Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
சர சூத்திரம் பிராணாயாமத்தில் சர பிரயோகம்
முதல் பக்கம் » யோக தீபம்
ஆன்ம ஒளி காட்டும் சுழுமுனை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2015
15:37

அடுத்தபடியாக சுழுமுனை நாடியினைப் பார்ப்போம். சுழுமுனை நாடி என்று சொல்கிற போது அது வலது பக்கத்தில்  வருகின்றதா இடது பக்கத்தில்  வருவதா என்று நினைக்கிற போது .இரண்டும் சமமாக வருதலே சுழுமுனை நாடி ஓடுவதற்கு ஏற்ற அமைப்பு. சுழுமுனை என்பது நடுநாடி என்று  அதைச்சொல்வார்கள். அதைக் கவன நாடி என்று சொல்வார்கள். அதை மைய நாடி என்றும் சொல்வார்கள். அதனுடைய பிறப்பிடம் நெற்றிப் பொட்டு, புருவ மத்தி என்றெல்லாம் சொல்வார்கள். அது முதுகந்தண்டிலே செல்லக்கூடிய பாதையில் ஆரம்பத்தில் இருக்கிறது என்று சொல்வார்கள்.

சுழுமுனை நாடி என்பது ஞானத்தைத் தருவது. அது நடு மூச்சு. அழிவாற்றலைத் தரக்கூடியது. எதை அழிக்கும் என்றால் அழிக்க வேண்டிய  தீவினைகளை அழிக்கும். அதன் நிறம் நெருப்பின் நிறம். இதன் ராசி உபய ராசி. உபயராசி என்று சொன்னால் சரம் மற்றும் ஸ்திரம் இரண்டும் சேர்ந் ததுதான் உபயம். இதன் பால் அலி ஆகும். ஆணும் அல்ல. பெண்ணும் இல்லை. இரண்டும் அற்றது. அலி என்று சொன்னவுடனே அதை நீங்கள்  தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஒரு ஆன்மாவிற்கு ஆண், பெண் தன்மை இல்லை. இறைவன் எந்த பாலினத்தையும் சாராதவன். இரண்டுமற்ற  நிலை. இருவினைக்கு அப்பாற் பட்டது. சிவலிங்கத்தை ஆணா அல்லது பெண்ணா என்று கேட்டால் அதை அலி என்று சொல்வார்கள். அரு, உரு.  அருஉரு, அலி என்று சொல்வார்கள். இதற்கான விளக்கங்களை மற்றொரு வகுப்பில் பார்ப்போம்.

இரு நாடிகளிலும் மூச்சு ஒத்து ஓடும் நிலை. ஒத்து ஓடும் நிலை என்று சொன்னால் ஒரே மாதிரியான போக்கு இரு நாசிகளிலும் நிகழ்வதாகும்.  சுழுமுனை நாடியில் வருவதற்காகவே இதனைச் சில சமயங்களில் செய்வோம். முதலில் இரு நாடியிலும் மூச்சு ஒரே சீராக வரவேண்டும். பிறகு அது  மெதுவாக குறைந்து விட வேண்டும். சுவாசிக்க வேண்டும் என்ற உடலின் எண்ணம் வேறு வழியில் சென்று விடுகிறது. ஏனென்றால் நம் கவனம்  கவன நாடியில் இருக்கிறது. (ஒரே சிரிப்பு)

பயிற்சியின் இறுதி நோக்கம் என்னவென்று கேட்டால் சமப்படுத்துவது. சுழுமுனையினை சமப்படுத்துவது. உடல் சூட்டை சமப்படுத்துவது. இரண்டு  சுவாசங்களுக்கும் எந்த வேறுபாடு இல்லாமல் சமப்படுத்துவது. சுழுமுனை நாடியினை சமமாக இருக்கப்பயில்வதால் சமாதி யோகம் என்ற நிலை  வாய்க்க இந்த சுழுமுனை நாடி பயன் உள்ளதாகும். அது மட்டுமல்ல உடலின் அக இயக்கங்களை மெதுவாக இயல்பு நிலைக்குக் கொண்டுவந்து பின்  ஓய்வு நிலைக்குக் கொண்டு செல்வது.

இன்று ஒரு மருந்தாளர் நண்பரிடம் பேசிக்கொண்டிருந் தேன். இன்று நாம் எடுத்துக்கொள்ளக் கூடிய அலோபதி மருந்து. அது பூமியில் இருந்து  எடுக்ககூடிய இராசயனப் பொருளில் தயாரிக்கப்படுகிறது. அது ஒன்று மட்டுமில்லை. பல்வேறு இரசாயனப்பொருட்களின் கலவையாக அந்த மருந்து  இருக்கும். அது திட, திரவ, வாயு வடிவில் எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம். வாய்வழி மருந்தாகவோ அல்லது இரத்தத்தினுள், நரம்பி னுள். தசையினுள் செலுத்தும் ஊசி மருந்தாகவோ எந்த வடிவில் எடுத்துக்கொண்டாலும். சாப்பிட்டாலும் கடைசியில் அதை செரிமானம் செய்ய ÷ வண்டிய பொறுப்பு எங்கேயிருக்கிறது என்று கேட்டால் அது கல்லீரல் தான். கல்லீரல் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நம் உடலில் அதிகம் வேலை  செய்வது என்றால் அதைக் கல்லீரல் என்று சொல்லலாம்.
 
