச் சமயத்தில் அந்தந்த தகுந்த ஆதாரங்களில் இருந்து கட்டுப்பாட்டை மேற்கொண்டால் அந்தப் பகுதிக்கு உயிர்ச்சக்தி வந்து விடும்.

இது எவ்வாறு என்று சிலர் கேட்கலாம், அது ஒரே வேகத்தில் அனைத்து ஆதாரங்களையும் கடந்து விடும். இங்கே எப்படி ஒவ்வொரு ஆதாரத்திலும்  கட்டுப்பாட்டுடன் நின்று செல்வது சாத்தியம் என்று கேட்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அவ்வாறு அனுபவம் இல்லை என்பதுதான் குறிப்பி டத்தக்கது.

ஒவ்வொரு ஆதாரத்திலும் சித்தர்கள் நின்று விளையாடியிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆதாரத்திலும் சென்று அதன் சூட்சுமங்களை தெரிந்து கொண்டு  அதை இயக்கியிருக்கிறார்கள்.

தேவைப்பட்டால் சித்தர்கள் ஒவ்வொரு ஆதாரங்களுக்கும் செல்வார்கள். இல்லையென்றால் இருந்த இடத்தில் இருந்தே தன் செயலை  ÷ மற்கொள்வார்கள். எவ்வாறு அதைச் செய்கிறார்கள் என்றால் அவர்களுடைய சித்தத்தின் ஆளுகை. ஒவ்வொரு ஆதாரத்திலும் நின்று அதன் செய ல்பாடுகளை சீராக்கியிருக்கிறார்கள்.

ஏனென்றால் ஒவ்வொரு ஆதாரத்தில் இருந்தும் கட்டளைகள் புறப்பட்டு உடலின் பாகங்களைச் சரியாக இயங்கச்செய்கின்றன. அங்கே கோளாறு  ஏற்பட்டால் உடலின் செயல்பாட்டில் குறைபாடு ஏற்படும்.

மனிதனின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஆதாரங்கள் முக்கியமான பங்கை வகிக்கிறது. அந்த ஆதாரங்கள் சீராக இயங்க வேண்டியது அவசிய மாகும். எனவே ஒரு யோகியானவர் அந்த ஆதாரங்களை தினமும் சரிசெய்கிறார் என்பது உடலின் சரியான இயக்கத்தின் பொருட்டு.

ஒவ்வொரு யோகத்தின்போதும். ஆதார அனுபவங்கள் ஏற்படும்போதும், ஒவ்வொரு ஆதாரத்திலும் உணர்வினால் அவன் நிலைபெற்று வரிசையாக  அவன் மேலே செல்கிறான். ஆக அன்றாடக் கடமைபோல அப்பணியினைச் செய்கிறான்.

உதாரணமாக ஒரு விவசாயியை எடுத்துக்கொண்டால் நாற்று நட்டது முதல் அறுவடை வரை இடைவிடாது அதன் வளர்ச்சியில் அதற்கு தேவைப் படும் நீர் உரம் வளர்ச்சிக்கு தேவைப்படும் விஷயங்களை தினசரி மேற்கொள்வார்.

அதைப்போல யோகிகள் என்ன செய்கிறார்கள் என்றால் அனுதினமும் அந்த ஆதாரங்களை சீர்தூக்கிப் பார்த்துச் சரிசெய்கிறார்கள். நேற்றைய  நிலைமை என்ன. இன்றைய நிலைமை என்ன, ஆதாரங்களின் சக்தி கூடலாம் அல்லது குறையலாம் என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு வாசியின்  வழியாக அவர்கள் சென்று ஒவ்வொரு ஆதாரங்களிலும் நின்று அதை பரிசீலித்து அவற்றை அனுபவித்து அவர்கள் மேலேறிச் செல்கிறார்கள்.

அவர்களுடைய நித்தியப்பணி அது

ஏன் பின்பு ஆதார நிலையில் இருந்து இறங்க வேண்டும், அவர்கள் மேலேயே இருந்து விடக்கூடாதா என்றால்,

நாற்று நாட்டால் மட்டும் அந்த விளைச்சல் வீடு வந்து சேருமா? தினசரி பராமரிப்பு வேண்டாமா? இந்த உடல் மூலமாகத்தானே ஞானம் பெற  முடியும், ஆகவே இந்த உடல் மூலமாக ஒழுங்காகப் பிராணாயாமம் செய்து. தியானம் செய்து, மந்திரங்களை சொல்லி, சப்த அலைகளை உண்டாக்கி  ஒவ்வொரு ஆதாரத்திலும் உள்ளே பிரவேசித்து அங்கிருந்து உன்னால் விடுதலை அடைய முடியாதபடி, முடியாதபடி என்று சொன்னால் அதிலே மூ ழ்கிப்போவது.

ஒவ்வொரு ஆதாரத்திற்குச் செல்லும்போதும் அவன் மெய்மறந்து விடுகின்றான், ஒவ்வொரு ஆதாரத்திலும் அவன் பெறுகின்ற காட்சி களும்,இன்பங்களும் அதோடு மேலே செல்லச்செல்ல கிடைக்கின்ற அனுபவங்களும் அவ்வாறு இருக்கும்.

பல்லாண்டு கால தவத்தினால் அந்த மிகப்பெரும் சமாதி நிலை வாய்ப்பதினால் இந்த நிலைகள் நமக்கும் கிடைக்கும்

தியானத்திற்குச் செல்லும் முன்பாக நாம் சாதாரண மனிதன், இது என் உடம்பு, நான் இப்போது தியானம் செய்யப்போகின்றேன் என்ற முனைப்பு இ ருக்கும், முனைப்பு இருக்கின்ற காரணத்தினால் தான் நாம் மறுநாளும் தியானம் செய்ய முடியும்.

முனைப்பு இல்லாவிட்டால் மேல் நிலையிலயே நின்று கொள்ளலாம். கீழே வரத்தேவையில்லை,

உணர்வுக்கணிப்பு, காலக்கணிப்பு என்பது உன்னுடைய சித்தத்திலே பதிந்து இருப்பதால் உயர்ந்த நிலைகளை நீ அடைந்தாலும் அவற்றில் இருந்து  குறிப்பிட்ட கால அளவிற்கு பின்னால் இறங்கி வருகின்றாய்,

பரவீடு என்ற இறைவனுடைய நாட்டை நாம் அடைகின்றவரை இந்த ஆதாரப்பயணம் என்பது அது நடைபெற்றுக்கொண்டே இருக்கும். இங்கே இந்த  இடத்தில் ஒவ்வொரு ஆதாரத்தின் முன்னும் பின்னும் அடைப்பு அடைப்பாக வரைந்திருக்கிறேன் (படத்தை காண்பிக்கிறார்) அது உங்களுக்கு  விளக்குவதற்காகத்தானே தவிர வேறு ஒன்றுமில்லை,

மூலாதாரத்தில் மட்டும் சக்தி தேங்கி விட்டால் அது வேறு மாதிரி நிலை ஆகி விடுகிறது. சக்தி கீழ் நோக்கிய பயணம் - உற்பத்தி என்ற படைப்பு,  உன்னை நகல் எடுக்கும் செயல் ஆகும்.

