திருவள்ளூர், தேவி மீனாட்சி நகரில், 32 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், புதிதாக யாக மண்டபம் கட்டப்பட்டு உள்ளது.இம்மண்டபத்தில் முதன் முறையாக, நேற்று, அட்சய திருதியையை முன்னிட்டு, ஸ்ரீசூக்த ஹோமம் நடந்தது. இதற்காக யாகசாலை அமைக்கப்பட்டு, ஹோமம் நடந்தது. காலை 11:00 மணி வரை ஹோமம் நடந்தது. பின் மகா தீபாராதனையுடன் நிறைவடைந்தது. இதில், திருவள்ளூர், பூங்கா நகர் பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.