பதிவு செய்த நாள்
22
ஏப்
2015
11:04
திருவெண்ணெய்நல்லூர்: கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நேற்று சாகை வார்த்தலுடன் சித்திரை பெருவிழா கோலகலமாகத் துவங்கியது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான திருநங்ககைள் பங்கேற்று விழாவை சிறப்பிக்க உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், கூவாகத்தில் பிரசித்திபெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இந்த
கோவிலில், நேற்று மாலை 4:15 மணிக்கு சாகை வார்த்தலுடன் சித்திரை பெரு விழா துவங்கியது. விழாவை முன்னிட்டு கூவாகம், தொட்டி, நத்தம், அண்ணாநகர், சிவலிங்ககுளம், காந்திநகர் உட்பட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பெண்கள் கஞ்சி கலயங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, அம்மனுக்கு படையலிட்டனர்.
இன்று (22ம் தேதி) பந்தலடியில் ஊர் பிரமுகர்களுக்கு தாலிக்கட்டும் நிகழ்ச்சி, 23ம் தேதி சந்
தனு சரிதம், 24ம் தேதி பீஷ்மர் பிறப்பு, 25ம்தேதி தர்மர் பிறப்பு, 26ம்தேதி பாஞ்சாலி பிறப்பு
ஆகிய நிகழ்ச்சிகள் தொடர்ந்துநடக்கிறது. 27ம்தேதி பகாசூரன் வதம், 28ம்தேதிபாஞ்சாலி திரும
ணம், 29ம் தேதி கூத்தாண்டவர் பிறப்பு, 30ம் தேதி ராஜசூயயாகம் ஆகிய நிகழ்ச்சிகளும், மே மாதம், 1ம் தேதி வெள்ளிக்கால் நடுதல், 2ம் தேதி கிருஷ்ணன்தூது, 3ம்தேதி கூத்தாண்டவருக்கு பாலாலயம், 4ம் தேதி கம்பம் நிறுத்துதல்ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
முக்கிய திருவிழாவான, மே மாதம் 5ம்தேதி இரவு, சுவாமிக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மும்பை, சென்னை, டில்லி, கொல்கத்தா, கர்நாடகா, கேரளா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் திருநங்கைகள், பூசாரிகளின் கையால் தாலிக் கட்டிக்கொண்டு இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வர். நூற்றுக் கணக்கான திருநங்கைகள் பங்கேற்பதே, இவ்விழாவின் மிகச் சிறப்பான நிகழ்வாகும்.மே மாதம் 6 ம்தேதி காலை 6:30மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.தொடர்ந்து மதியம் 12:00மணிக்கு நடக்கும் அழுகளம் நிகழ்ச்சியில், திருநங்கைகள் தங்கள் அணிந்திருந்த தாலியை அறுத்தெறிந்து, விதவைக்கோலம் பூண்டு, அப்பகுதியிலுள்ள கிணற்றில் குளித்து விட்டு, தங்கள் ஊருக்கு திரும்புவர்.
மாலை 5:00 மணிக்கு உறுமை சோறு (பலிசாதம்) படையல் நடக்கிறது. இதை வாங்கி சாப்பிட்டால் குழந்தைப்பேறுகிடைக்கும் என்பதால் பக்தர்கள் முண்டியடித்து வாங்குவர்.
மாலை 7:00 மணிக்கு காளிக்கோவிலில் அரவான் உயிர்ப்பித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பின் அரவான் சிரசு மட்டும் பந்தலடிக்கு கொண்டு வரப்பட்டு, மலர்களால் அலங்காரம் செய்வித்து நத்தம், தொட்டி வழியாக கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படும். 8ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் சித்திரை பெருவிழா நிறைவடைகிறது. ஏப்., 22ம் தேதி முதல் மே மாதம் 8ம்தேதி வரை மகாபாரத சொற்பொழிவுகள் நடக்கிறது.
விழாவை முன்னிட்டு சென்னை, கடலூர், விழுப்புரம், பண்ருட்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை உள்பட பல்வேறுபகுதிகளிலிருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.