Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிராண யோகா ஆன்ம ஒளி காட்டும் சுழுமுனை!
முதல் பக்கம் » யோக தீபம்
சர சூத்திரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2015
03:04

சரவழி

சரம் என்பது பிராணாயமத்தில் தான் வருகின்றது.

பத்மாசனத்தில் அமர்ந்து உட்டியான பந்தம் செய்தால் திருவருள் பெருகும். சில நுட்பங்கள் புலனாகும். ஏன் இன்னும் பலப்பல நுட்பங்கள்  புலனாகும். ஏற்கனவே அந்தப் பயிற்சியினை நான் செய்து காண்பித்திருக்கிறேன். ஏனென்றால் மனிதர்களாகிய நாம் நுட்பத்தையே நுணுகி ஆராய் பவர்கள். மனிதம் அல்லாதவைகளுக்கு விரிந்த மனம் என்ற ஒன்று இல்லாததால் அவைகளுக்கெல்லாம் நுட்பம் தெரியாது.

ஆதலால்  அவைகள் தமக்கு மனம் இல்லாததால் அமைதியாக இருக்கின்றன. ஆனாலும் நாம் அமைதி ஏனோ பெறவில்லை. ஏனென்றால் நுட்பத்தை  நாம் சரியாக உணரவில்லை. அது நம்முடைய கடமையாக இருந்தும்கூட முயற்சியும் செய்யவில்லை. அதற்குத் தயாராகவும் இல்லை. அதில்  ஒன்றுமில்லை என்ற நம்முடைய நினைப்பு தான் அதற்குக் காரணம்.

உந்தி முதல் கீழிருந்து துவங்கி 72,000 நாடிகள் தான் உடம்பெங்கும் பரவி உள்ளடங்கி நிற்கின்றன. அந்த நுட்பத்தை உணர்வதுதான் பிராணாயாமம்  மற்றும் உட்டியான பந்தம் என்ற அந்த இரண்டும் அதற்கு மிக மிகத்துணை செய்யும்.இது மூச்சினால் மட்டும் எப்படி வரும்.

மூச்சு என்பது நமக்கு இன்றியமையாத ஒன்று. நமக்கு மட்டுமல்ல,எல்லா உயிர்களுக்கும்.நமக்கு அது இருக்கிறதென்றால் நாம் விரும்பியபடி அதை  மாற்றியமைக்க முடியும். மற்ற உயிர்களால் அதனை அவ்வாறு மாற்றிக்கொள்ள முடியாது. நம்மால் அதை மாற்றிக் கொள்வதால் பல பயன்களை  எட்ட முடியும். பின்னால் நீங்கள் அதைப் பார்க்கிற போது ஆகா! இப்படியெல்லாம் பலன் இருக்கிறதா என்று வியந்து போவீர்கள்.ஆகவே 72000  நாடிகளிலே பத்து நாடிகள் பிரதானமானவை. அதில் மூன்று நாடிகள் மிகவும் முக்கியமானவை. அது எது என்று பின்னால் பார்ப்போம்.

இடகலை

இடது நாசியின் வழியாக உள்ளே வருகின்ற. வெளியே செல்கின்ற அந்த மூச்சிற்குப் பெயர் தான் இடகலை. அதற்குப் பெயர் சந்திரன். அதை அமுத  மூச்சு என்று சொல்வார்கள். எந்தப் பொருளையும் உண்டாக்கும் வல்லமை அதற்கு உண்டு. அதற்கு ஒரு நிறம் வைத்திருக்கிறார்கள்  யோகியர்கள்.  அதன் நிறம் கருப்பு. அது பாலில் பெண் பால். ராசியில் ஸ்திர ராசி. மேற்கு மற்றும் தெற்குத் திசைக்கு உரியது. ஆண்பால், பெண் பாலென்று வரு கின்ற போது. இம்மூச்சிற்குப் பெண்பாலின் ஆதிக்க சக்தியும் பல்வேறு உலகப் பரிமாணங்களை மாற்றும் திறனும் உண்டு. இது பற்றி பல்வேறு பாட ங்களை விரிவாக உணர்ந்திருக்கிறீர்கள்.