இந்த உயிரிற்குத் தேவையான சத்துக்களை உடலிற்கு அது கொடுப்பதாக உள்ளது. நீங்கள் ஏதாவது ஒரு அலோபதி மருந்தை எடுத்துக்கொண்டீர்கள்  என்றால் அந்த மருந்திற்கு வீர்யம் குறைந்தபட்சம் 3 மணி நேரம் என்று சொல்கிறார்கள். அவ்வளவு நேரம் உடலில் தங்கும். அந்த மருந்தின் மூலமாக  என்ன மாற்றம் நிகழ வேண்டுமோ அந்த மாற்றத்தை நிகழ்த்தி விட்டு அதற்கு பின்பாக இது வெளியே சென்று விடும். சில நேரங்களில் சில மருந்துகள்  அதிகமான நேரம் கூடச் செயல்படும். குறிப்பிட்ட இடைவெளியில் நாம் அதை மீண்டும் கூட எடுத்துக் கொள்கிறோம். மருந்துவரின் பரிந்துரையி ன்படி. வாக்ஸின் என்று சொல்லக்கூடிய வியாதியுடன் போரிடக்கூடிய அணுக்களை நாம் உடம்பில் ஏற்றிக்கொள்கிறோம். பிந்தைய காலத்தில் அது  சம்பந்தமான நோய் வரும்போது அந்த வாக்ஸின் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எதிர்த்து செயல்பட்டு நோய் வராமல் பாதுகாக்கும். முக்கியமான  அபாய வியாதிகளுக்கு வாக்ஸின் கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

அலோபதி மருந்துகள் நோயின் தாக்கத்தைக் குறிப்பிட்ட நேரம் நிறுத்தி வைப்பது போல அக இயக்கங் களை இந்த சுழுமுனை நாடி எவ்வளவு நேரம்  நிறுத்தி வைக்கும் என்றால் உங்களுடைய தியானம் இருக்கும் வரை தான் நிறுத்தி வைக்கும். தியானம் கலைந்து விட்டால் பழைய நிலையில்  அனைத்தும் செயல்பட ஆரம்பிக்கும். அக இயக்கங்களைக் கட்டுப்படுத்துவது நம்முடைய தலையாய பணி. புற இயக்கங்களை அல்ல.

ஆரம்பத்தில் சாதகர்கள் புற இடையூறுகளைத் தவிர்க்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்கள் இடையூறு இல்லாத இடங்களைச் சாதனையின்  ஆரம்பக் கட்டங்களில் தேர்வு செய்து பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் பயிற்சி மேம்பட்டு எந்த சூழ்நிலை வந்தாலும் அதிலும் திய õனம் செய்யப்பழகி விடுவீர்கள். தியான நிலையில் அக இயக்கங்கள் நின்றுவிடுகிறது எதனால் என்றால் சுழுமுனை நாடி அந்த வேலையினைச்  செய்யும். இந்த சரத்தில் இவ்வாறு இருந்தால் இப்படி நிகழும்.

முதலில் நாம் இடது நாசியில் செய்யக்கூடிய விஷயங்கள், பிறகு வலது நாடியில் இறுதியாகத் தியான நிலைக்கு உகந்த சுழுமுனை நாடி என்று  வரிசையாகப் பார்த்தோம். மற்ற இரண்டு நாடிகளை விட யோக சாதனைக்குச் சுழுமுனை நாடி என்பது மிகவும் முக்கிய மானது என்பதை நீங்கள்  தெரிந்து கொண்டிருப்பீர்கள்.

சர திசைகள்

இப்போது சர திசைகள் என்பதைப் பார்ப்போம். இதை சித்தர்கள் சொல்கிறார்கள். சரம் ஓடுகின்ற பக்கம் பூரணம் என்று பெயர். சரம் ஓடாத பக்கம்  சூன்யம். பூரணம் என்பது வெற்றியின் திசை என்று சொல்வார்கள். உனக்கு சரம் இடது பக்கமாக ஓடிக்கொண்டிருந்தால் உனது காரியம் இடது  பக்கத்திலே நிகழ்ந்து கொண்டிருந்தால் அது உனக்கு வெற்றியினைத் தரும் என்று பொருள். அந்தச் சமயம் இடது பூரணம் ஆகவும், வலது சூன்ய மாகவும் அமைகிறது.

இப்படி சரத்தை அறிந்து நாம் மிகவும் சிரத்தையோடு யோகம் செய்வதனால் என்ன பலன்?

இதை ஒளி, தவம், பயன் என்று நாம் மூன்றாகப் பிரிப்போம். இன்னும் கூறப்போனால் இந்த உலகத்தொடர்   -பற்றிருக்கக்கூடிய ஞானியர்கள்  அவர்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும்; தன்னலம் அற்ற சிந்தையினால் அவர்களுடைய சக்தியின் பலன் நமக்கு கிடைத்துக் கொண்டேயிருக்கும்.

எங்கோ தூரத்தில் இருந்தாலும்; சூரியனுடைய ஒளி உலகெங்கும் பரவுவதைப்  போல நீ எங்கிருந்தாலும் அது உன்னை அடைவதைப் போல ஞானி யர்களின் ஒளி எல்லா இடத்தினையும் அடையும்.

ஒரு விளக்கின் வெளிச்சம் அறையின் இருட்டை விரட்டுவது போல தியானம் செய்கிறவர்கள் , யோகம் செய்கிறவர்கள், நன்மை செய்பவர்கள்  எத்தகையவர்களோ அவர்களைச் சுற்றிலும் அந்த அளவு நன்மைகள் நடக்கின்றன. அந்த வட்டத்திற்குள் வருகின்றவர்கள் எல்லோரும் நன்மை  பெறுவார்கள்.