ஆரம்பத்தில் துவங்கி ஒவ்வொன்றின் வழியாக இறுதியான ஆதாரத்தை அடையும்போது இருக்கின்ற உலகங்களைத் தெரிந்து கொள்ள முடியும்,  இரகசியம் என்று அவன் அறிய முடியாதது எதுவும் இந்த உலகில் இல்லை.

பிராணனைப் பற்றிய பிப்பிலாதரின் கூற்று

பிப்பிலாத முனிவர் கூறுகிறார்.

பிராணனைப்பற்றி முன்னதாக அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகின்றது,

மனித வர்க்கம் எப்படி உயிர் பெறுகிறது. எதனால் அவர்கள் உயிர் வாழ்கிறார்கள்? என்று அவரிடன் சீடர்கள் பல கேள்விகளை கேட்கிறார்கள்,

மூன்றாவதாக கௌசல்யர் எனும் சீடர்  ஒரு கேள்வியினை கேட்கிறார்.

பிராணன்; என்பது என்ன? அதற்கு ஏன் முக்கியத்துவம் அளிக்கிறோம்? அவற்றினைத் தவிர மற்ற வாயுக்கள் எல்லாம் முக்கியத்துவம் இல்லையா?

உடனே பிப்பிலாதர் கூறுகிறார்,

அரசன் தன்னுடைய பணியினைத் தானே ஒவ்வொரு இடத்திலும் போய் சொல்வதில்லை. தனக்குக் கீழே அதிகாரிகளை நியமிக்கிறான். அந்த  அதிகாரிகளை இவன் மேற்பார்வை பார்க்கிறான். ஒவ்வொருவரும் அவரவர் களுடைய வேலையினைச் சரியாக செய்கிறார்களா என்று ÷ மற்பார்வை பார்ப்பது அரசன். அது போல பிராணன் என்பது இதர வாயுக்களையெல்லாம் பணி செய்ய வைக்கிறது. பிராணன் என்பது தலையாய  வாயுவாக இருக்கிறது, மற்ற வாயுக்களை இயக்கச்செய்கிறது.

பிரச்னோ உபநிஷத்திலே பிப்பிலாத முனிவர் சொல்கின்ற விஷயத்தை நாம் இங்கே எடுத்துக் கொள்கிறோம்.

ஆக பிராணன் கண்ணிலும். காதிலும். மூக்கிலும் தானே நிலைபெறுகிறது. தானே நிலைபெறுகிறது என்றால்  அதுவாக சென்று எங்கேங்கே இரு க்கிறது என்றால் கண், காது, மூக்கு, வாய் இவற்றில் புகுந்து கொள்கிறது. தானாகவே நிலைபெறுகிறது.

அப்போது கண்ணில் பிராணன் இருக்கிறதா? மூக்கில் பிராணன் இருக்கிறதா? வாயில் பிராணன் இருக்கிறதா? வேறு எங்கும் இல்லையா என்று ÷ கட்டால் அதற்கும் பின்னால் வருவதில் பதில ;சொல்கிறார். அது எப்படி உள்ளே நுழைகிறது என்பதற்காகச் சொல்கிறார். அபானன் என்பவன்  பாயுவிலும் உபஸ்தத்திலும் என்று சொல்கிறார். அங்கே இரண்டு இடங்களிலும் அது நிலைபெறுகிறது. எப்படி?

பாயு என்றால் என்ன?

மலத்துவாரத்திற்கு பெயர் பாயு, உபஸ்தம் என்று சொன்னால் கருத்துவாரம், இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் அபானன் எங்கே நிலைபெறுகிறது  என்று. ஏற்கனவே உங்களுக்கு நான் அதை சொல்லியிருக்கிறேன், இந்த வாயுக்களுடைய ஏகாதிபத்தியம் மற்றும் பரவல் மற்றும் அவை எ ங்கெல்லாம் செயல்படுகிறது என்பதைச் சொல்வதற்காகத்தான் இதை நான் உங்களுக்குச் சொன்னேன்.

அடுத்தபடியாக சமானன் என்கிற காற்று. இது நாபிப் பிரதேசத்தில் உலவுகிறது. நாபிப்பிரதேசம் என்றால் அது சரியாக நாபிக்கு மட்டுமல்ல நாபியி னைச் சுற்றிலும் உள்ள எல்லாத் தளங்களிலும். இதற்கு வயிறு என்று சொன்னால் வயிற்றிலே குடல். இந்தக் குடலிற்கு மேல் பகுதியில் இரைப்பை.  இந்த இரைப்பையினைச் சுற்றி பல சுரப்பிகள். பித்தநீர், கணைய நீர் என்று நிறைய உள்ளது. வயிற்றுப்பகுதி என்று சொன்னால் அது மேல்புறம். நா பிப்பகுதி என்று சொன்னால் அது கீழ்ப்புறம்.

ஹைட்ரோகுளோரிக் ஆசிட்டை ஜடவாக்னி என்று சொல்வார்கள். இப்போது விஞ்ஞானத்தில் இந்த ஆசிட் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆசிட் ÷ தவையானவற்றை எரிக்கிறது. வயதுக்கு ஏற்றபடி இந்த ஆசிட் சுரக்குமாறு அங்கே அதை இறைவன் சுரக்க வைத்திருக்கிறார். மனிதன் சாப்பிடுகின்ற  உணவிற்கு ஏற்ப, சாப்பிடுகின்ற நேரத்திலே அது உற்பத்தியாக வேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்றில் மாறுதல் ஏற்பட்டாலும் அந்த ஆசிட்டே  இவன் வயிற்றைக் கோளாறு செய்து விடும். அதனால் வயிற்றுப்புண் உண்டாகிறது. அதைத்தான் அல்சர் என்று சொல்கிறார்கள். ஆகவே ஜடவாக்னி  என்று சொன்னால் ஹோமத்திலே இடுகின்ற பொருட்களை போல . நம்முடைய இரைப்பையின் உள்ளே நாம் சாப்பிட்ட உணவினை இந்த சமானன்  என்பதானது இரைப்பையில் செரிக்கப்பட்ட குடலுறிஞ்சி களால் உறிஞ்சப்பட்டு குளுக்கோஸாக மாறியுள்ள அந்தச் சக்தியினை உடம்பின் எல்லா  அங்கங்களுக்கும் பரவச்செய்கிறது இந்த சமானன்.

நக சிக பரியந்தம் என்று சொல்வார்கள். உடம்பில் ஒரு இடத்தில் உருவாக்கப்பட்ட சக்தியினை நகம் என்ற உடம்பின் கடைசிப் பகுதி முதல் சிக என்று  சொல்லக்கூடிய முடி இருக்கும் பகுதிவரை பரவச்செய்து செயல்பட வைக்கிறது இந்த சமானன். ஒரு முனிவர் அந்த காலத்தில் இவ்வளவு விஷய ங்களைச் சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது. வேதம் என்பது விளையாட்டா?