20 காதத்திற்கு மேற்பட்ட பயணதூரம். அந்த காலத்தில் ஒரு காதத்தை 10 மைல் என்று கூறுவார்கள். அப்போ எத்தனை மைல் என்று நீங்களே  கணக்கிட்டுக் கொள்ளுங்கள். சான்றோர்கள் 20 காதத்திற்கு மேற்பட்ட பயண தூரம் செல்கின்ற நிலை ஏற்படுகின்ற போது சந்திர கலையிலே அவர்கள்  அந்த பயணத்தைத் துவக்கினார்கள். அதாவது இடது நாசியின் வழியாக மூச்சு வந்து போய்க் கொண்டிருக்கிற போது அவர்கள் தங்கள் பயணத்தை  துவங்கினார்கள். ஆனால் அந்தப் பயணம் வருகின்ற போது சூரிய கலையும் வரவேண்டும். அதிலேதான் முடிக்க வேண்டும். அப்படிச் செய்தால்  அவர்களுடைய பயணம் வெற்றிகரமாக அமையும்.

20 காத பயண தூரம் என்றால் அதற்குள் எத்தனை மூச்சு மாறியிருக்கும். சூரிய கலையில் அந்தப் பயணம் முடிந்தால் வெற்றிகரமாக இருக்கும் என்று  சொன்னால் அதற்கு என்ன பொருள்.

ஏனென்றால் அமர்ந்திருக்கின்ற போது, உறங்குகின்ற போது இருக்கிறதை விட நடக்கிறபோது நம்முடைய மூச்சுக்கலைகள் அடிக்கடி மாறும்.  எவ்வளவு வேகமாக நடக்கிறோமோ அதற்குத் தக்கவாறு அந்த மாற்றம் இருக்கும். அதை இடது பக்கத்தில் ஆரம்பிக்க என்று சொன்னால் அந்த  காரணத்தை நாம் அனுபவித்துத்தான் பார்க்க வேண்டும். சரி பயணம் முடிகிற போது சூரிய கலையில் முடிக்க வேண்டும் என்று கூறினாரே! அவ்வாறு  சூரிய கலை வரவில்லை என்றால் என்ன செய்வது. ஒரு கிலோ மீட்டருக்கு முன்னதாகவே நாம் மூச்சு எந்த கலையில் ஓடுகிறது என்பதை சோதித்து  எவ்வளவு நேரத்துக்கு இது மாறுகிறது என்பதை அறிந்து அதற்கு தக்கவாறு சூரியகலையில் ஓடும்போது அந்த இடத்தை அடைவதாக இருக்க ÷ வண்டும்.

உலகியல் வெற்றிக்கு இடகலை

மூச்சு என்ற குதிரையினை நாம் பழக்கிவிட்டால் அது நாம் சொன்னாவாறெல்லாம் கேட்கும். நினைத்த- வாறெல்லாம் ஆகும். சிறிதாக கை என்ற  கயிறை அசைத்துக் காண்பித்தாலே மடை மாற்றம் மற்றும் அனேக மாற்றம் வரும். (கைவிரல்களை காண்பித்துச்சொல்கிறார்)

அப்படிப்பட்ட பயிற்சி இருக்குமேயானால் நம்மால் அந்த மூச்சை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் அது இயல்பாக வந்து விடும் என்று  சொல்கிறார்கள். இந்த மூச்சு இடது நாசியிலே வரும்போது  என்னென்ன செய்வதற்கு அது பயன்படும் என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ய õருக்காவது ஒரு கடிதம் எழுத வேண்டும். அது நல்ல பதிலைத் தருவதாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் இடது மூச்சிலே சுவாசம் வருகின்ற  போது கடிதம் எழுதினால் அது வெற்றிகரமாக அமையும் என்று சொல்கிறார்கள். தூது அனுப்புவது. இப்போது உதாரணமாக இடது நாசியிலே மூச்சு  வருகின்ற போது கண்ணனை அழைத்துவா என்று சொன்னால் கண்ணனும் வருவான். மாறாக வலது நாசியில் வருகின்ற போது சொன்னால்  கண்ணன் இருந்தாலும்; வர மாட்டான். இங்கே அவன் இவன் என்று சொல்வதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். (கண்ணன் என்பவர் ஒரு  மாணவர்)

ஒரு தந்தை,மகன் உறவிலே அவ்வாறு சொல்கிறேன்.