ஆன்மீக இன்பத்தை உணர்வதற்கு நம்முடைய உடலில் உள்ள ஆற்றல்களையே உபயோகித்து நாம் ஆன்ம இன்பம் நாடுகின்றோம். இடகலை, பி ங்கலை, சுழுமுனை அல்லது சுழுத்தீ என்று சொல்கின்ற அந்த 3 நாடிகளையும் சேர்த்து சரவழி என்று கூறுகிற போது. அந்த இடம், வலம், நடுநிலை  என்ற அந்த கால்களின் பரிமாற்றத்தை அல்லது ஓட்டத்தை உணரத்தக்க வகையிலே பிராணாயாமம் இருக்கிறது. அந்த பிராணாயாமத்திலே நாம் சரம்  என்ற மூச்சுக்கொள்கை அல்லது மூச்சுச்சட்டம் அல்லது மூச்சின் பயன் என்றமைகிற  இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு வருகின்றோம். எனவே  மூச்சின் வழியாக உடம்பினுடைய ஆற்றலை அதிகம் உருவாக்கிக் கொள்வது. அப்படி உருவாக்கிக் கொள்கின்ற அந்த சரவழி என்ற மூச்சினுடைய  சிறப்புகளைப் பார்ப்போம்.

இடது பக்கம் மூச்சு சென்றுகொண்டிருக்கிற போது, வருகின்றபோது அது இடகலையாக இருக்கிற போது அது லோகாதயமான மனித வாழ்க்கைக்கு  இடது நாசியில் இருந்து வருகின்ற மூச்சினை அதை சரமாகப் பார்க்கின்ற போது, செய்கின்ற பல செயல்பாடுகள், வெற்றிகளைத் தருகின்றன என்றும்,

வலது மூச்சிலே நாம் கல்வி கற்றலும் ஞானம் பெறுதலும் இன்னும் ஆன்ம வழியிலே உயர்வு பெறுகின்ற குரு உபதேசம் போன்ற அநேக சத்காரிய ங்களுக்கு அந்த வலது நாசி சரத்தினை உயர்வாகச் சொன்னார்கள். சுழுமுனை என்ற நாடி தவத்திற்கே ஏற்ற நாடி என்றும். யோகம் பயில்பவர்கள்  அந்தச் சுழுமுனை நாடியினை பற்றியிருக்கின்ற போது அவர்களுக்கு அந்தத் தவம் கைகூடும். சமாதி நிலை சித்திக்கும். அதன் வழியாக அவர்கள் ÷ மலும் மேலும் பல படிகள் முன்னே சென்று இறைவனுடைய திருவருளைப் பெறுவார்கள். எனவே அந்தச் சுழுமுனை நாடி யோகத்திற்கு ஏற்ற நாடி.

கடந்த வகுப்பிலே இடது மூக்கிலே வருகின்ற அல்லது சுவாசம் சரம், அப்போது லோகாதயமான காரியங்களுக்கு அது சிறப்பானது என்று சொல்கிற  போது அது எப்போது வரும் என்று தெரியாத காரணத்தினால் அது வருவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை வரும் வகுப்புகளில்; பார்ப் போம் என்று சொல்லியிருந்தேன்.
நாடிசுத்தி மற்றும் சில மாத்திரைகளைக் கொண்ட கும்பகப் பயிற்சி போன்றவற்றை நீங்கள் மேற்கொண்டிருப்பீர் கள். இவையெல்லாம் பிராணாய மத்தினுடைய சில அடிப்படைகள் தான். இன்னும் சொல்லப்போனால் வெறும் நாடிசுத்திப் பயிற்சியினை மட்டும் வைத்துக்கொண்டே அதுதான் பி ராணாயாமம் என்று சொல்லி வருகின்றார்கள். ஆனால் பிராணாயாமம் என்பது முழுவதுமாக நம்முடைய மூச்சுக்காற்றினைக் கட்டுப்படுத்துவது.

கட்டுபடுத்துவது என்று சொன்னால் சீரான மூச்சினுடைய ஓட்டத்தை முதலில் நாம் பழகிக்கொள்ள வேண்டும். உள்ளிழுப்பது மற்றும் வெளி  விடுவது இரண்டிலும் மூச்சின் வேகம் ஓரே மாதிரியாக இருந்தால் அது சீரான வேகம் என்பார்கள். அதை ஆங்கிலத்தில் ஈவன் ப்ளோ. அதைப் பயி ல்வது கூட ஒரு ப்ராணாயாமம். ஆக அதைத் தெரிந்து கொண்டு கொஞ்சம் நெடிய சுவாசம். அதை தீர்க்க சுவாசம் என்று குறிப்பிடுவார்கள்;.

தீர்க்க சுவாசம்

தீர்க்க சுவாசம் என்று சொன்னால் நமது மூச்சினை நுரையீரல் முழுவதுமாகக் கொள்ளும் அளவுக்கு அதை நிரப்பிப் பிறகு அதே போல மூச்சை சீராக  வெளியிடுவதும் ஒரு கலை. இதை எப்போதும், எந்த நிலையிலும் மூச்சை அவ்வாறு உள்ளிழுக்க மற்றும், வெளிவிடப் பழகிக் கொண்டோம்  என்றால் நாம் அடுத்த பிராணாயாமத்திற்கு அவசரமாகச் சென்றுவிடலாம். அது வராதவரை அதாவது மூச்சை ஒரே மாதிரியாக சுவாசிக்க வேண்டும்  என்ற மாத்திரைக் கணக்கு தெரியாத வரை நாம் அடுத்த சுவாசத்திற்குச் செல்லக்கூடாது. அதனால் தான் பல பிராணாயாம முறைகளை உங்களுக்கு  நான் சொல்லாமல் இருக்கின்றேன். அப்படியென்றால் அத்தனையும் எனக்கு தெரியும் என்றில்லை பொருள். தெரிந்த சிலவற்றில் பழுதில்லாமல் இ ருக்க வேண்டும் அவ்வளவு தான்.

