கோவை : செல்வபுரம், பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று வசந்த விழா நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது. செல்வபுரம், பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. நேற்று மாவிளக்கு பூஜை நடந்தது. இன்று காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை அன்னதான நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து இரவு, 7:00 மணியளவில் மஞ்சள் நீராட்டு மற்றும் வசந்த விழாவுடன் குண்டம் திருவிழா நிறைவடைகிறது. கோவில் விழா குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.