சித்திரை மாதப் பிறப்பன்று விஷு புண்ய காலத்தில் பாபநாசத்தில் சிவபெருமான் - பார்வதி. அகத்தியருக்குத் திருமணக்காட்சி அருளும் வைபவம் நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் அன்று சூர்யோதய காலத்தில் பாபநாச தீர்த்தத்தில் நீராடி பாபநாசரை வணங்குவதற்கு பக்தர்கள் திரளாகக் கூடுகின்றனர்.