கீழக்கரை:உத்தர கோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மங்களேஸ்வரி தாயார் சன்னதி முன்புறம் உள்ள கொடிமரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, காலை 9.30 மணியளவில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. சிவாச்சாரியார்கள் ராஜலிங்கம், தேவேந்திரர், தங்க ராஜ், முத்துக்குமார் ஆகியோர் வேதமந்திரங்கள் முழங்க, சிறப்பு பூஜைகள் நடந்தது. ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான செயல் அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் ஸ்ரீதர், ஊராட்சித்தலைவர் நாகராஜன், பழனிமுருகன், அசோகன் பங்கேற்றனர்.