பொதுவாக  இடது நாசியில் மூச்சு வருகின்ற போது குணாதிசயங்கள். இயல்புகள் இவ்வாறு இருக்கும். அந்த இயல்புகள் இவனைப் பணி செய் வதற்குத் தூண்டி விடும். சாதாரணமாக அனைவருக்கும் இந்தப் பயிற்சியினால் இந்த குணம் வந்து விடுமா என்பது வேறு விஷயம். அடிக்கடி இந்த  விஷயத்தை செய்தோம் என்றால் அது கண்டிப்பாக அதற்கு என்று ஒரு பண்பு உண்டு. அது வெற்றியினைத் தரும். அது ஒரு உபயோகமான விஷயம்.  தூதனுப்புவது என்று மட்டுமல்லாமல் கலந்து பேசுவதும் கூட, ஆக இட கலையில் கலந்து பேசுவது, முடிவெடுப்பது போன்றவற்றை மேற்கொள்வது  நல்லது. புதிய ஆடைகள் அணிவது மற்றும் அணிவிப்பது, மங்கல நாண் பூட்டுவது அதாவது தாலி கட்டுவது, இதையும் இடகலையில் செய்தால்  நலம். என்ன நீங்கள் இதற்கெல்லாம் எப்படி எவ்வாறு அந்த மூச்சிற்காக காத்திருப்பது என்று கேட்ககூடும். அந்த சரியான நேரத்தில் அது முடிந்தாக  வேண்டுமே என்ற எண்ணமெல்லாம் வரும். அப்போது பெருமூச்சுதான் வரும் (சிரிப்பு)

இந்த விஷயங்களை எல்லாம் சாதாரண ஆட்களுக்கு சொன்னார்களா? அல்லது அந்தக் கலையிலே தேர்ச்சி பெற்றவர்களுக்குச் சொன்னார்களா  என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். அது ஒருபுறம் இருக்கட்டும். மங்கல நாண் பூட்டும்போது இடகலை இயங்கிக்கொண்டிருந்தால் துணைவி  நம்முடன் எப்போதும்  சந்தோஷமாக வாழ்வாள் என்று நாம் நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். (மறுபடியும் சிரிப்பு) இதையெல்லாம் நான் ஒரு  நகைச்சுவைக்காக சொல்கிறேன்.

பல காரியங்களுக்குத் தயாராக நாம் நம்மைத் தயார் செய்கிறோம்.

பொதுவாக இடது நாசியிலே மூச்சு வருகிற போது வேலையாட்களை வேலைக்குச் சேர்த்துக்கொள்ளலாம். கிணறு, ஏரி, குளம், வெட்டத் துவ ங்குவது, வீட்டுமனை வாங்குவது, கிரஹப்பிரவேசம் செய்வது, பெரியவர்களை தரிசனம் செய்யப் புறப்படுவது, மரியாதை நிமித்தமான சந்திப்பு,  சில சாந்திகளை மேற்கொள்வது.

நாள் பார்ப்பது, நேரம் பார்ப்பது, யோகம் பார்ப்பது, சூலம் பார்ப்பது என்று இந்துக்களில் பல முறைகள் வைத்திருக்கிறோம். நாள் நன்றாக இல்லை  என்றாலும் அத்தியாவசியமான காரியங்களுக்குச் சுப ஓரை பார்க்க வேண்டும் என்பார்கள். அதிலும் உங்களுக்கு நேரம் இல்லை என்றால் சரத்தை  (மூச்சுக்கலை)யைப் பார்க்க வேண்டும். தேவதா பிரதிஷ்டை செய்வது. எதிரிகளுடன் உடன்படிக்கை செய்து கொள்ளலாம். கல்வி துவங்கலாம். அந் தக்காலத்தில் தானியங்களைக் களஞ்சியத்தில் சேர்க்கும்போது கூட அந்த இடது நாசியில் சரம் வருகின்ற போது செய்யுங்கள் என்று சொன்னார்கள்.  புதிய சொத்துக்களை கைக்கொள்ளுவது. எல்லாவற்றிற்கும் மேலே நாம் ஊழ்வினை, கர்மா என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக் கிறோம்.  அதனுடைய நிர்ப்பந்தத்தின் பேரில்தான் நாம் அலைக்கழிக்கப் படுகின்றோம் என்றெல்லாம் உறுதியாக நம்புகிறோம். அது போல அந்தத்  தீவினைகளில் இருந்து நாம் விடுதலை தேடிக்கொள்வது என்பதற்கான காரியங்களில் இறங்குவதற்கு இடது நாசியில் சரம் வரும்போது செய்யலாம்  என்று சொல்லியிருக்கிறார்கள். ஆக இடது மூக்கிற்கு மிகவும் அதிகமான முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.
 