ஆகவே அந்த சமானனின்றும் 7 தீக்கொழுந்துகள் எழுகின்றன. அந்த ஏழில் முக்கிய தீக்கொழுந்து அந்த ஜடவாக்னி. இப்போது நீங்கள் பிராணன்,  சமானன் என்பதை இணைத்துப்பார்க்க வேண்டாம். இங்கே சமானன் என்பவன் ஏழு தீக்கொழுந்துகளை பரப்புகின்றான். கண்கள் இரண்டிற்கும்.  காதுகள் இரண்டிற்கும். நாசிகள் இரண்டிற்கும். வாயிற்கும் என ஆக ஏழு. ஏழு தீக்கொழுந்துகள் இந்த பகுதிக்கெல்லாம் வருகின்றது. ஒலியாகவும்.  ஒளியாகவும். ருசியை உணர்வதாகவும். சப்தம் என்ற த்வனியினை எழுப்புவதற்காகவும் அடுத்தகட்டப் பணியினைச் செய்கிறது சமானன்.

அடுத்து வியானன். ஜீவாத்மா இதயத்தில் உறைகின்றான். என்று பிப்பலாதர் சொல்கிறார். ஜீவன் என்பது நம்முடைய உடலில் எல்லா இடத்திலும்  இருப்பதாக நாம் சொல்வோம்.

அந்த ஜீவாத்மா குடி கொண்டிருக்கிற இதயத்திலே 101 நாடிகள் இருக்கின்றன. இந்த ஒவ்வொரு நாடியும் 100 கிளைப்பகுதிகளாகப் பிரிகின்றன.  மொத்தம் இக்கிளை நாடிகள் 72.000 என்று பெரியோர்கள் கூறுகிறார்கள். ஆக 72000 நாடிகள் அவற்றை கண்ணி நாடிகள் என்றும்; சொல்கிறோம்.  கண்ணி என்று சொன்னால் அவை ஒன்றோடன்று சேர்ந்து கோர்க்கப்பட்டு அவை தொடர்ந்து வருவது. இவைகள் அனைத்திலும் வியானன் பய ணிக்கிறது. 72000 நாடிகளிலும் இந்த வியானன் பரவி நிற்கிறது.

உதானன் என்பவன் நாடிகளுக்குள்ளே பயணிக்கின்ற சக்தியாக இருக்கிறான். வியானன் நாடிகளோடு பரவி நின்றாலும் உதானன் மட்டும் பய ணிக்கிற சக்தியாக இயங்குகிறான். ஆகவே மேற்சொன்ன இந்த நாடிகள் ஒவ்வொன்றிலும் தனது மேல்நோக்கிய பயணத்தை மேற் கொள்கின்ற, இந்த  உதானன் என்ற வாயு வெட்ட வெளியே ஒளியாக இருக்கிறான். அவன் நம் உடம்பிலே இருக்கிற உதானனோடு சேர்ந்து மேல் நோக்கிய வாயுவாக  பயணிக்கிறான்.

பிரபஞ்சத்தில் நிலைபெறும் பிராணன்

சமஷ்டி வடிவான இந்த உலகத்திலே சமஷ்டி என்ற பரந்த,விரிந்த மற்றும் பல விஷயங்கள் அடங்கியது. இந்த உலகம் பஞ்ச பூதங்கள் உட்பட  பலவிஷயங்களை தனக்குள்ளே அடக்கி கொண்டுள்ளது. பின்பு வியஷ்டி என்று சொன்னால் மேலே இருக்கின்ற அவை அனைத்தும் நாம் உடம்பிலும்  உள்ளது.

ஆக உடலில் உள்ள பிராணனிற்கு அது ஒரு சிறப்பினைத் தருகிறது. சிறப்பு என்று சொன்னால் மேலே இருக்கின்ற அத்தனையிலும் இந்த உடலிற்கும்  ஒரு உறவினைத்தருவது என்றால் இந்த உதானன், மேலேயும் இருந்து கொண்டு நம் உடலில் உள்ள அதை நோக்கி வந்து, அண்டம்,பிண்டம் என்ற  இரண்டிற்கும் ஓர் உறவினை ஏற்படுத்தித் தருகிறது இந்த உதானன்.

அதற்கடுத்தப்படியாக சூரியன். சூரியனை நாம் அனைத்திற்கும் முதலாக வணங்குகிறோம், ஏனென்றால் அனைத்து கோள்களைவிட வலிமைய õனதாகவும். அவற்றிற்கு தலைமையானதாகவும். மேலும் ஒலி,ஒளி மற்றும் உஷ்ணம் என்ற அக்னி வடிவாகவும் இருக்கிறது. அது பிராணனாக நிலை  கொண்டிருக்கிறது.

அதாவது சூரியன் இல்லையென்றால் மற்ற கிரகங்கள் இயங்க முடியாது, சூரியனே பிராணன், வெளியிலுள்ள பிராணனாக சூரியன் இருக்கிறது, இது  கண்ணிலுள்ள பிராணனை இயக்குகிறது.

அடுத்தபடியாக பிருத்வி என்று சொல்லக்கூடிய மண், பிருத்வி என்று சொல்லக்கூடிய தேவதை சாகரத்தில் உள்ள அபானனை இயக்குகிறது.  ஒவ்வொன்றும் எதை இயக்குகிறது என்று பார்ப்போம. சூரியனுக்கும். பூமிக்கும் இடையே உள்ள இடைவெளிதான் சமானன், அந்தச் சமானன்  நம்முடைய உடம்பிலே சமானனை இயக்குகிறது. இதைத்தொடர்ந்து அடுத்த வகுப்பில் பார்ப்போம்.

ஔவை முனி விளக்கும் ஆதாரப் பிராணாயாமம்
 
நிலமைந்து நீர் நான்கு நீடங்கி மூன்றே
யுலவை யிறண்டொன் றுவிண்.

வாயுக்களை நாம் இரண்டாக பிரித்திருக்கிறோம், அதில் 1) ஐந்து முதன்மை வாயுக்கள் 2) ஐந்து கிளை வாயுக்கள்

பிராணன், அபானன், வியானன், சமானன், உதானன் என்ற முதன்மை வாயுக்கள்.    

அடுத்ததாக கூர்மன், நாகன், கிருகரன், தனஞ்செயன், தேவதத்தன் என்ற ஐந்து கிளை வாயுக்கள். அதிலே முக்கியமான வாயு இரண்டு எதுவென்று ÷ கட்டால் அது பிராணன், அபானன் இவை இரண்டும் மிகவும் முக்கியமான வாயுக்கள். தலைமை வாயுக்கள். பிராணன் என்பது உயிர்  உண்டாவதற்கும், உயிர்ப்பிப்பதற்கும், உயிர் வாழ்வதற்கும், உயிரை வழிநடத்திச்செல்வதற்கும், ஆதாரமான காற்று பிராணன். அது ÷ மலெழும்பக்கூடிய சக்தி வாய்ந்தது, மேல் நோக்கிச்செல்கின்ற தன்மை வாய்ந்தது.

