மங்கலம்பேட்டை: சின்னவடவாடி திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. சின்னவடவாடி திரவுபதி யம்மன் கோவில் தீ மிதி திருவிழா வரும் மே மாதம் 8ம் தேதி நடக்கிறது. இதையொட்டி நேற்று முன்தினம் (21ம் தேதி) காலை 7:00 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 10:00 மணிக்கு தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று (22ம் தேதி) முதல் மே மாதம் 7ம் தேதி வரை தினமும் இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது. மே 8ம் தேதி காலை 7:00 மணிக்கு கழு மரம் ஏறும் நிகழ்ச்சி, காலை 11:00 மணிக்கு அரவான் கடபலி, மாலை 5:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது.