திருவாரூர்: நீடாமங்கலம் திரெளபதையம்மன் கோயிலில் 37ம் ஆண்டு தீமிதி உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் திரெளபதையம்மன் கோயில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் அதி விமர்சியாக நடந்து வருகிறது. இந்த ஆண்டிற் கான விழாவிற்கு கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. தினசரி அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தினர். 27ம் தேதி திங்கள்கிழமை நேற்று காலை 7 மணிக்கு கூந்தல் முடிதல் அபிஷேக ஆராதனை இரவு தீமிதி திருவிழா அதி விமரிசையாக நடை பெற்றது.நேற்று மாலை மஞ்சள் நீர் விளையாட்டு அபிஷேக ஆராதனை இரவு பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது. 29ம் தேதி புதன்கிழமை 10ம் நாள் திருவிழாவைமுன்னிட்டு பால்குடம்,கஞ்சி வார்த்தலும்மாலையில் ஊஞ்சல் விடையாற்றியும்,30ம் தேதி வீர விருந்தும் நடைபெறவுள்ளது.