அவிநாசி : அவிநாசி, செல்லாண்டியம்மன் கோவிலில், பொங்கல் திருவிழா நடைபெற்றது.கடந்த, 14ல் காப்புக்கட்டு அபிஷேகத்துடன் விழா துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலையில், அம்மனுக்கு அபிஷேகம், வழிபாடு மற்றும் சுவாமி புறப்பாடு ஆகியன நடந்தன. பொங்கலன்று படைக்கலம் எடுத்தல், அம்மை அழைத்தல், பூவோடு, மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. செல்லாண்டியம்மன் கோவில் வீதி, கங்கவர் வீதிகளை சேர்ந்த பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மஞ்சள் நீராட்டு விழாவுடன், திருவிழா நிறைவடைந்தது.