அபானன் என்ற வாயு கீழ் நோக்கி செல்வது. இதனை மலக்காற்று என்று சொல்வார்கள். மலக்காற்று என்று சொன்னால் இதன் பெயர் என்ன இவ்வாறு  இருக்கிறது என்று அங்கலாய்ப்பார்கள். ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள். மலக்காற்று என்றுதான் பெயர் வைத்திருக் கிறார்கள். அது கீழ் நோக்கியது,

குண்டலினி சக்தி எழுவதற்கே இந்த இரண்டு வாயுக்கள் தான் முக்கியமான பணியினைச் செய்கிறது. பிராணன் என்ற  மேல் நோக்கிய வாயுவினால்  அபானன் என்ற கீழ் நோக்கிய வாயுவினை அழுத்தும் போது அது ஸ்டைபன் சிஸ்டம்போல. ஸ்டைபன் சிஸ்டம் என்பது பொறியியல்  படித்தவர்களுக்குச் சொன்னால் உடனே புரியும். சரி பிராணன் என்பதை வைத்து எவ்வாறு அபானன் என்பதன் மீது அழுத்துவது, பிராணன் என்பதை  கும்பகத்தின் மூலம் அபானன் என்ற வாயுவினை அழுத்துவது. அபானன் என்ற வாயுவினை அழுத்துகிற போது அதனால் அதைக் கருவியாக்கி அது  கீழ்நோக்கிச் செல்வதற்குப் பதிலாக மேல்நோக்கிச் செல்கிறது, மேல்நோக்கித்தான் செல்ல வேண்டும் என்பது வேறு விஷயம், அது கீழே போகாது, ÷ பாகக்கூடாது.

சாதகர்கள் கும்பகப் பயிற்சி செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றைச் சொல்லுகிறேன். அபான வாயு வெளியே ÷ பாகாமல் பந்தனம் செய்ய வேண்டும் என்று யோக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது, சில நேரங்களில் அழுத்துகிற போது அபான வாயு காற்றாக  வெளியே போக வாய்ப்புண்டு, போகவும் செய்கிறது. அழுத்தப்பட்ட காற்று கீழ் நோக்கி வெளியே சென்றால் அது பயன்படாது.

பந்தனம் செய்கிற போது பிராணனால் அபானனை அழுத்துகிற போது அது கீழே நோக்கிச் செல்ல இயல்பாகவே முயற்சிக்கும். ஆனால் கீழே நீங்கள்  பந்தம் (அல்லது) பந்தனம் செய்கிற போது கீழே அடைத்து விடுகிறீர்கள். பிறகு எவ்வாறு கீழே செல்லும்?

அவ்வாறு கீழே செல்கிற போது அது ஸ்டைபன் சிஸ்டத்தின் படி மேலே செல்லும்போது பிராணன் வாயுவும் அதனைப் பின்தொடர்கிறது. ஆக  தொடர்கின்ற அந்த பிராணனும் , அபானனும் இணைந்து எழுகின்ற போது தான் குண்டலினி மேலே எழும்புகிறது. ஆகவே காற்று இரண்டு என்று  அவ்வை சொன்னதனுடைய பொருள் இதுதான்.

ஆகாயம் ஒன்று. தலையின் மேலே உள்ளது மட்டுமல்லாமல் வெட்டவெளி என்பது எல்லாமே ஆகாயம் தான். நாம் அணுவிற்குள் எலக்ட்ரான், பு÷ ராட்டான், நியூட்ரான் இவை இயங்குவதற்குக் கூட அந்த இடைவெளி இருப்பதால் தான் அவை சுற்றி வருகிறது. இங்கே அதையும் நாம் ஆகாயமாக  எடுத்துக்கொள்கிறோம்;. அவ்வாறு பார்க்கும்போது உடம்பு முழுவதுமே ஏகப்பட்ட வெற்றிடம் உள்ளது. ஆனால் யோக சாஸ்திரத்திலே வெற்றிடம்  என்பது தலைக்கு மேலே உள்ளது. அதுதான்  சிதாகாரம் என்று சொல்லக்கூடிய ஆகாயம்.

சகஸ்ராரம் என்று சொல்லக்கூடிய அந்தப் பகுதி புருவ மத்தியில் இருந்து பிரம்மரந்திரம் என்று சொல்லக்கூடிய பகுதி வரை ஆகும். அந்த பிரம்ம ரந் திரம் வரை எட்டுப் பகுதிகள்  உள்ளது என்று கூறுகிறார்கள். அந்த எட்டுப்பகுதிகள் என்னவென்று கேட்டால் 1) இந்து 2)ரோஹிணி 3)நாதம் 4) நாதாந்தம் 5)சக்தி 6) வியாபினி 7)கமலி 8)உண்மனி என்று சொல்கிற மனோன்மணி. ஆக எட்டுவிதமான நிலைகள் அங்கே உள்ளது. எட்டுபாக ங்களாக ஆக எங்கிருக்கிறது. இந்த சகஸ்ரார உட்பகுதியிலே அவை எட்டும் இருக்கிறது. 6 ஆதாரங்களைக் கடந்து 7வது ஆதாரமாக 12 அங்குல  இடைவெளியில் வீற்றிருக்கிற சகஸ்ராரப் பகுதியே வெட்டவெளி. அதுவே ஆகாயம் என்று அழைக்கப்படுகிறது.

ஆகாயம் 1 மட்டும் தான் என்று ஔவை சொல்லிவிட்டார். ஆகவே இன்னொரு விஷயத்தை நாம் பார்க்கிறபோது பஞ்ச பூத அணுக்களில் ஆகாயம்  நீக்கி ஏனைய கூறுகள் நான்கையும் பார்த்தோம். நிலம் ஐந்து, நீர் நான்கு, நெருப்பு மூன்று, காற்று இரண்டு, ஆகாயம் ஒன்று, ஆக மொத்தம் 14 இரு க்கிறது. பஞ்ச பூதங்களில் ஆகாயம் நீக்கி, ஏனைய கூறுகள் 14யும் அந்த அக, புறக்கண்களால் தனித்தனியே பிரித்தறிய முடியும் என்பதும், ஆகாய க்கூறு என்று சொல்கிற போது இந்த 14லும் ஆகாயக்கூறு ஒன்றாகவே கலந்தும் காணப்படுகிறது.

