ஆண்டிபட்டி:ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வேத பாராயணங்கள், மந்திரங்கள் முழுங்க வாசாந்தி நடத்தப்பட்டு கொடிப்பட்டம் சுற்றப்பட்டு கொடியேற்றப்பட்டது. சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள், அன்னதானம் நடந்தது. நேற்று முதல் இரவு 8 மணிக்கு ஒவ்வொரு நாளும் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும். ஏப்ரல் 30 ல் திருக்கல்யாண நிகழ்ச்சியும், மே 3, 4 இரு நாட்கள் தேரோட்டமும் நடைபெறும்.