Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆன்ம ஒளி காட்டும் சுழுமுனை! பிராணாயாமப் பயிற்சி
முதல் பக்கம் » யோக தீபம்
பிராணாயாமத்தில் சர பிரயோகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2015
03:04

நாம் காலை எழும் முன்பாக நம்முடைய கைவிரல்கள் தானாகவே  மூச்சு எந்த நாசியில் ஓடுகின்றது என்பதைப் பார்ப்பது நம்முடைய வழக்கமாக ÷ வண்டும். மூச்சு இடது கலையில் ஓடிக்கொண்டிருந்தால் அன்றைய நாள் நன்றாகச் செல்லும் என்பது ஒரு உண்மை. வலது கலையில் ஓடினால் அதை  இடது கலையில் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது ஒரு பழக்கம் அது ஒரு புறமிருக்க அன்றைய நாள் எப்படியிருக்க வேண்டுமோ அப்படித்தான்  இருக்கும் என்பது என்ன?

நாம் வழக்கமாகச் செல்லும் பாதை அடைபட்டு இருந்தால் செல்லவேண்டிய இடத்திற்கு மாற்றுப்பாதையின் வழியாக சென்றாலும் அன்றைய நாள்  நமக்கு எவ்வாறு இருக்கும்? அன்றைக்கு நமக்கு சந்திராஷ்டமம் என்றால் கேட்கத் தேவையில்லை. எனக்கு ஜாதகத்தில் பொணீய அபிப்ராயம்  இல்லை என்றாலும் இதை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். உடனே உங்கள் மனதில் கேள்வி எழலாம். ஜாதகம் உண்மையில்லையா? நவ ÷ காள்கள் உண்மை யில்லையா? இறைவனால் படைக்கப்பட்ட அவர்கள் மனிதனுக்காக இயங்குவதை மறுக்கிறீர்களா? என்று எண்ணலாம்.

நவகோள்கள் நமக்காக இயங்குகிறார்கள். அவர்கள் மிகவும் நல்லவர்கள். ஆசறு நல்ல. அவை நல்ல நல்ல என்று சான்றோர்கள் பாடியிருக்கிறார்கள்.  இறைவன் அளித்த கட்டளையின்பேரில் அவர்கள் இயங்குகிறார்கள். இரவு. பகல் என்று மாறிமாறி வருகின்ற பொழுதுகளில் அணுப்பொழுதும்  தவறாமல் அவர்கள் செயல்படுகிறார்கள். நாம் ஜாதகத்தை ஆராய்கிறோம். இவர்கள் ஏன் வந்தார்கள். எதற்காக இந்த இடத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.  இவர்கள் மாற்றம் எப்போது நமக்கு நல்லது செய்யும் என்று பார்க்க வேண்டுமா? என்று என்னைக் கேட்டால் வேண்டாம்  என்று  சொல்லுவேன். சரி  ஆன்மீக ஞானத்திற்கு இவை வேண்டுமா அல்லது உதவுமா என்று நீங்கள் கேள்வி எழுப்பினால் இவர்களின் நிலைப்பாட்டை எல்லாம் புரிந்து  கொள்வது தானே ஞானம்.

நம் அன்னையினைப் பார்க்கச் செல்வதற்கு நாம் நேரம் காலம் பார்ப்பதில்லை. அவள் நம் அன்னை. நேரம் காலம் பார்த்து நம்மைக் கருவில் அவள்  சுமக்கவில்லை. நேரம் காலம் பார்த்து அவள் நம்மைப் பெறவில்லை. நேரம் காலம் பார்த்து நமக்கு அவள் அமுதூட்டவில்லை. என் அன்னையை  நினைத்தபோதெல்லாம் நான் பார்க்கச் செல்வேன் என்று ஒருவன் நினைப்பதைப் போல ஞானம் என்ற தாயினை பார்ப்பதற்கோ இன்ன பிற விஷய ங்களை அணுகுவதற்கோ நாம் நேரம் காலம் பார்க்க வேண்டியதில்லை.