இடது பக்கத்தில் சரம் வந்து கொண்டிருக்கும்போது வலச் சரம் என்னவாக இருக்கும். ஒரு பூரணம் மற்றொன்று சூன்யம். மூச்சு வருகின்ற கலை பூ ரணம். மூச்சுவராத கலை சூன்யம். இப்போது அதை நான் குறிப்பிடவில்லை என்றாலும் இரண்டு மூக்கிலும் மூச்சு வந்து கொண்டிருக்கிற போது எந்தச்  சரத்தில் அதிகமாக வருகின்றது என்பது தான் அடிப்படை. எதில் அதிகமாக வருகின்றது மற்றும் எதில் குறைவாக வருகின்றது என்பதைக் கவனிக்க  வேண்டும். அப்போதுதான் எந்தக் கலை ஓடுகின்றது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். நிறையப் பேருக்கு இந்த வித்தியாசம் தெரியாமல் இரு க்கிறது.

இன்னும் சொல்லப்போனால் இரண்டு மூக்கிலும் எப்போதும் ஒருவருக்குச் சரம் வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகப்பெரிய  தவறாக முடியும். மிகப்பெரிய தவறு என்று சொன்னால் என்ன அது. நடக்கக்கூடாது ஒன்று நடந்து விடும் என்று சொன்னால் அது மரணம் தான். அது  நிகழ்ந்து விடும்.

ஆனால் மரணம் என்பது நமது கையில் இல்லை என்று சொன்னாலும் கூட, இரண்டு மூக்கிலும் ஒரு வாரத்திற்கு மேலாக சரம் சமமாக ஒருவருக்கு  வருகின்றது என்று சொன்னால் அவருக்கு மரணம் மிகவும் சமீபத்தில் உள்ளது என்று ஞானிகள் சொல்கின்றனர்.

கேள்வி - இரண்டு மூக்கிலும் சமமாக ஓடினால் சுழுமுனை நாடி என்று சொன்னீர்களே?

பதில் - இல்லை. தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். பிராணாயாமம் செய்கிற போது அந்த சமநிலையினை நாம் சிரமப்பட்டு அதை  ஏற்படுத்துகின்றோம். பிராணாயாமம் முடிந்தவுடன் அந்த கலை மறுபடியும் மாறிவிடும். ஒன்றுமே செய்யாதவர்களுக்கு இரண்டு பக்கமும் வரு கின்றது என்று சொன்னால் என்ன அர்த்தம்?

நுரையீரல்களிலிருந்து வருகின்ற சமமான காற்று சுழுமுனையினைத் தொடுகின்ற, தொட முயற்சிக்கின்ற பயிற்சி சுழுமுனைப் பயிற்சி. ஆனால் எந் தப் பயிற்சியும் இல்லாமல் சாதாரணமாக ஒருவருக்கு இயல்பாக அந்த நிலை வந்துகொண்டிருக்குமேயானால் அது உடல்நலக்கேடு மற்றும் அதை  இறுதிப்பயணம் என்றும் கூட சொல்வார்கள். உதாரணத்திற்கு பாதுகாப்பான பயணத்திற்காகச் சாலையில் இடது புறமாகச் செல்கிறோம். எதிரில் வ ருகிறவர் அவருக்கு இடது புறத்தில் வர வேண்டும் என்பது விதி. இவ்வாறின்றி எதிர் எதிர் வந்தாலோ சென்றாலோ அவரவர்க்குரிய இடதினை  இஷ்டம் போல் மாற்றிக் கொண்டாலோ என்னவாகும்? விபத்துதான் மிஞ்சும். சில சமயம் உயிர் உடலுக்கும் மிஞ்சுவதில்லை. இந்த உதாரணத்தை   நியதிகளின் அடிப்படையில் அல்லது இயற்கையின் நியதியின் அடிப்படையில் நிகழ்வதாகும்.

எனவே எந்த நாசியில் மூச்சு அதிகமாக வருகிறதோ அதைத்தான் சரத்தின் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். சிறிறு அழுத்தமாகவும்   மற்றுமொன்று அழுத்தம் குறைவாகவும் இருக்கும்.

சில காரியங்களிற்காக வலது மூக்கில் சுவாசம் வரவேண்டும் என்றால் சரம் பார்ப்பது என்ற வகையிலே வலது மூக்கில் சரத்தைக் கொண்டுவர ÷ வண்டும் . ஆனால் சரம் என்ற சுவாசமானது இடது மூக்கிலே வருகின்றது. அதை வலது சரத்திற்கு மாற்ற வேண்டும் என்றால் அப்போது தான் நமது  ரிஷிகள்  சொன்ன வழியினை மேற்கொள்ள வேண்டும்.

இடது பக்கத்தில் வந்து கொண்டிருப்பதை அப்படியே அடைத்துவிட வேண்டும். இப்போது வலது மூக்கில் குறைவாக வந்து கொண்டிருக்கிறது என்று  வைத்துக் கொள்ளுங்கள். அந்த மூக்கிலே நன்றாக மூச்சை இழுக்க வேண்டும். அதை கும்பகமாக இருக்கின்ற போது இரண்டடி நடக்க வேண்டும். அ ப்போதும் மாறவில்லை என்றால் மீண்டும் செய்ய வேண்டும்.

மீண்டும் சரத்திற்கு வருவோம். பிறகு இந்த சரத்தைத் தத்துவங்களாக சொல்லியிருக்கிறார்கள். நமக்கு இடது பக்கம் மற்றும் வலது பக்கம் என்ற மூ ச்சின் வேறுபாடு நமக்குத் தெரியவில்லை என்றால் அதை  எவ்விதமாக பார்ப்பது? (மூக்கை தொட்டுக்காண்பிக்கிறார்)

சரத்தில் பஞ்சபூதம்

மூக்குத்தண்டு இது. மூக்கினுடைய இதழ் நடுவில் உள்ள ஒரு குருத்தெலும்பு அதை இரண்டாகப் பிரிக்கிறது. இப்போது இடது, வலது என்பதை  விட்டுவிட்டு எந்த மூச்சு வருகின்றதோ அந்த மூச்சு மூக்குத்தண்டை ஒட்டி அதாவது உள்சுவரை ஒட்டி வருமேயானால் அது மண் தத்துவம்.  புரிகின்றதா? அதை கண்டுபிடிக்கிறது எவ்வளவு கஷ்டம் என்பதை பாருங்கள். இதை சரத்தில் பஞ்சபூதம் என்று கவனத்தில் கொள்ளுங்கள். இப்÷ பாது அந்த மாதிரியாக மூக்குத்தண்டை ஒட்டி வராமல் நேராக வரும் என்றால் அது நீரின் தத்துவம் (அப்புதத்துவம்). அடுத்தபடியாக மூச்சைக் கீழே  விடுவது மற்றும் மேலே விடுவது என்ற இரண்டையும் சேர்த்துக்கூறினோம்.

அக்னியினைப் பொருத்தவரை அதைத் தேயு என்று கூறுவார்கள். பொதுவாக நமது உடலில் காய்ச்சல் வரப்போகின்றது அல்லது அது ஏற்படும்படிய õன சூழ்நிலை இருக்கிறது என்றால் அப்போது நம்முடைய மூச்சு சூடாக இருக்கும். அதன் வேகம் மிக விரைவாக இருக்கும். அந்த மாதிரியாக மூச்சு  வந்தால் அது தேயு தத்துவம். காய்ச்சல் வந்தால் தான் அவ்வாறு வரவேண்டும் என்பதில்லை. அது சாதாரண நிலையிலும் வரும். ஆனால் இந்த ÷ வறுபாட்டை துல்லியமாகப் பார்க்க வேண்டும்.

பிராணாயாமத்தில் என்னென்ன உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காகத்தான் நான் இதையெல்லாம் கூறுகின்றேன். முன்பாக மூக்குத்தண்டை  ஒட்டி வந்தால் அது மண் தத்துவம் என்று கூறினேன். அதற்கு எதிர்புறமாக ஒட்டி வந்தால் அது காற்றுத் தத்துவம் ஆகும்.

இதை அறிவது சற்று சிரமமான விஷயம் என்றாலும் பிராணாயாமத்தை வழக்கமாக செய்து வந்தால்  இந்த நுண்ணிய வேறுபாட்டை நாம் கண்டுபி டிக்க முடியும். ஏனென்றால் சாதகனுடைய முக்கிய வேலை அதுதானே. அடுத்தபடியாக ஐந்தாவதாக அந்த ஆகாசத் தத்துவம். ஆகாசம் எப்படி  விரிந்து பரந்து கிடக்கிறதோ அது போல.

ஒவ்வொரு அணுவிற்குள்ளும் ஆகாயத்திற்கான இடம் இருக்கின்ற போது இவ்வளவு பெரிய மூக்கிற்குள் ஆகாசம் இருக்குமா இல்லையா என்பதை  நினைத்துக்கொள்ளுங்கள். மொத்தத்தில் காற்று எல்லா இடத்திலும் பரவி வரும் என்பதால் அது ஆகாயத் தத்துவம். மூச்சுக்குழல் வழியாக வருகின்ற  காற்றானது மூக்கின் அனைத்துப் பகுதிகளிலும் நிரம்பி வந்தால் அது ஆகாசத்தத்துவம்.

சரத்திற்கான நிறங்கள்

சரத்திற்கான நிறங்கள் அறிவது என்பது மேலும்  கடினம் தான். இருப்பினும் நீண்ட நெடிய பயிற்சிக்குப் பின் உணர வேண்டிய ஒன்று. இதை யே õகிகள் கூறியுள்ளனர். அதையே நானும் உங்களுக்கு கூறுகின்றேன்.  முதலில் வலதில் வருகின்றதா அல்லது இடதில் வருகின்றதா என்று  சொன்னீர்கள். பின்னர் அதற்கு பஞ்ச பூதத்துவம் என்று சொன்னீர்கள். அடுத்து சரத்தில் நிறங்கள் என்று சொல்கிறீர்கள். இது மிகவும் பிரச்சனையான  விஷய மாயிற்றே என நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது.

.............. (அவை முழுவதும் சிரிப்பு)

இதுவும் பஞ்ச பூதங்களுடன் சேர்ந்த நிலைதான். முதலில் மண் தத்துவத்தைக் கூறினேன். அந்த நிலையில் மூச்சுக் காற்று வருகின்ற போது அது  பொன்னிறமாக உள்ளது. இதை யார் பார்ப்பார்கள்? இதில் கற்றறிந்த சான்றோர்களே! ஒருவரை எதிரே உட்கார வைத்து அவருக்கு இன்ன மூச்சு வந்து  கொண்டிருக்கிறது என்று பார்த்த
மாத்திரத்தில் அவர்கள் அறிவார்கள்.

அக்னி என்ற தேயு தத்துவத்தை ஒட்டி வந்தால் அது செந்நிறம். சிவப்பு கலந்த நிறம். முழுவதுமான சிவப்பு என்று கூற முடியாது. மாலை சூரியன்  மறைந்த பிறகு உள்ள செவ்வானத்தின் நிறம். அதற்கடுத்தது  அப்பு என்ற தண்ணீரின் தத்துவம் நிறம் வெண்மை.

