சிவகங்கை : சிவகங்கை சனீஸ்வரர் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது.நேற்று காலை 8 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது.காலை 10:30 மணிக்கு சனீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடந்தது. பகல் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கானாடுகாத்தான் ராமசாமி, நாதஸ்வர ஆசிரியர் திருவாசகரமேஷ், தவில் ஆசிரியர் மணிகண்டனின் சர்வ சாதகம் நடந்தது. கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாட்டை செய்தனர்.