ஒரு வீட்டிற்குப் பெண் செல்லும்போது வலது காலை எடுத்துவை என்று சொல்கிறார்கள். இடது காலை எடுத்துவை என்று சொல்வதில்லை.  ஏனென்றால் இடது கால் திடமானது. திடமான இடது காலை ஊன்றி சற்று திடம் குறைந்த வலது காலை முன்னெடுத்து வை என்பதற்காகச்  சொல்கிறார்கள். பின் இடது காலை ஊன்றி நடைதுவக்கு என்று சொன்னால் அப்போது இடது நாசியில் சுவாசம் வந்து விடும். இடது நாசிதான் சக்தி.  சக்தி இல்லையெனில் ஒன்றுமில்லை.

இலௌகீக வாழ்க்கையில் இருந்து கொண்டு பரசிந்தனையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதற்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும்.  ஆனால் இது போன்ற செயல்களால் இலௌகீக வாழ்க்கையில் வெற்றி கிடைத்து அதனால் பிறருக்கும் பயன் கிடைக்கும் என்றால் அதை நாம் ஏன்  செய்யக்கூடாது. கடைசியாக சொன்ன அந்த நாடியிலே மூச்சு வருகின்ற போது அந்தத் தீவினைகள் மாறுவதற்கு ஒரு வழிதேடல். எப்படி அதற்கு  வழிதேடுவது. ஒரு பாவத்திற்குப் பரிகாரம் செய்வது என்று சொன்னால் அதை இடது நாசியிலே கலை வரும்போது செய். அதற்குப் பலன் கூடும்  என்று சொல்கிறார்கள். ஏனென்றால் உன்னுடைய சுவாச மாறுதல்களினால் உடலினுடைய இயல்புகள் பல மாறுகிறது என்பது தான் இதனுடைய  அடிப்படை.

அதனால் நம்முடைய இதயத்தை சற்று இடது புறம் வைத்திருக்கிறார் இறைவன், என்று நான் நினைக்கிறேன். அதன் காரணமாகவே அம்மைக்கு ஈசன்  இடது பாகத்தை கொடுத்தார் என்று நினைக்கிறேன். வாம பாகம் என்று அதை சொல்வார்கள். இடதுபாகம் சக்திக்குரியது என்று சொன்னால் அதுதான்  வலுவானது என்று பொருள். ஒன்று செயல்படுத்துவது மற்றொன்று வலுவானது. இந்த இடது நாசியினைப் பற்றி இன்னும் சொல்லிக்கொண்டு ÷ பாகலாம்.

யோக சாதனையினை ஆரம்பிக்கும்போது இடது நாசியில் முதலில் மூச்சை நன்றாக வெளியிட்டுப் பிறகு வலதின்  வழியே மூச்சை இழுக்கும்படியாக  உங்களுக்கு ஏற்கனவே கூறியிருக்கிறேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஏனென்றால் வலம் என்பது பல முக்கிய சம்பிரதாயச் செயல்பாடுகளில் இருக்கிறது. அப்போது இடது வந்தால் வலது செயல்பாடுகளில் இருந்து  கழன்று விடும். பொதுவாகவே இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு வலிமை அதிகம் என்று சொல்வார்கள். இடது கை கிரிக்கெட் வீரர்கள். இடது  கையில் எழுதும் கவிஞர்கள் என்று இடது கை சற்று விசேஷம் பொருந்தியதுதான். இன்னும் கூட பார்த்தீர்களேயானால் நம்முடைய யோகத்தில் நீ ங்கள் உறங்கும்போது கூட இடது பக்கமாக படுங்கள் என்று சொல்லியிருக்கிறோம். ஆழ்ந்து தூங்கும்போது நீ மாறிப்படுத்துவிட்டால்? பரவாயி ல்லை. உன்னுடைய இரைப்பை அமைப்பிற்காகவும், இடது பக்கத்தில் இதயம் உள்ள காரணத்தினாலும், சில நாடிகளுடைய செயல்பாடுகள்  அதிகமாக வேண்டும் என்றாலும் இடது பக்கமாகப் படு என்று சொல்லியிருக்கிறோம்.

ஆன்ம நெறி புகுத்தும் பிங்கலை

இப்போது வலது நாசியினைப் பற்றியும் சற்று கூறுவோம். பிங்கலை என்று அதற்குப் பெயர். வலது நாசியில் வருகின்ற அல்லது உள்ளே  இழுக்ககூடியச் செயல்பாட்டிற்கு பிங்கலை என்று சொல்கிறோம். அதை சூரியன் என்ற கோளோடு ஒப்பிடுகிறோம். அதன் நிறம் வெண்மை நிறம்  என்று யோகிகள் சொல்கிறார்கள். வெண்மை நிறம் என்று சொன்னாலே பரிசுத்தம் என்று பெயர்.