அடுத்தபடியாக காற்றுத் தத்துவம் நிறம் கருமையாக இருக்கும். கருப்பு என்றால் கரும்புகை நிறத்தை ஒத்த கருப்பு. மூக்கின் எல்லா பகுதிகளிலும்  படும்டியாக வருகின்றது ஆகாய தத்துவம் என்று சொன்னேன் அல்லவா. அப்படி வருகின்ற போது அதனுடைய நிறம் ஸ்படிகம். நிறமற்றது ஆனால்  எல்லா நிறத்தையும் பிரதிபலிப்பது.

சரத்திற்கான சுவைகள்

இப்போது அதைப் பஞ்ச பூதத்தை ஒட்டிய சரத்தின் சுவையறிதல். மூச்சில் சுவை இருக்குமா என்று கேள்வி எழுந்தால் அதற்கு இருக்கிறது என்பதே  பதில். முன்பாக தத்துவம் என்று சொன்னேன். இப்போது அதை கூறு என்று வைத்துக் கொள்ளுங்கள். மண்ணிண் கூறிலே சரம் ஓடினால் அப்போது  விழுங்குகின்ற எச்சில் சற்று இனிக்கும். தண்ணீர் கூறு வருகின்ற போது சரம் ஓடினால் சற்று துவர்ப்பாக இருக்கும். நெருப்பின் கூறிலே சரம் ஓடினால்  காரமாக இருக்கும். காற்றின் கூறிலே சரம் ஓடினால் புளிப்பாக இருக்கும். வானத்தின் கூறிலே சரம் ஓடுகையில் அது கசக்கும். இப்போது சரத்தின்  நிறத்தைப் பார்த்தோம். சுவையினைப் பார்த்தோம். சரத்திற்கு வடிவங்களும்; அல்லது பரிமாணங்களும் உள்ளது என்பதையும் அடுத்துப் பார்ப்போம்.

சர வடிவங்கள்

மண் சரத்திற்கு எட்டு கோணங்கள். தண்ணீருடைய சரத்திற்கு அஷ்டமி பிறை போல வடிவம். அடுத்ததாக நெருப்புதத்துவம் முக்கோணம். காற்றின்  தத்துவம் அறுகோணம். வானின் சரம் பரிமாணம் வட்டம்.

அடுத்தபடியாக சரத்தின் நீளம்.

மேற்கூறியவற்றில் எல்லாம் சரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நீளத்தை உணர்ந்து என்ன சரம் என்று அறிந்து கொள்ளலாம். மண் சரம்  வந்தால் 12 அங்குலம். ஓரளவுச் சரியாக மற்றும் ஆரோக்கியமாக மூச்சு விடுகிறவர்கள் 12 அங்குல மூச்சை விடுவார்கள்.

நல்ல ஆரோக்கியம் நல்ல உடல் நிலை கொண்டவர்களுக்கு 16 அங்குல மூச்சு இருக்கும். இதில் 16 அங்குலம் என்பதை தண்ணீர் தத்துவம் என்று  குறித்துக்கொள்ளுங்கள். நெருப்புதத்துவம் 8 அங்குலம். காற்றுத் தத்துவம் 4 அங்குலம். வான் தத்துவம் 1 அங்குலம். அதனால் தான் நாம் தியானத்தில்  இருக்கின்ற போது மூச்சு சிறிது சிறிதாக குறைந்து ஒரு அங்குலமான வான் தத்துவத்திற்கு வருகிறது. அதுவும் குறைந்து நாம் ஆழ்ந்த தியானத்திற்கு  செல்கிறோம். இப்போது ஓரளவு எவ்வாறு என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.

சுவாசப் பிரமாண நிலை

மாத்திரைகள் பற்றிக் குறிப்பிடாமல் சுவாச தேசம் அங்குல நீளப் பரிமாணத்தில் குறிப்பிடுவது அறிந்து கொள்வதற்கு  எளிதாகும்.

மாத்திரைகள் என்றால் சுவாசங்கள் பயண தேசங்களுக்கு நேரங்களைச் சரியாக நிர்ணயித்துச் செய்வது. இதுதான் பிரதானமாகக் கொள்ளப் படுகின்றது. முனிபுங்கவர்கள் இதனைப் பற்றியே அதிகம் கூறியுள்ளனர்.

மனித சாகரம் நல்ல ஆரோக்கியம் கொண்டவர் களுக்கு அவர்கள் பணி பொறுத்தும், எண்ணங்கள், செயல்கள் பொறுத்தும் சுவாச நீள அளவில்  வித்தியாசப்படும் என்பதை அறிந்து  ஓரளவு நீளத்திலும், நல்ல பயிற்சியாளருக்கு பயன் கிட்டுவதற்காக மாத்திரை   (நேர, கால, பரிமாணங்களில்)  அறிவுறுத்தி உள்ளனர்.

உதாரணமாக மானுட சாகரத்திற்கு சுவாசம் உள்ளே செல்வது 10 அங்குலம், வெளி விடுதல், 12 அங்குலம். நடக்கும்போது 24 அங்குலம், ஓடும்போது  42 அங்குலம், உறவு கொள்ளும்போதும், உறங்கும்போதும் 60 அங்குலம் அல்லது 50 அங்குலம் உண்ணும்போதும், உவட்டும்போதும் 18 அ ங்குலமாக ஓடும். இந்த சுவாசக்கணக்கு சாதாரண நிலையில் நடைமுறையில் இருக்கிறது.

எனினும் இது அதிகமே. இதைக் குறைத்தாக வேண்டும்;. இவ்வளவு நீளமாகப் போகின்ற சுவாசத்தைத் தன்னால் இயன்ற வரை சிறிது சிறிதாகக்  குறைக்க வேண்டும். 12 அங்குலம் உள்ளிருந்து வெளி ஓடி அதில் 4 அங்குலம் கழித்துப் பார்க்கையில் 8 அங்குலம் நின்ற இடத்தில் நிலையாகும்.  இவ்வாறாகில் அதிக பட்ச வயது 120 எனக் கூறுகிறார்கள். மேலும் சுவாசத்தைப் பந்தனம் செய்வதால்  அதாவது குறைத்துக் கொள்வதனால் நீண்ட  ஆயுளை உடையவர்களாக இருக்கலாம் என்பது  முனிவர்கள் வாக்கு.

