பதிவு செய்த நாள்
22
ஏப்
2015
12:04
அவிநாசி: அவிநாசி அருகே, கொளுத்தும் வெயிலில், ஆறு கி.மீ., தூரம், பக்தர்கள் நேற்று குதிரையை சுமந்து ஊர்வலமாக சென்றனர்.
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை தேர்த்திருவிழாவுக்கு முன், ராயம்பாளையத்தில் இருந்து குதிரை ஊர்வலம் புறப்பட்டு, மங்கலம் ரோட்டில் உள்ள ஆகாசராயர் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்படும்.நேற்று, ராயம்பாளையத்தில் இருந்துகுதிரை ஊர்வலம் புறப்பட்டது.
கொளுத்தும் வெயிலில், இரண்டுகுதிரைகளை சுமந்து ஆறு கி.மீ., தூரம்,ஊர்வலமாக பக்தர்கள் சென்றனர். ஊர்வலம், ஆகாசராயர் கோவிலை சென்றடைந்த பின், சிறப்பு பூஜை, கிடாவெட்டுதல், அன்னதானம் ஆகியன நடந்தன. குதிரை சுமந்தவர்கள், பொங்கல் வைத்து ஆகாசராயரை வழிபட்டனர்.