பஞ்ச பூதங்களில் ஆகாயம் ஒன்றினை நீக்கினால் மீதம் இருப்பது நான்கு. அந்த நான்கிலும் ஒவ்வொன்றிலும் ஆகாயம் ஊடுவி நிற்கிறது  என்பதனைக் கவனத்தில் கொள்வோம். பஞ்ச பூதங்களில் ஆகாயம் என்பதை இவ்வாறு அவ்வை குறிப்பிடுகிறாள். பொதுவாக யோக சாஸ்திரத்தில்  12 அங்குல இடைவெளியில் ஆகாயம் உள்ளது என்று குறிப்பிடப்படுகிறது. இதை எவ்வாறெல்லாம் பார்ப்பது என்று, இனிமேல் அதைப் பார்ப்÷ பாம் (சிரிப்பு)

பிராண ஆராதனை
 
ஒரு நிமிடத்திற்கு 18 முறை வீதம் மொத்தம் ஒரு நாளைக்கு 25000 முறை சுவாசங்கள் இருப்பதாக யோகிகள் கூறுகின்றனர். கிட்டத்தட்ட 24 மணி ÷ நரத்தில் 25000 முறை (பழங்காலக் கணக்கு) மூச்சு விடுகிறோம். எந்த அளவு பிராண வாயுவினை நம் உடம்பு கிரகித்துக்கொள்கிறதோ, அந்த  ஆக்ஸிஜன் என்ற பிராண வாயுவினைக் கிரகித்து, வெளியே விடுகின்றபோது அது கார்பன்டை ஆக்ஸைடாக மாறுகிறது. கார்பன்டை ஆக்ஸைடாக  வெளியே செல்லக்கூடிய அந்த அபானனை அது மாசுக் காற்றாக வெளியே செல்கிற போது அதில் நிறைய ஆக்ஸிஜனும் கலந்திருக்கிறது. காற்றில் 21  சதவிகிதம் ஆக்ஸிஜன் இருக்கிறது. இதை வெளியே விடும்போது வருகின்ற காற்றில் 14 சதவிகிதம் ஆக்ஸிஜன் இருக்கிறது என்றால் மீதம் 7  சதவிகிதம் மட்டுமே நம்முடைய உடம்பு எடுத்துக் கொள்கிறது. இவ்வாறாக நாம் எந்த அளவு அதிகமாகக் காற்றின் வழியாக ஆக்ஸிஜனை எடுத்துக்  கொண்டால் அந்த அளவு நம்முடைய உடல் நன்றாக இயங்கும். உடலில் உள்ள எல்லாக் கருவிகளும் சரியாக இயங்கும்.

நம்முடைய ஒவ்வொரு நரம்புக்கூட்டமும் முதலாவதாக  நரம்புக்கற்றைகளில் உள்ள ஒவ்வொரு நரம்புகளிலும் அதன் திசுக்களிலும், அணுக்களிலும்  எந்த அளவு ஆக்ஸிஜன் நிரம்புகிறதோ அந்த அளவு உடல் தொகுதி நன்றாகச் செயல்படும். அனைத்து சுரப்பிகளும் நன்றாக வேலை செய்யும்.  ஒவ்வொரு நாளமில்லாச் சுரப்பிகளும் சரி, இதர சுரப்பிகளும் சரி நன்கு வேலை செய்யும். பிட்யூட்டரி முதல் பீனியல் வரை எல்லாச்சுரப்பிகளும்  நன்றாகச் செயல்புரிவதற்கு இரத்தம் என்பது அவசியம். இந்த இரத்த ஓட்டத்திலே ஆக்ஸிஜன் கூடக்கூட உடம்பிற்கு மிகவும் நல்லது.

உடம்பைப் பொறுத்தவரை என்று மட்டுமல்லாமல் அதனால் பல நன்மைகள் நமக்கு உள்ளது.  பொதுவாக மூளை நன்றாகச் செயல்படவில்லையா?  அங்கு ஆக்ஸிஜன் குறைவாக உள்ளது. அந்தந்த இடங்களில் சரியான அளவு ஆக்ஸிஜன் செயல்படும்போது நம்முடைய சிந்தனைகள். நினைவக ங்கள் நன்றாக வேலை செய்யும். அப்போது ஆக்ஸிஜன் நிறைய வேண்டும். ஆக்ஸிஜன் என்பது நமக்கு அதிகத் தேவையாக உள்ளது. அது நமக்கு  இலவசமாகவும் கிடைக்கிறது.  அதைக் குறிப்பிட்ட கால அளவு உள்ளே தேக்கி வைத்திருந்தால் அது உடம்பினுள் நன்றாக ஊடுருவுகிறது.

அதை எவ்வளவு நேரம் வைத்துக்கொள்வது என்றால் அதைத்தான் அந்த கணக்கறிவார் இல்லை என்பது போல நம்முடைய பிராணாயாமத்திலே  1-4-2 என்ற விகிதத்தில் டணீஷிகள் கூறியபடி உள் இழுத்து, உள் நிறுத்தி. வெளியேற்றுவோம் என்றால் அதனுடைய முழுப்பயன்பாடும் நமக்குக்  கிடைக்கும். ஆகவே இந்த ஆதாரங்களில் எல்லாம் ஒவ்வொரு மூச்சிலும் இந்தச் செயல்பாடுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆதாரங்களில்  இந்த ஆக்ஸிஜன் குறிப்பிட்ட நேரம் செயல்பட்டுவந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மூச்சிலும் ஒவ்வொரு ஆதாரத்திலும் அது எவ்வளவு ÷ நரம் அது எடுத்துக்கொள்கிறது என்று ஒரு கணக்கு இருக்கிறது. அதற்காக நீங்கள் முயற்சி செய்யாமலே அது இயல்பாக நிகழ்கிறது. நீங்கள்  இழுக்கின்ற மூச்சிலே எத்தனை மூச்சுகள் அங்கே நிற்கின்றன என்பதை அங்கு பார்க்கப்போகின்றோம். மொத்தக் கணக்கின்படி 24.000 என்பதில் (÷ தாராயமாக) 21,000தான் நமக்குச் செயல்படுகிறது. ஆனால் அது இப்போது 17,000 மற்றும் 18,000தான் என்று சொல்கிறார்கள். 21,000 என்பது  நிகழ்விற்காக நாம் சரியான அளவு எடுத்துக்கொள்ளத்தான்  வேண்டும்.

ஒவ்வொரு நேரத்திலும் எந்தெந்த ஆதாரத்தில் எவ்வளவு மூச்சு இருக்கிறது என்றும் மூச்சே தானாக அந்தந்த ஆதாரங்களை வணங்குகிறதாகவும்  சொல்வார்கள். அதனை மூச்சின் ஆதார வணக்கம் என்றும்ரிஷி வாக்கில் சொல்கிறார்கள்.

முதலாவதாக மூலாதாரத்தில் 600 முறை மூச்சுக்கள் அங்கே படுகிறது என்கிறார்கள். எந்த நேரத்தில்? காலை 6 மணி முதல் 6.40 வரை, 40 நிமிடங்கள்  மட்டுமே அது நிகழ்கிறது. அந்த ஆக்ஸிஜனை மூலாதாரம் எடுத்துக் கொள்கிறது. அங்கே போய் அது பூஜை செய்கிறது.