அது போல நாம் ஜாதகத்தின் அம்சங்களை ஆராய வேண்டாம். அது எவ்வாறாயினும் இருக்கட்டும். நம் கடமையினை நாம் சரியாகச் செய்வோம்.  சரி வி;ஷயத்திற்கு வருவோம். தினசரி காலை எழுந்தவுடன் மூச்சு ஓட்டத்தை பார்க்கச் சொன்னேன். சரி அன்றைய நாளிற்கு உரிய கலையில்  அல்லாமல் மற்றொன்றில் ஓடினால் அந்த நாள் நன்றாக இருக்காது என்று நம் மனதில் தோன்றினாலும் அன்றைக்குத் தான் நாம் மற்ற நாட்களை விட  அதிகமாக பணிபுரிய வேண்டும். அன்றைக்குத் தான் நாம் அதிகமாக இறை வழிபாடு  செய்ய வேண்டும்.

அன்றைக்கு அதிக நேரம் தியானம் செய்ய வேண்டும். கிரஹண நேரங்களில் அதிகமாக தியானம் செய்வார்கள். அதைப்போல, மனம் சரியில்லாத  கிரஹண காலம் உள்ளிட்ட நேரங்களில் அவரவர்களுக்குத் தெரிந்த வழிபாட்டினை மேற்கொள்ளலாம்.

எப்பேர்ப்பட்ட விஷயம் என்றாலும் அதில் நாம் செயல்பட்டே ஆக வேண்டும். முனைப்பு வேண்டும். முயற்சி வேண்டும். நல்ல நேரத்திலும். அவை  அல்லாத போதும் நம்முடைய முயற்சி வலுவானதாக இருந்தால் எப்போதும் கோள்கள் நம்மை என்ன செய்யும். நினைத்துப்பாருங்கள் இப்போது  ஜாதகம் பற்றி.

சர யோகத்தில் கிரியா யோக உத்தி

இப்போது நான் விஷயத்திற்கு வருகின்றேன்

பாஹ்ய விருத்தி
ஸ்தம்ப விருத்தி

ஆப்யந்திர விருத்தி என்று விருத்திகளில் மூன்று வகைகள் உள்ளன.

குறித்த நேரத்தில் குறித்த வேலையினைச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டைத் தவிர நாம் நேரத்தை பற்றிக் கவலைப்பட வேண்டாம். அந்தந்தப்  பணி செய்ய வேண்டிய நேரத்திலே அந்தந்தப் பணிகளை செய்ய வேண்டும். நேரம் தவறியப் பணியை எப்போது நேரம் கிடைத்தாலும் செய்ய ÷ வண்டிய பணி ஒன்று உள்ளது. அதைத்தான் சாதகர்கள் கிரியா யோகம் என்று சொல்வார்கள். கிரியா யோகம் என்று சொன்னால் தனக்குக் கிடைத்த  பயிற்சிகள் அத்தனையும் ஒன்று விடாமல் செய்வது. கிடைத்த நேரத்தில் செய்வது .அதுதான் கிரியா யோகம். வெளியூர் சென்றாலும். வேறு இடம்  சென்றாலும் கிடைத்த சிறு நேரத்திலும் செய்வது. நேரம் கிடைக்கா விட்டாலும்  அந்த கிரியா யோகத்தின் நினைவாகப் பணி செய்வார்கள். இடையில்  10 நிமிடம் கிடைத்தாலும் அந்த பயிற்சிகளை செய்து விடுவார்கள். அப்படி ஒரு நித்திய பயிற்சி இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் அது எல்லா  ஆன்மீகப் பலன்களையும் தந்து விடும்.

கிரியா யோகம் என்ற மற்றொரு வகைப் பயிற்சியும் உள்ளது. இது சாதாரண பயிற்சியினை விட சிறிது வித்தியாசமானது. சில விஷயங்களை  ஏற்கனவே இருப்பதில் முன்னோடியாகச் செய்வது. அவ்வாறு செய்து விட்டால் நான் வாழ்க்கை முழுவதும் யோகம் பயின்றிருக்கின்றேன் என்ற  எண்ணம் வரும். நல்ல எண்ணங்கள் வளரும்.

