நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்று கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயில். இங்கு நடைபெறும் தூக்கத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த விழா அண்மையில் நிறைவு பெற்ற நிலையில் பத்தாம் உதயம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகா பொங்காலை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பொங்கலிட்டனர். தொடர்ந்து லட்சார்ச்சனை, சுத்திகலசபூஜைஆகியவை நடைபெற்றது. இதில் மாவட்ட மகளிர் கோர்ட் நீதிபதி முத்துசாரதா, அரசு ரப்பர் கழக இயக்குனர் மோகன்தாஸ், சுவாமி பத்மேந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.