விழுப்புரம்: கெடார் அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் மூன்று நாள் சித்திரை திருவிழா நேற்று துவங்கியது. முதல்நாள் விழாவான, நேற்று முத்துமாரியம்மன் மற்றும் விநாயகர் சுவாமிகளுக்கு காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, இன்று முத்துமாரியம்மன் மற்றும் கங்கையம்மன் சுவாமிகளுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி, காலை அம்மன் மற்றும் விநாயகருக்கு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் பகல் 12 மணிக்கு பூங்கரகம் ஊர்வலமும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு கோவில் வளாகத்தில் அம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. கிராம பொதுமக்கள் சார்பில் அய்யனாரப்பன் சுவாமிக்கு, நாளை ஊரணி பொங்கல் வழிபாடு நடக்கிறது.