பதிவு செய்த நாள்
21
ஏப்
2015
01:04
காரிமங்கலம்:காரிமங்கலம் அடுத்த, கயிறுகாரன் கொட்டாய் ஜடை மாரியம்மன் கோவில் திருவிழா நாளை துவங்குகிறது.விழாவையொட்டி, நாளை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மதியம், 3 மணிக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 23ம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகளும், காலை, 8 மணிக்கு பொங்கல் வைத்தலும் நடக்கிறது. மாலை, 3 மணிக்கு பக்தர்கள் அலகு குத்துதலும், மாவிளக்கு, கரகம் எடுத்தலும் நடக்கிறது.எம்.எல்.ஏ., அன்பழகன் துவக்கி வைக்கிறார். இரவு, 7 மணிக்கு இன்னிசை பாட்டு பட்டிமன்றம் நடக்கிறது. 24ம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தாக்கள் வெங்கடாசலம், காந்தன், முன்னாள் சேர்மன் மாணிக்கம் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.