பழநி ரெணகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2015 11:04
பழநி: பழநி ரெணகாளியம்மன்கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அம்மன் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பழநி புது தாராபுரம்ரோடு போலீஸ் குடியிருப்பு அருகேயுள்ள ரெணகாளியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்., 21ல் முகூர்த்தக்கால் நாட்டுதலுடன் துவங்கி மே 1 வரை நடக்கிறது. ஏப்., 24ல் ரெணகாளியம்மன், ரெணகருப்பண்ணசாமிக்கு வருடாபிஷேக விழா நடந்தது. ஏப்.,28ல் காணியாளர் செல்வராஜ்கவுண்டர் இல்லத்திலிருந்து பொன் ஆபரணப்பெட்டி எடுத்து வருதலும், புனித கிணற்று நீரில் அம்மனுக்கு அபிஷேக ஆதாரனை செய்து வாணவேடிக்கையுடன் சக்தி கரகம் ஊர்வலமாக வந்தது. மூலவர் ரெணகாளியம்மனுக்கு தங்ககவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்தனர். வெள்ளிசிம்மவாகனத்தில் அம்மன் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் மாவிளக்கு, தீச்சட்டி எடுத்தும், பொங்கல்வைத்து கடாவெட்டியும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திடன் செலுத்தினர். மே 1 அன்று காலை 10 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.