18ம் படி கருப்பண சுவாமிக்கு 18 அடி உயர அரிவாள் காணிக்கை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2015 11:04
திருப்பரங்குன்றம்: தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவர்கள் சார்பில் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி, அழகர்கோவில் 18ம் படி கருப்பண சுவாமிக்கு 160 கிலோ எடையில் 18 அடி உயரம் கொண்ட அரிவாள் காணிக்கையாக செலுத்தப் பட்டது. முன்னதாக நேற்று காலை திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் அரிவாளுக்கு பூஜை செய்யப்பட்டது. பின், ஊர்வலமாக அழகர்கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஈரோடு மாவட்ட அ.தி.மு.க., மருத்துவர் அணி துணை தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். ஓமியோபதி மருத்துவ கவுன்சில் முன்னாள் தலைவர் ஹனிமன் முன்னிலை வகித்தார். ஓமியோபதி பெடரேஷன் தலைவர் நம்பியார் வரவேற்றார். அ.தி.மு.க. நிர்வாகிகள் மோகன்தாஸ், பாலு, குமரேசன், சந்திரமோகன் பங்கேற்றனர்.