சாதாரணமாக 21600 சுவாசம் நடக்கின்றவர்களுக்கு  120 வருடம் ஜீவித்திருக்கலாம். ஆனால் இன்றைய கால மனிதர்கள் 61600 சுவாசங்களை  நடத்துகிறார்கள். எனவே மனிதர் விடும் சுவாசம் எவ்வளவுக்கு எவ்வளவு குறையுமோ அவ்வளவு வயது ஏற அதிக வாய்ப்பிருக்கிறது. அதே சம யம் திடீரென்று ஓரேடியாக சுவாசத்தைக் குறைக்க முயற்சிக்கக் கூடாது.

சரத்தின் காலம்

எப்போதெல்லாம் சரம் பார்க்க வேண்டும். எப்போதும் சரம் பார்ப்பது அவசியமா? நாம் அதையே தொழிலாகவா வைத்துக்கொண்டிருக்கிறோம்.!

பொழுதுபுலரும் முன்பாக அதிகாலையில் 5 நாழிகை இருக்கின்ற போது பொழுது புலர்ந்தால் அது 6 மணி. 24 மணி நேரம் 60 நாழிகை  என்று  சொன்னால் இரண்டரை நாழிகை 1 மணிநேரம். ஆக 5 நாழிகை என்று அவர்கள் சொல்லியிருப்பதால் நான் அவற்றை மணிக்கணக்கில்  மாற்றிச்சொல்கிறேன்.

அப்போது காலை 4 மணிக்கு எழுந்தவுடன் நமது மூச்சை கவனிக்க வேண்டும். அப்போது என்ன சரம் ஓடுகின்றது என்பதை கவனித்தார்கள் சி த்தர்கள். 4 மணிக்கு காலையில் என்ன சரம் வேண்டுமோ அதைப் பார்ப்பார்கள். வரவேண்டிய சரத்திற்கு மாற்றிக்கொள்வார்கள். அதுதான் ஆயுள் நீ ட்டிப்புக்குச் சரியான வழி என்று அவர்கள் கணித்து வைத்திருக்கிறார்கள்.

எந்தெந்தக் காலத்தில் எந்தக் கலை ஓடவேண்டும் என்பதைப் பார்ப்போம். வளர்பிறை காலத்தில் அதிகாலை 4 மணியின் போது (பிரதமை, துவிதியை,  திரிதியை) என்ற அந்த மூன்று நாட்களுக்குமே சந்திரகலை ஓட வேண்டும். அடுத்த 3 நாட்களான சதுர்த்தி  மற்றும் பஞ்சமி,            சஷ்டி நாட்களுக்குச்  சூரியகலை வர வேண்டும். தேய்பிறைகளுக்கு ஒன்றும் சொல்லவில்லை. எனினும் தேய்பிறை கலைகளைப் பற்றி அடுத்து வருகின்ற வகுப்பில் கூறு வேன்.

சரத்திற்கான நட்சத்திரங்கள்

அடுத்தபடியாக சரத்திற்கு நடத்திரம் பார்ப்போம்.

12 நட்சத்திரங்களில் சூரிய கலை ஓட வேண்டும். அது என்னவென்றால் பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம். கேட்டை,  மூலம்; , ரோகிணி, சதயம், உத்திரட்டாதி ஆகும்.

அடுத்ததாக இடகலை என்ற சந்திர கலை

மீதம் உள்ள 15 நட்சத்திரங்கள்  அஸ்வினி, பரணி. கார்த்திகை, மிருகசிரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம் மற்றும் ஆயில்யம், மகம், பூராடம், தி ருவோணம், அவிட்டம், உத்திராடம், பூரட்டாதி, ரேவதி

சரத்திற்கான கிழமை

அடுத்ததாக சரத்திற்குக் கிழமை
சூரிய கலை ஓட வேண்டிய கிழமை
ஞாயிறு. செவ்வாய். வியாழன். சனி
சந்திர கலை ஓட வேண்டியக் கிழமை
திங்கள், புதன், வெள்ளி

இப்படியாக இருந்தால் நாம் நலத்தோடு இருக்கிறோம். நலம் பேணுவோம் என்று பொருள். இப்படி இல்லை என்றாலும் நாம் பிராணாயாமத்தில் சரி  செய்து கொள்ளலாம். இப்படித்தான் கலைகள் வரவேண்டும் என்ற நியதி இருந்தாலும்; இப்படி இல்லாவிட்டால் என்னவாகும் என்பதையும் பார்ப் போம்.

அதாவது சூரிய கலை ஓடும் நாளில் அதற்கு பதிலாக சந்திர கலையும் மற்றும் சந்திர கலை ஓடும் நாளில் அதற்கு பதிலாக சூரியகலையும் வந்தால்  எத்தனை நாள் அவ்வாறு வந்தால் என்ன தீங்கு வரும் என்று அறிந்து கொள்வதாகும். ஒருவாரம் அப்படி நடந்தால் உடம்பு அழிவு தோன்றுவதற்கு  அறிகுறி. மாறாக சரியான வழியில் சரம் நடந்தால் உடம்பின் உறுதி மேம்படும்.

சரம் பார்ப்பது பரம் பார்ப்பதாகும் என்று சொல்லியிருக் கிறார்கள் யோகிகள்.

இரு தத்துவங்களாகப் பார்க்கின்ற போது உள்மூச்சு சக்தி. வெளிமூச்சு சிவம்.

