பதிவு செய்த நாள்
27
ஏப்
2015
02:04
திருப்பூர் : திருப்பூர், வெள்ளியங்காட்டில் உள்ள காமாட்சியம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமி விழா, வரும் 29ல் துவங்குகிறது. அன்றிரவு வாஸ்து பூஜை நடக்கிறது. 30 காலை கணபதி ஹோமம், தீர்த்தம் எடுக்க கொடுமுடி செல்லுதல்; மாலை, 6:00க்கு, படைக்கலம் எடுத்தல், இரவு, 9:00க்கு அம்மை அழைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.மே 1 காலை 9:00க்கு பொங்கல் வைத்தல், மாலை 5:00க்கு அலகு குத்தி தேர் இழுத்தல் நடக்கிறது; 2 காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜை; காலை 11:00க்கு அன்னதானம், இரவு 8:00க்கு கலை நிகழ்ச்சி நடக்கிறது. மே 3 காலை 11:00க்கு ஊஞ்சல் உற்சவம், இரவு 8:00க்கு அம்மன் வீதியுலாவை தொடர்ந்து, 4, காலை 7:00க்கு, மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.