பதிவு செய்த நாள்
23
ஏப்
2015
12:04
பந்தலுார் : சுல்தான் பத்தேரியில் அமைந்துள்ள மகா கணபதி கோவிலில், நவீன கலச மஹோற்சவம் இன்று முதல் துவங்குகிறது. கேரளா மாநிலம் வயநாடு மற்றும் நீலகிரி மாவட்டத்தின் கூடலுார், பந்தலுார் தாலுகாக்கள் அடங்கிய பகுதி கணபதி வட்டம் என்று அழைக்கப்படுகிறது. இதில், சுல்தான் பத்தேரியில் அமைந்துள்ள மகா கணபதி கோவிலில், நவீன கரண கலச மஹோற்சவம் இன்று முதல் துவங்குகிறது. இங்கு திருக்கோவில் புனர்நிர்மாண பணிகள் புராதன வாஸ்து சிற்ப விதிகளின்படி, நிறைவடைந்துள்ளது. மேலும், கருவறை நிறைத்தல், கலச பிரசார பயணம், அன்னதானத்துக்கு பொருட்கள் சேகரிப்பு பயணம் ஆகியவை நடந்து வருகிறது.இன்று காலை, 10:00 மணிக்கு துவங்கும் பிரதிஷ்டை பூஜையில், கேரளா மாநில அறநிலையத்துறை அமைச்சர் சிவகுமார் , முன்னாள் மத்திய அமைச்சர் ராஜகோபால், பத்தேரி எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன், கூடலுார் தொகுதி எம்.எல்.ஏ. திராவிடமணி உட்பட பலர் பங்கேற்கின்றனர். இந்து தலைவர்கள் சம்மேளனத்தை ஐக்கிய வேதி பொதுச்செயலாளர் கும்மளம் ராஜசேகரன் துவக்கி வைக்கிறார். வரும், 30ம்தேதி பிரதிஷ்டையும், 3ம்தேதி கும்பாபிஷேகமும் நடக்க உள்ளது. தொடர்ந்து, பல்வேறு நிகழ்வுகள் நடக்கவுள்ளது.