உங்களில் பலரை வெண்மை ஆடை அணிந்திருக்கச் சொல்லியிருக்கிறேன். அது உடல் நலத்தைக் கொடுக்கும். சில வசியங்களை கொடுக்கும். முத லில் நீங்களே உங்களை கவனமாக இருக்கச்செய்யும். எங்கேயும் போய் சாய மாட்டீர்கள் (ஒரே சிரிப்பு).

பிங்கலையின் திசைகள் வடக்கு, கிழக்கு, ராசியில் இது சர ராசி. ஏற்கனவே சரத்தைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இதில் என்ன சர  ராசி? சரம் என்று சொன்னால் சென்றுகொண்டேயிருப்பது என்று பொருள் கொள்ளலாம். அந்த வகையில் இது சர ராசி. இது பாலில் ஆண் பால்.  இடது நாசியில் சரம் வருகின்ற போது பல செயல்களைச் செய்தல் நலம் என்று சொல்லியிருக்கிறோம். அந்த வகையில் வலது நாசியில் சரம் என்று  வரும்போது என்னவாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.

குருவிடம் ஞான விஷயங்களை உபதேசமாகப் பெறுகிறபோது வலது நாசியில் சரம் ஓடுதல் நலம். குரு அந்தக் கலையில்தான் உங்களுக்கு உப÷ தசங்களை அளிப்பார். குரு, சீடர் இருவருக்கும் வலது நாசியில் மூச்சு வரும்போது அந்த உபதேசம் அருளப்படுகின்றது.

புதிய கலைகளைக் கற்பிப்பது. கற்பது. வணங்குவது எதிரிகளை வெல்ல முயற்சி செய்வது. எதிரிகள் என்று சொன்னால் அதை யுத்தம் செய்வது ÷ பால் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். நமக்கு எதெல்லாம் எதிராக  இருக்கிறதோ அந்த விஷயங்களைப் புறம் தள்ளுவது. நமக்கு ஒவ்வாத  இலௌகீக பழக்க வழக்கங்கள் உள்ளன. அவற்றில் இருந்தெல்லாம் நாம் நீங்கி விட வேண்டும். அதற்கு வலது நாசியில் மூச்சு வருகின்ற போது  அதைச்செய்ய வேண்டும்.

விதை விதைத்தல், வியாபாரத்தை துவங்குகிறபோது, வலது நாசியில் மூச்சு வருகின்ற போது, அந்த காலத்தில் குதிரை,யானை சவாரி செய்யும்போது  கூட  சரம் பார்த்துச் செய்தார்கள். கட்டுரை எழுதுவது, கதை எழுதுவது, மேடையில் பேசுவது, மந்திரம் கூறி பயன் பெறுவது இவற்றையும் பி ங்கலையில் மேற்கொள்ளுதல் நலம். மருந்துண்பது, சாப்பிடுவது, தூங்கச்செல்வது, குளிப்பது, முக்கியமாக யோகம் பயில்வது போன்றவையும்  வலது நாசியிலே மூச்சு வருகிற போது செய்தல் நலம். அங்கே வினை தீர்த்தல் என்று சொல்லியதைப் போல இங்கே விடம் தீர்த்தல் என்றவாறு  நம்முடன் உடலில் இருக்கும் விஷத்தைப் போன்ற செயல்பாடுகள். விஷம் என்று சொன்னால் அமுதிற்கு எதிர்ப்பதம்.

 
மேலும் யோக தீபம் »
temple news
அத்தியின் புத்திரரை முத்தியின் வித்தகரைதத்திதன் சோதரரை சித்திதன் நாதகரை தித்திதன் அஞ்சலரை பத்தித்து ... மேலும்
 
temple news
மனித வாழ்க்கை என்பது மனிதனாகப் பிறந்த பிறகு அவனுக்கு ஏற்படுகின்றது. அதற்கு முன்பாக அது எவ்வாறு தோன்ற ... மேலும்
 
temple news

பிராண யோகா ஏப்ரல் 18,2015

பிராணாயாமம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்பøரிள் நிறைய இருப்பினும் அவை அனைத்தையும் ... மேலும்
 
அடுத்தபடியாக சுழுமுனை நாடியினைப் பார்ப்போம். சுழுமுனை நாடி என்று சொல்கிற போது அது வலது பக்கத்தில்  ... மேலும்
 
நாம் காலை எழும் முன்பாக நம்முடைய கைவிரல்கள் தானாகவே  மூச்சு எந்த நாசியில் ஓடுகின்றது என்பதைப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar