பதிவு செய்த நாள்
22
ஏப்
2015
12:04
திருத்தணி: இந்தாண்டு, சித்திரை மாத பிரம்மோற்சவம், நாளை (23ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினசரி, காலை, இரவு ஆகிய இரு வேளைகளில், ஒவ்வொரு வாகனத்திலும் உற்சவ பெருமான், சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
வரும், 30ம் தேதி, தெய்வானை திருக்கல்யாணம், மே 1ம் தேதி சண்முகர் உற்சவம் போன்ற
நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மேலும், பிரம்மோற்சவம் நடக்கும் 11 நாட்களும், மாலையில் ஆன்மிக சொற் பொழிவு நடைபெறும்.
தேதி நேரம் உற்சவம்
ஏப்.23: காலை 6:00 மணி கொடியேற்றம் இரவு 7:00 மணி-கேடய உலா
ஏப்.24: காலை 9:30 மணி வெள்ளி சூரிய பிரபை இரவு 7:00 மணி - பூத வாகனம்
ஏப்.25: காலை 9:30 மணி சிம்ம வாகனம் இரவு 7:00 மணி- ஆட்டு கிடாய் வாகனம்
ஏப்.26: காலை 9:30 மணி- பல்லக்குசேவை இரவு 7:00 மணி - வெள்ளி நாக வாகனம்
ஏப்.27: காலை 9:30 மணி அன்ன வாகனம் இரவு 7:00 மணி -வெள்ளி மயில் வாகனம்
ஏப்.28: மாலை 4:30 மணி புலி வாகனம் இரவு 7:00 மணி - யானை வாகனம்
ஏப்.29: இரவு 7:00 மணி தங்கத்தேர்
ஏப்.30: காலை 9:30 மணி யாளி வாகனம் இரவு 8:00 மணி - தெய்வானை திருக்கல்யாணம்
மே 1: காலை 9:30 மணி கேடய உலா இரவு 8:00 மணி - சண்முகர் உற்சவம்
மே 2: அதிகாலை 5:00 மணி தீர்த்தவாரி, சண்முகர் உற்சவம் மாலை 5:00 மணி - உற்சவர் அபிஷேகம் இரவு 9:00 மணி - கொடி இறக்கம்
மே 3: இரவு 7:00 மணி சப்தாபரணம், காதம்பரிவிழா