பதிவு செய்த நாள்
21
ஏப்
2015
12:04
சேலம்: சேலம், அம்மாபேட்டை, சவுந்தரராஜப் பெருமாள் கோவிலில், 26ம் ஆண்டு பிரமோத்ஸவத்தில் நேற்று நடந்த திருப்பல்லக்கு திருவீதி உலாவில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.சேலம், அம்மாபேட்டை, சவுந்தரராஜப் பெருமாள் கோவில், 26ம் ஆண்டு பிரமோத்ஸவம் ஏப்.,15ல் துவங்கி நடந்து வருகிறது. இதில், நேற்று காலையில் பெருமாள் திருப்பல்லக்கில் திருவீதி புறப்பாட்டை தொடர்ந்து பிரபந்த சேவை நடந்தது. இதில், திரளாக பக்தர்கள், ஸ்வாமி தரிசனம் செய்தனர்.மாலையில், தீ அலங்காரத்துடன் பெருமாள் பெரிய கருட வாகனத்தில் திருவீதி புறப்பாடு நடந்தது. இன்று காலை, சிறிய கருட வாகனத்தில் திருவீதி புறப்பாடும், மாலையில் அட்சய திருதியை புஷ்பாஞ்சலியும், இரவில் ஹனுமந்த வாகனத்தில் திருவீதி புறப்பாடும் நடந்தது.நாளை காலை, சிறிய குதிரை வாகனத்திலும், இரவில் யாழி வாகனத்தில் திருவீதி புறப்பாடு நடந்தது. ஏப்.,23 காலையில் உபநாச்சியாருடன் பெருமாளுக்கு சூர்ணோத்ஸவத்தை தொடர்ந்து திருவாராதனமும், இரவில் சேஷ வாகனத்தில் திருவீதி புறப்பாடு நடக்கிறது.ஏப்.,24 காலை, பெருமாளுக்கு வெண்ணெய்த்தாழி சேவை திருவீதிபுறப்பாடும், சாத்துமுறை, இரவில் பெரிய குதிரை வாகனத்தில் திருவீதி புறப்பாடு நடக்கிறது. ஏப்.,25 காலை, உபநாச்சியாருடன் பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி, சிறப்பு பூஜைகளுக்கு பின் திருவீதி புறப்பாடு நடக்கிறது.மாலையில் தீர்த்தவாரியும், சக்ர ஸ்நானம், திருவீதி புறப்பாடு, த்வஜ அவரோஹணம் ஆகியன நடக்கிறது. ஏப்.,26 மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. ஏப்.,27ல், 81 கலச ஸ்நபன திருமஞ்சனம், த்வாதச ஆராதனம் ஆகியனவும், ஏப்.,28 இரவில் பெருமாள் டோலோற்சவம், இரவில் எம்பெருமானார் டோலோற்சவம் ஆகியன நடக்கிறது. ப்ரமோத்ஸவத்துக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.