குறைந்த நேரம் கிடைக்கும் என்றால் என்ன பயிற்சிகளை செய்வது என்ற கேள்வி உங்களுக்குள் எழுவது எனக்கு புரிகிறது. பிராணாயாமம் ஒன்றே  போதும் சாதாரண மனிதர்களின் இயல்புகளை மாற்ற.குணங்களை மாற்ற, நாடிகளை மாற்ற இந்த பிராணாயாமத்தை ஒழுங்காகச் செய்தோலே  குறைந்து விடும்.

அதைத்தான் பதஞ்சலி மஹரிஷி சாதனா பாதத்திலே சூத்திரம் 50ல்  கூறுகிறார்.

பாஹ்ய என்றால் சொல்லப்படுவது. என்ன சொல்லப் படுவது என்றால் பிராணாயாமத்தினைப் பற்றிய விவரங்கள். பாஹ்ய விருத்தி என்று  சொன்னால் உடம்பிற்கு வெளியே விருத்தியினை உண்டாக்குவது, ஆப்யந்தர விருத்தி உடலிற்கு உள்ளே விருத்தியினை உண்டாக்கு வது. வெளியே  நிறுத்துதல். உள்ளே அனுப்புதல், வெளியேயும், உள்ளேயும் அடக்குதல் நிலை நிறுத்துதல் இதை ஸ்தம்ப விருத்தி என்று சொல்கிறார்.

ஏனென்றால் முதலில் விருத்தியினை உண்டாக்குவது அந்த ஸ்தம்ப விருத்தியிலே அந்த விருத்தியினை அடக்குவது

அதிலே அந்த தேசம் காலம் வருகின்றது. தேசம் என்றால் ஒரு பகுதி அல்லது தூரம். சுவாசம் பரவி நிற்கும் தூரம் என்ற வளாகம்.

சிலபேர் மூக்கிலிருந்து உதடுவரை கூட அந்த தேசம் என்ற பகுதி போகாது. ஏனென்றால் அவர்களுடைய மூச்சு விடும் இயல்பு அவ்வாறு இருக்கும்.  பிறகு காலம். காலம் என்றால் நாம் செய்யக்கூடிய கிரியை ஒவ்வொன்றிற்கும் அல்லது விருத்தி ஒவ்வொன்றிற்கும், அதற்கு உண்டான கால அளவு,  அதாவது மாத்திரை அளவிலே என, அந்தக் காலத்தில் கூறியிருக்கிறார்கள்.

மாத்திரை என்றால் காலத்தின் பரிணாம அளவு. இரு முனைகளை நிறுவிக்கொண்டோம் என்றால் அந்த இருமுனைகளுக்கு இடைப்பட்ட தூரம் தான்  பரிமாணம். அதைக் கடப்பதற்கு ஆகும் நேரம் தான் மாத்திரை என்ற கால அளவு. ஆகவே ஒரு வினாடி என்பது பயிற்சியிலே உங்களுடைய விருப் பத்தின் பேரில் அமைவது. அதாவது ஒரு சொடக்கு இடுகின்ற நேரம் அல்லது கண் இமைக்கின்ற நேரம். இப்படி எத்தனையோ நேரங்கள் உள்ளது.  அதில் ஏதாவது ஒன்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். சௌகரியமாக உள்ள கால அளவு கணக்கீடை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரே வேகத்தில் ஒரு தூரத்தை வழக்கமாகக் கடக்கும்போது இத்தனையாவது அடியில் இந்த பொருள் இருக்கும் என்று சரியாக கணித்து அடைந்தால்  அதுவும் சரியாக இருந்தால் அப்போது உன்னுடைய அந்த அளவீடு சரியாக இருக்கிறது என்று பொருள்.


சிலர் எண்ணிக்கைகளை அல்லாமல். ஒரு மந்திரத்தை நினைத்துச் செய்வதை பழக்கத்தில் எடுத்துக் கொள்வார்கள். அது ஒரு வகையில் சிறந்த  முறைதான். உதாரணமாக - பஞ்சாக்ஷரம். சரியாகச் செய்து பலன்களை பெற காலப்பரிமாணம் சரியாக இருக்க வேண்டும் என்பது அவசியம்.

