சாந்த முகத்துடன் இருக்கும் லட்சுமி, வீரலட்சுமியாக மாறி ஆவேசமும் கொள்வாள். பன்றி முகம் கொண்ட கோலாசுரனை அவள் வதம் செய்ததால், கோலாசுர பயங்கரி என்று பெயர் பெற்றதாக மகா லட்சுமி அஷ்டகம் கூறுகிறது. அவன் உயிர் விட்ட போது, தாயே! என்னைக் கொன்ற இந்த இடத்தில் தங்கியிருந்து, வழிபடுவோருக்கு வெற்றியையும், செல்வத்தையும் அருள வேண்டும் என்று வேண்டினான். அந்த தலமே மகாராஷ்டிராவில்உள்ள கோல்ஹாப்பூர். இங்கு வில், வாள், கேடயம் தாங்கிய வீரலட்சுமியைத் தரிசிக்கலாம்.