வேத வியாசரால் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்ட ஸ்தோத்திரம் லட்சுமி ஹ்ருதயம். இதை ஜெபித்தால் மனதுக்கு பிடித்த மாப்பிள்ளையோ, பெண்ணோ அமைவார்கள். இந்த ஸ்தோத்திரத்தை ஜெபித்தே, கண்ணனின் சகோதரியான சுபத்ரையை அர்ஜுனன் திருமணம் செய்தான்.இதோ அந்த ஸ்லோகம்.தாமரைக் கண்களைக் கொண்ட மகாலட்சுமியே! தைரிய லட்சுமியாக வந்து காப்பவளே! நெற்றி திலகத்தில் குடியிருப்பவளே! குளத்தில் நீர் இல்லாவிட்டால் மீன்கள் வாழ முடியாதது போல, கருணை மிக்க உன் அருள்பார்வை இல்லாமல் என்னாலும் வாழ முடியாது. நீயே என் தாய் என்பதை நிரூபிக்க இப்போதே வந்து விடு. கேட்டதை வழங்கும் கற்பக மரமே! தாய், தந்தை, குரு என எல்லாமான நீ என்னை கரை சேர்த்து விடு.