திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன், தாரை வார்த்துக் கொடுக்க பவளக்கனிவாய் பெருமாள் ஏப். 29 மாலை திருப்பரங்குன்றத்திலிருந்து புறப்படுகின்றனர். ஏப்.30 ல் நடக்கும் திருக்கல்யாணம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு மே 3ல் பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்புவர்.