ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் சந்தைபேட்டை அருகில் உள்ள மகான் புலவரப்பா தர்கா கந்தூரி விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு துவா ஓதப்பட்டு, கொடிமரத்தில் கொடி யேற்றப்பட்டது. விழாக்குழு தலைவர் அலி சுல்த்தான், செயலாளர் கோடைஇடி அஸ்ரப்அலி, துணைத் தலைவர்கள் முகமது அலி ஜின்னா, தென்றல் ஜலீல் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏப்.30 ல் கந்தூரி விழா நடைபெற உள்ளது.