சரத்தை விடுவது நஞ்சுண்பதற்குச் சமம் ஏன்? நன்றாக இதைப் புரிந்து கொள்ளுங்கள். மூச்சை வெளிவிட்டால் விஷத்தை சாப்பிடுவதற்குச் சமம். ஏன்  உள்ளே ஆக்ஸிஜன் இல்லை. பிறகு அதுதானே வரும். அதை இப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர எதிர்மறையாகப் பொருள்  கொள்ளக்கூடாது.

பிராண வாயுவினைக் குதிரையாக்கி பிராணண் சவாரி செய்கிறது. இன்றைய விஞ்ஞானப்படி உடம்பின் ஒவ்வொரு பகுதிக்கும் ஆக்ஸிஜன் ÷ வண்டும். ஒவ்வொரு செயல்பாட்டிற் கும் ஆக்ஸிஜன் வேண்டும். நாம் 21,600 மூச்சு எடுத்துக் கொள்ள வேண்டியதற்கு பதிலாக நாம் 17000 மூ ச்சுகளைத் தான் எடுத்துக்கொள்கிறோம். உன்னுடைய உடம்பு ஆக்ஸிஜனைச் சரியாக எடுத்துக்கொள்ளவில்லை. நன்றாக ஆக்ஸிஜன் உனக்கு ÷ வண்டும். அதிக ஆக்ஸிஜனை எடுப்பதற்கு நீண்ட மூச்சு எடுக்க வேண்டும். அது சாதாரண முறையில் சீராக எடுக்க வேண்டும். சீராக இல்லையெ ன்றால் அது பெரு மூச்சாகிவிடும் (சிரிப்பு)

காற்று உள்ளே சென்று வெளியே வரவேண்டியது உன்னுடைய உடம்பின் செயல்பாட்டின் ஒரு பகுதி. அதை நீங்கள் சாதாரணமாக நிறுத்த முடியாது.  ஒரு கணக்குப்படி மூச்சை எடுத்துக்கொண்டு நீண்ட நேரம் அதை உள்ளே வைத்துக்கொள்கிறோம். எடுத்துக்கொண்ட கணக்கின்படி காற்று ஒரு குறி ப்பிட்ட நேரம் வரை உள்ளே இருந்தால் அமுதம். அதற்கு பிறகு அது விஷம். தேவையான நேரம் கணக்கின்படி. அந்த கணக்குதான் காற்றை  அமுதமாக்கு கிறது. உள்ளே போகின்ற ஆக்ஸிஜன் அது வெளியே போகும்போது கார்பன்டை ஆக்ஸைடு. வெளியேவிடுவது நஞ்சுண்பது என்று  சொன்னால் அதை உள்ளே இருத்தி வைப்பதுதான் அமுது. உள்ளே இழுப்பது அல்ல.

காற்று என்பது நீண்ட நேரம் அடைபட்டுக் கிடந்தால் அது மீத்தேன் ஆகிவிடும். இப்போது உதாரணமாகக் கிணறு தோண்;டும்போது நச்சு வாயு  வெளிப்பட்டு இறந்தார் என்று சொல்கிறார்கள்.

ஒரு கிணற்றைத் தூர்வாரும்போது தண்ணீர் இல்லை-யென்றால் அதில் சிறிது தண்ணீர் ஊற்றுவோம். அதில் உள்ள விஷக்காற்று ஒன்றுமில்லாமல் ÷ பாய்விடும் என்று அந்த வேலை பார்க்கும் நபர்கள் என்னிடம் கூறியுள்ளனர். இந்த பழக்கம் அவர்களுடைய மூதாதையர்கள் மூலமாக  அவர்களுக்கு  வந்தது. எனவே சரத்தை சாணீயான படி உட்புகுத்திச் செய்யும் செயல்கள் யாவும் வெற்றியினை தரும்.

பளுதூக்குபவர் அதிகமான மூச்சை அவர் அறியாமலே இழுத்து அந்த எடையினை தூக்குவார். அந்த காற்றுதான் அதற்கான சக்தியினை அளிக்கிறது.

யோகிகள் இதனுடைய வேகத்தை அளந்தார்கள். சரத்தின் பண்புகளை எல்லாம் அவர்கள் எவ்வாறு கண்டுபிடித்தார்கள். மூக்கின் உள்ளே உள்ள ÷ ராமத்தை இப்போதெல்லாம் எடுக்கிறார்கள். அது ஒரு வடிகட்டியும் கூட. பிராணாயாமம் என்பது சிறிய விஷயமில்லை.

முதலில் நம்முடைய மனித உடலைச் சரிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக சர யோகத்தை யோகிகள் நமக்களித்தனர்.

 
மேலும் யோக தீபம் »
temple
அத்தியின் புத்திரரை முத்தியின் வித்தகரை
தத்திதன் சோதரரை சித்திதன் நாதகரை
தித்திதன் அஞ்சலரை ... மேலும்
 
temple
மனித வாழ்க்கை என்பது மனிதனாகப் பிறந்த பிறகு அவனுக்கு ஏற்படுகின்றது. அதற்கு முன்பாக அது எவ்வாறு தோன்ற ... மேலும்
 
temple

பிராண யோகா ஏப்ரல் 18,2015

பிராணாயாமம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்பøரிள் நிறைய இருப்பினும் அவை அனைத்தையும் ... மேலும்
 

சர சூத்திரம் ஏப்ரல் 28,2015

சரவழி

சரம் என்பது பிராணாயமத்தில் தான் வருகின்றது.

பத்மாசனத்தில் அமர்ந்து உட்டியான பந்தம் ... மேலும்
 
நாம் காலை எழும் முன்பாக நம்முடைய கைவிரல்கள் தானாகவே  மூச்சு எந்த நாசியில் ஓடுகின்றது என்பதைப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.