அடுத்ததாக அந்த ஸ்வாதிஷ்டானம். அதுவும் 600 மூச்சு. 6.40 முதல் 1.20 வரையும் தொடர்ந்து அடுத்ததாக மணிபூரகத்தில் 6000 மூச்சுக்கள் அதாவது  பகல் 1.20 முதல் இரவு 8 மணி வரை ஆக்ஸிஜனை அந்த ஆதாரம் எடுத்துக் கொண்டிருக்கிறது. அப்போது ஒவ்வொரு ஆதாரங்களுக்கும் எவ்வளவு  ஆக்ஸிஜன் தேவை என்றும் ஆதாரங்களைப் பற்றி பெரும் ஆராய்ச்சி செய்தாலே ஆதாரங்களின் மகிமை நமக்குத் தெரிய வரும்.

அடுத்தபடியாக அனாகதம் என்ற ஆதாரத்தில், 6000 மூச்சுக்களை அது எடுத்துக்கொள்கிறது. அதாவது 6000 முறை அந்த மூச்சுக்கள் அனாகதத்தை  வணங்குகிறது என்று சொல்கிறார்கள். இதன் காலம் இரவு 8.01 முதல் நள்ளிரவு 2.40 வரை. இந்த  நிகழ்வு நடைபெறுகிறது.

அடுத்தபடியாக விசுத்தி, அதிலே ஆயிரம் (1000) மூச்சுகள். அதன் காலம் இரவு 2.41 முதல் விடியற்காலை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லக்கூடிய  3.45 வரை. அதற்குப் பிறகும் பிரம்ம முகூர்த்தம் உள்ளது.           கடைசியாக ஆக்ஞை, அதில் 1400 மூச்சுக்கள். முதலில் மூலாதாரத்தில் 600 எனத்  துவங்கி இப்போது ஆக்ஞை 1400 வரை பார்த்திருக்கிறோம். அப்படியானால் மற்ற இடங்களில் ஆக்ஸிஜன் குறைகிறது என்று அர்த்தமா?  ஏனென்றால் உடல் முழுவதும் ஆக்ஸிஜன் நிறைய எடுத்துக்கொள்கிறது. அந்த ஆதாரங்களிற்கு இவ்வளவு நேரம் தான் தேவை என்று தானாகவே  தீர்மானிக்கப்பட்டு அது நடந்து கொண்டிருக்கிறது என்று ரிஷிகள் சொல்கிறார்கள். ஆக ஆக்ஞையில், 1400 அது பின்னிரவு. காலை 3.40 முதல்  காலை 4.50 வரை. கடைசியாக சகஸ்ராரத்தில,; மூச்சு காலை 4.51 முதல் காலை 6 மணி வரை மொத்தமாக கூட்டிப்பார்க்கையில் 21000 மூச்சுக்கள்  அது தன்னுடைய பிராணனை எடுத்துக்கொள்கிறது. இது மிகவும் இயல்பாகவே நடக்கிறது.

ஆதாரங்களை நினைவில் கொண்டு நாம் பிராணன் என்ற மூச்சை அங்கே நிறுத்திப் பயிற்சி செய்வது ஆதாரப் பிராணாயாமம் என்று கூறப்படுகிறது.  ஆகவே அதை எப்படிச் செய்வது?

இப்போது பிராணாயாமப் பயிற்சியினை நாம் எடுத்துக்கொள்வோம். ஆசன இருக்கையின் படி நீங்கள் எவ்வாறு அமர்கிறீர்களோ அவ்வாறே  அமர்ந்து கொள்ளுங்கள். (மாணவர்களை நோக்கி சொல்கிறார்)

அவ்வாறே நான் சொல்வதையும் கேளுங்கள். கேட்டபின் பயிற்சி செய்கிறபோது அதைச் செய்து பாருங்கள்.

ஆக தச வாயுக்கள் என்று சொல்லக்கூடிய அந்த பத்து வாயுக்களிலே முதல் காற்று. உயிர்க் காற்று என்று சொல்லக்கூடிய அந்தப் பிராண வாயு பி ராணன் என்பதை நாம் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். இந்தப் பிராண வாயு தாயினுடைய கருவிலே, அந்தக் குழந்தை கரு வாக வளர்கிற போது பிராணண் என்கிற உயிர்க்காற்றில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறது. கருவில் உள்ள குழந்தை தான் மூச்சு விடாதே!   எவ்வாறு தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும். தாயிடம் இருந்து பிராணனைத் தொப்புள் கொடி மூலம், அந்த இதர வழிகள் மூலம் அந்தக் குழந்தை  தன்னுள் பிராணனை ஐக்கியப் படுத்திக் கொள்கிறது. கருவில் உள்ள குழந்தைக்கு பிராணன் தான் முதல் அறிமுகம். இதை எவ்வாறு நாம் முதலில் ÷ கட்பது. அது நடந்து கொண்டிருக்கிறது. அவ்வளவுதான் (அவையில் சிரிப்பு)

ஆக்ஸிஜன் செல்லவில்லையென்றால் புளு (ஆடூதஞு) பேபி, பிறந்தவுடன் உடனே அழ வேண்டும். இல்லை யென்றால் அழ வைப்பார்கள். அந்த  நுரையீரல் வேலை செய்யவில்லை என்றால் காற்று உட்புகாது. உடல் நீலநிறமாகி விடும். அதை புளு பேபி என்று சொல்வார்கள்.

பிராணனைச் செயல்படுத்துகின்ற பிராணாயாமத்திற்கு என்ன பெயர் என்று கேட்டால் அதை வாசிக்கலை என்று வாசுகிகலை என்றும் மூச்சுக்கலை  என்றும் சரகலை என்றும் சொல்வார்கள். இந்த பிராணக் காற்றினை சரியாகப் பயன்படுத்தினால் மனிதருக்கு மரணம் வராது என்று சொல்கிறார்கள்  யோகிகள்.

என்ன இது புதிய செய்தியாக உள்ளது! அப்போது பிராணாயாமத்தை சரியாக நாம் செய்து விட்டால் நாம் இறக்காமல் இருப்போமா என்று கேள்வி  வரும்.

இந்த உடம்பு என்பது வேறு விஷயம். ஆன்மா என்பது வேறு. உடல் அழியக்கூடியது. ஆன்மா அழியாதது. இதைத் தனித்தனியாக நாம் பேசுகின்ற  போது நீண்ட நேரம் எடுக்கும். ஆக சாதகர்கள் மூச்சுக்கலையைச் சரியாக செய்திருப்பார்களேயானால், செய்து வருவார்களேயானால் அவர்கள் பல் வேறு அனுபவங்களைப் பெற்று அழியாத தேகத்துடன் ஜீவன் முக்தர்களாக இருப்பார்கள் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.

