கடலூரில் இருந்து பண்ருட்டி செல்லும் வழியில் உள்ளது திருவஹிந்திரபுரம் தேவநாதப்பெருமாள் கோயில். இக்கோயிலில் நடைபெறும் பத்து நாள் சித்திரை பிரம்மோற்சவ விழாவைக் காண லட்சக் கணக்கானோர் கூடுகிறார்கள். இக்கோயில் தேவ நாதப்பெருமாள் மும்மூர்த்தியாக காட்சி தருகிறார். கெடில நதி இங்கு தெற்கு வடக்காக ஓடுவதால் இதில் நீராடினால் கங்கையில் நீராடிய பலனைப் பெறலாம்.