பயிற்சியின் ஆரம்பத்தில் இதை எல்லாம் நீங்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாள் ஆக ஆக அதில் நீங்கள் மேன்மை  பெறுவீர்கள். இடைவிடாத பயிற்சி மற்றும் வைராக்யம் இரண்டும் தான் உங்களுக்கு ஆன்மீகத்தில் வெற்றியினை அளிக்கும். பல வழிகளைச் சிந் தித்து. ஒருவழியினைத் தேர்வு செய்து அதில் நீங்கள் நிலையாக நிற்பீர்கள் என்றால் வெற்றி உண்டாகும்.

முதலில் குறிப்பிட்ட கால அளவினைப் பழக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். சூரிய சந்திரர்கள் உட்பட, இயற்கை தனது பணியைச் சரியாக  செய்து கொண்டிருப்பது போல ஒரு நியதியை நீங்கள் ஏற்படுத்திக் கொண்டு   இந்தப் பயிற்சிகளைச் சரியாக செய்யவேண்டும்.

பிராணாயாமத்திலே ஸ்தம்ப விருத்தி என்று ஒன்று உள்ளது. வாயுக்களை ஒரு குறிப்பிட்ட இடத்திலே நிலை நிறுத்தி தன் பலத்தை  அதிகரித்துக்கொள்வது. யாராலும் அந்த பலத்தை அசைக்க முடியாது. அந்த அளவு அது வலுவாக இருக்கும். ஒருவன் ரயிலைக்கூட இழுக்கிறான்.  ஒரு கன ரக வாகனத்தை இழுக்கின்றான். அதற்குக் காரணம் ஸ்தம்ப விருத்தி. அப்படி ஸ்தம்பங்கள் எல்லாம் உள்ளன. இதை ஒரு உதாரணத்திற்காகச்  சொன்னேன். தேசம் என்பது பகுதி அல்லது பரப்பளவு. மூச்சுக்காற்று பரவுகின்ற தூரம். சுவாசம் பயணம் செய்கின்ற தூரத்தின் அளவு.  உதாரணத்திற்குப் பஞ்சை மூக்கின் அருகே வைத்துக் கொண்டு சுவாசத்தின் வெளியிடுதலின் நீளத்தை எந்த நீளம் வரை சுவாசத்தினால் அந்தப் பஞ்சு  அசைகின்றதோ அது வரை இருக்கிறது என்று கணக்கிடலாம்.

காற்றை உள்ளிழுத்தலும். வெளிவிடுதலும் ஒரே சீரான வேகத்தில்  அமையும். அதை (ஈவன் ப்ளோ) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இதைப்÷ பாலத்தான் ஓம் மந்திரத்தையும் உச்சரிக்கும் பயிற்சியினையும் பழக வேண்டும். பின்பு அதை மானசீகமாக அதிர்வுடன் நினைக்கும் பயிற்சி வந்து  விடும்.

இப்போது மூச்சு நீளத்தை அளவைப் படிப்படியாக அதிகரிக்க வேண்டும். அதை சிறிது சிறிதாகக் கூட்டிக் கொள்ளலாம். இது ஒரே நாளில் நிகழ்ந்து  விடாது. தொடர்ந்த பயிற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியடைய அதை கூட்டிக்கொள்ளலாம்.

 
மேலும் யோக தீபம் »
temple news
அத்தியின் புத்திரரை முத்தியின் வித்தகரைதத்திதன் சோதரரை சித்திதன் நாதகரை தித்திதன் அஞ்சலரை பத்தித்து ... மேலும்
 
temple news
மனித வாழ்க்கை என்பது மனிதனாகப் பிறந்த பிறகு அவனுக்கு ஏற்படுகின்றது. அதற்கு முன்பாக அது எவ்வாறு தோன்ற ... மேலும்
 
temple news

பிராண யோகா ஏப்ரல் 18,2015

பிராணாயாமம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்பøரிள் நிறைய இருப்பினும் அவை அனைத்தையும் ... மேலும்
 

சர சூத்திரம் ஏப்ரல் 28,2015

சரவழிசரம் என்பது பிராணாயமத்தில் தான் வருகின்றது.பத்மாசனத்தில் அமர்ந்து உட்டியான பந்தம் செய்தால் ... மேலும்
 
அடுத்தபடியாக சுழுமுனை நாடியினைப் பார்ப்போம். சுழுமுனை நாடி என்று சொல்கிற போது அது வலது பக்கத்தில்  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar