பதிவு செய்த நாள்
30
ஏப்
2015
02:04
அனுப்பர்பாளையம் : அனுப்பர்பாளையம் புதூர் சித்தி விநாயகர், கருப்பராய சுவாமி, கன்னிமார் சுவாமி கோவில் பொங்கல் விழா, கடந்த 22ல் துவங்கியது. நேற்று காலை, 6:00 மணி முதல் கருப்பராய சுவாமி, கன்னிமார் சுவாமிகளுக்கு மாவிளக்கு மற்றும் பொங்கல் விழா நடந்தது. பெண் கள், பொங்கலிட்டு சுவாமிக்கு படைத்தனர். நேர்த்திக்கடனாக கிடா மற்றும் சேவல் பலியிடப்பட்டது.மாலை, 4:00க்கு கருப்பராய சுவாமி வீதி உலா வந்தார். தொடர்ந்து குதிரையாட்டம், உருமி மேளம், தப்பாட்டம் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று மஞ்சள் நீராட்டு விழா, இரவு, 8:00க்கு கலைநிகழ்ச்சி நடக்கிறது.