சங்கராபுரம்: சங்கராபுரத்தில் வாசவி அம்மன் பிறந்த நாள் விழா நடந்தது. விழாவையொட்டி சங்கராபுரம் கடைவீதியில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து யாகசாலை நடந்தது. மகா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான ஆர்ய வைசிய சமூகத்தினர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.