கோயம்பேடு: கோயம்பேடு குறுங்காலீசுவரர் கோவிலில், சித்திரை பெருவிழா இன்று (ஏப். 23) துவங்கி மே 3ம் தேதி வரை, நடைபெற உள்ளது. இன்று கணபதி ஹோமம், விநாயக பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் மூஷிக வாகனத்தில் திருவீதியுலா நடைபெறும். நாளை, அதிகாலை 4:30 மணி முதல் 6:00 மணிக்குள், மீன லக்னத்தில் கொடியேற்றம் மற்றும் பஞ்சமூர்த்திகள் பவனி நடைபெறும். இதேபோல், ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நிறைவு நாளான, மே 3ல், ஸ்ரீநடராஜர் பவனி, ஸ்ரீசந்திரசேகர் பவனி, தீர்த்தவாரி உற்சவம், தர்மசம்வர்த்தினி உடனுறை ஸ்ரீகுறுங்காலீஸ்சுவரர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம், ராவணேஸ்வர திருக்கைலாய பர்வதம், பஞ்சமூர்த்திகள் வாகனங்களில் பவனி நடக்க உள்ளன.