அழியா தேகம் என்பது அந்த ஆன்மா என்கிற தேகம். அழியா தேகம் என்றால் அதை சூட்சும தேகம் என்று எடுத்துக்கொள்ளலாம். தூல உடல். சூட்சும  உடல். காரண உடல் என்றிருக்கிறது. அந்த சூட்சும உடல் அழிவதில்லை. நீங்கள் பிராணாயமத்தினைச் செய்யா விட்டாலும் அந்த சூட்சும தேகம்  அழியாது.

நீங்கள் பிராணாயாமத்தினைக் கற்றுத் தேர்ந்து அதை மேற்கொண்டிருக்கும்போது அந்த சூட்சும தேகத்தைச் சரியான நிலையினைப் பய ன்படுத்திக்கொண்டு அதனுள் சூட்சுமமாக இருக்கும் விஷயங்களைக் கற்றுக்கொண்டு அந்த சூட்சும உலகத்திலே சஞ்சரிக்கின்ற வாய்ப்பு சாதகருக்குக்  கிடைக்கும். சூட்சும உலகத்திலே பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பும் கிடைக்கும் என யோகானந்த பரமஹம்சர் கூறுகிறார்.

சூட்சம நிலையிலே பார்க்கிற போது நமக்கு பிடரிக்கண் இருக்கும். பிடரிக்கண் என்று சொல்லக்கூடிய ஞானக்கண். இந்தக் கண்ணால் நீங்கள்  காணுகின்றபோது இந்த உடல் காண்கின்ற அத்தனையையும் நீங்கள் அனுபவிப்பீர்கள் என்பது அந்த சூட்சமம். இதைச் சித்தர்கள் சொல்லியிரு க்கிறார்கள். பயிற்சியின்போது இது நமக்குக் கிடைக்குமா? சூட்சமத்தை நாம் அனுபவிக்க முடியுமா? சூட்சமத்தை நாம் பார்க்க முடியுமா?  மரணத்திற்குப் பிறகுதான் சூட்சம சாகரத்தை அடைவோமா? நாம் நம்முடைய பிறவி முடிந்தவுடன் அல்லது மரணம் ஏற்பட்டவுடன் அல்லது இந்த  தூலம் அழிந்தவுடன் சூட்சமத்தில் சஞ்சரிக்கின்ற காலம் வருகின்ற போதா! அல்லது தூலத்தில் இருக்கிற போதே இந்த தியானத்தின் வழியாக  சூட்சமத்தை அடைந்து பார்க்கிற போதா! என்றெல்லாம் கேள்விகள் இருக்கிறது. ஆகவே இந்தப் பிராணக்காற்றை நாம் சரியாகப் பயன்படுத்தினால்  இதுவரை சொல்லிய அந்த மரணம் என்பது நிகழாமல் அந்த சூட்சம தேகத்துடன் ஜீவன் முக்தர்களாக வாழலாம் என்பது சித்தர்களுடைய வாக்கு.

இந்த மூச்சுக்கலையினைப் பற்றி நான் ஏற்கனவே உங்களுக்கு சொல்லயிருக்கிறேன், இது 3 விதமான நிலைகளை உடையது,

1) பிராகிருதம்
2) வைகிருதம்
3) கேவல கும்பகம் என்று உள்ளது.

பயிற்சி செய்யாமல் இருக்கின்ற மூச்சுக்குப் பிராகிருதம் என்று பெயர். கட்டுப்படுத்திய அந்த மூச்சுப்பயிற்சி செய்கிறபோது இருக்கிற மூச்சுக்கு  வைகிருதம் என்று பெயர். எவ்வித முயற்சியும் இன்றி எதிர்பாராமல் நிகழ்வது கேவல கும்பகம் என்று பெயர்.

ஆகவே இந்த நிலைப்படி மூச்சுக்களை எப்படி இழுப்பது. எப்படி வெளிடுவது, எந்த அளவு நேரம் உள்ளே வைத்துக் கொள்வது என்பதை  சீடர்களாகிய உங்களுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் என்றாலும் தொடக்கப் பாடமாக எல்லோருக்கும் இருக்கட்டுமே என்பதற்காக அதை  மீண்டும் சொல்கிறேன். மிக மிக பாலபாடம் அல்லது முதற் பாடமாக இருக்கும்.

சாதாரணமாக 1-4-2 என்ற அந்த விகிதப்படி 16 மூச்சை உள்ளே, 16 மூச்சு என்று சொன்னால் 16 வினாடிகள். 16 மாத்திரைகள்  அந்த மூச்சை உள்ளே  இழுப்பது. அது முதலில் உங்களுக்குக் கடினமாக இருக்கும், அந்த நேரத்தை தகுந்தவாறு குறைத்துக் கொள்ளலாம். அது அவரவர்களின் பயிற்சியி னை பொருத்தது. ஆனால் இலக்கு என்பது 16 ஐ உள்ளே இழுப்பதாக அமைய வேண்டும். 16 வினாடிகள் உள்மூச்சு. 16 வினாடிகள் எடுக்க ÷ வண்டும். அதனை 4 மடங்காக 64 வினாடிகள் உள்ளே வைத்துக்கொள்ள வேண்டும். வெளியிடுகிற போது அதனை 32 வினாடிகளில் வெளியிட ÷ வண்டும். உள் என்பது இழுத்தல் என்ற பூரகம். வைத்தல் என்பது சேமித்தல் அல்லது நிறுத்துதல் என்ற கும்பகம், வெளிவிடுதல் என்பது ரேசகம்.  இழுத்துவைத்துக் கொண்டு  வெளிவிடுதல் என்பதால் பூரகம்,ரேசகம்,கும்பகம் என்று மாறுகிறது. ஆகவே அந்த 6 ஆதாரங்களில் 16-64-32  என்பதற்குப் பதிலாக ஆரம்பத்தில் 8-32-16 என்று வைத்துக்கொண்டால் கூட போதும். இப்போது 6 ஆதார நினைவு உணர்வில் வர வேண்டும்.

நாமாக ஒரு ஆதாரத்தின் பெயரைச்சொல்லி இந்த நேரத்தில் நினைவு இந்த இடத்தில் இருக்கிறது என்று செய்வது ஒரு வகை. பயிற்சியில் நாம் மே லோங்கி நிற்கும்போது அல்லது தெளிந்து நிற்கும்போது அந்தந்த ஆதாரங்களில்  தானாக உணர்வு மேலேறி நிற்கும்.

மானசீகமாக அந்த மூச்சிற்கு நாம் ஆதாரங்களை முதலில் உணர்த்த வேண்டும். ஒவ்வொரு இடங்களையும் மூச்சிற்கு சொல்லும்போது நமக்கு நாமே  அறிவுறுத்துவது போல அது அமைய வேண்டும், ஒவ்வொரு ஆதாரங் களையும் பெயரினையும் அதற்கு சொல்லிச் செய்ய வேண்டும். இதை மந்திரச்  சொற்களோடு சொல்ல வேண்டும் என்பது ஒரு வழி அல்லது விதி.மந்திரச் சொற்கள் என்று சொன்னால் அந்த 5 பூதங்களுடைய எழுத்துக்கள்தான்.  அது தான் நமசிவய. இதை ஒவ்வொருவருக்கும் அவரவர்  வழியின் படி சொல்லியிருக்கிறேன், இப்போது அதை எல்லோருக்குமாகச் சொல்கிறேன்,  முதலில் அந்த மூலாதாரத்திற்குரிய நாதம் எதுவென்று கேட்டால் அது ஓம், அதுதான் அதற்குரிய பீஜம்,

அடுத்தபடியாக ஸ்வாதிஷ்டானம் அதற்கு ந அதாவது நம் என்று மகாரத்துடன் சேர்த்துவிடுவது.

மணிபூரகத்திற்கு மம்.
அனாகதத்திற்கு  சிம்
விசுத்திற்கு      வம்
ஆக்ஞைக்கு     யம்

ஆக அந்த ஓமினைச் சொல்லி ஓம் , நம் , மம், சிம் , வம் , யம், ஓம் நமசிவாய என்று சொன்னால் இந்த எழுத்துக்கள் அந்தந்த ஆதாரங்களில் பதிக்க ப்படுகின்றன,

அதை எவ்வாறு பதிப்பது என்று இப்போது பார்ப்போம். ஆறாதாரங்களில் மூச்சை எடுக்கிறபோது முதலாவதாக அந்த மூலாதாரத்தில் 16  மாத்திரைகள் என்பது உள்ளே இழுப்பது, அந்த 16 மாத்திரைகளிலும் ஓம் என்று சொல்வது, ஓம் என்று சொல்கிற போது அந்த மூச்சை மூலாதாரத்தின்  வழியாக போகிற மாதிரி நினைத்துக் கொள்ள வேண்டும். இங்கு மூக்கு மேலே உள்ளது மூலாதாரத்தின் வழியாக மூச்சை எவ்வாறு இழுப்பது  அதற்கான கருவிகள் இல்லையே என்று நினைக்க வேண்டாம். இங்கு நினைவுதான் கருவிகள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

வலமாக மூச்சை இழுக்கிற போது அந்த மூலாதாரத்தில் 16 மாத்திரைகள் ஓம் என்றவாறே மூச்சுப் படுவதாக நினைத்துக்கொண்டு செய்யுங்கள்.  அதற்கு பிறகு 64 வினாடிகள் அல்லது மாத்திரைகள் அந்த மூச்சை ஓம் என்பதைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டு கும்பகம் செய்யுங்கள். அப்÷ பாதும் மூலாதாரத்தை மட்டுமே நினைக்க வேண்டும், அடுத்தபடியாக 32 வினாடிகள் அந்தக் காற்றை வெளியிடுகிற போது, அப்போதும் ஓம்  என்பதை நினைத்துக்கொண்டே அது மூலாதாரத்தில் இருந்து வெளியேறுகிறது என்பதை நினைத்துக்கொள்ள வேண்டும். ஆக இவ்வாறு செய்ய÷ வண்டும்.

இதை அதிகபட்சம் ஐந்து முறை அல்லது குறைந்த பட்சம் இரண்டு முறை செய்ய வேண்டும், ஐந்து முறை செய்தால் மிகவும் நல்லது. அடுத்த ஐந்து  முறை ஸ்வாதிஷ்டானம், நாபிப்பகுதி அங்கே நம் என்ற எழுத்தை மட்டுமே நினைத்துக்கொள்ள வேண்டும். நம் என்ற ஸ்வாதிஷ்டானத்திலே மூச்சை  இழுத்து அதில் படுவதாக. பின்பு இதில் நிறுத்துவதாக. பின்பு அதில் இருந்து வெளியேறுவதாக அதற்குரிய எழுத்துடன்  அதை நினைத்துக்கொண்டே  செய்ய வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு ஆதாரத்திலும் ஐந்து ஐந்து முறை அதற்குரிய எழுத்துடன் நினைத்துச் செய்து வர வேண்டும் இதற்குப் பெயர் பிராண யோகா  என்பதாகும். பிராணாயாமத்தில் இதற்குப் பெயர் பிராண யோகா என்பதாகும் இதைச்செய்தால் கிடைக்ககூடிய பலன்கள் அநேகம். எல்லாவற்றிற்கும்  இது ஒரு மிகப்பெரிய அடிப்படையான பிராணாயாமம். ஆக கடைசியில் அந்த ஆக்ஞையில் யம் என்ற எழுத்தோடு நிறுத்த வேண்டும்.

இப்படியாக பயிற்சி நமக்கு தெளியத்தெளிய மகாரத்தை நீக்கிவிட்டு ஓம் நமசிவய என்று பயிற்சி செய்யலாம், ம் என்பதைச் சொல்ல வேண்டிய  அவசியம் இல்லை. இப்படிப் பயிற்சி செய்கிற போது உங்களுடைய மனம் உங்களுக்குப் பயிற்சி கொடுக்கிறது. மனத்தின் உள்ளே அதைப் புகுத்தி  வைத்திருக்கிறீர்கள். மூளையின் மூலம், அறிவின் மூலம், புத்தியின் மூலம், அப்போது மனமே குருவாக வீற்றிருந்து அதைச் செய்வதற்கு உங்களுக்கு  துணையிருக்கும், பிராணனுக்கு வழிகாட்டும்.

(குறிப்பு- மேற்சொன்ன பிராணாயாமப் பயிற்சிகளை எல்லாம் தகுந்த குருவின் மேற்பார்வையில் பழகுதல் என்பது நலம் சேர்க்கும். இங்கே நடத்தப் பட்ட பாடங்கள் மனக் குறிப்பிற்காக சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்)

 
மேலும் யோக தீபம் »
temple
அத்தியின் புத்திரரை முத்தியின் வித்தகரை
தத்திதன் சோதரரை சித்திதன் நாதகரை
தித்திதன் அஞ்சலரை ... மேலும்
 
temple
மனித வாழ்க்கை என்பது மனிதனாகப் பிறந்த பிறகு அவனுக்கு ஏற்படுகின்றது. அதற்கு முன்பாக அது எவ்வாறு தோன்ற ... மேலும்
 

சர சூத்திரம் ஏப்ரல் 28,2015

சரவழி

சரம் என்பது பிராணாயமத்தில் தான் வருகின்றது.

பத்மாசனத்தில் அமர்ந்து உட்டியான பந்தம் ... மேலும்
 
அடுத்தபடியாக சுழுமுனை நாடியினைப் பார்ப்போம். சுழுமுனை நாடி என்று சொல்கிற போது அது வலது பக்கத்தில்  ... மேலும்
 
நாம் காலை எழும் முன்பாக நம்முடைய கைவிரல்கள் தானாகவே  மூச்சு எந்த நாசியில் ஓடுகின்றது என்பதைப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.