Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 500 ஆண்டுகளுக்கு முந்தைய வீரக்கல் ... அழகர்கோயிலில் கும்பாபிஷேக முன்னேற்பாடு! அழகர்கோயிலில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் கும்பாபிஷேக யாகசாலைநிகழ்ச்சி துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2011
10:07

தென்காசி : அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் இன்று (2ம் தேதி) கும்பாபிஷேக யாகசாலை நிகழ்ச்சிகள் துவங்குகிறது. கேரள மாநிலம் அச்சன்கோவில் அரசன் ஐயப்பன் கோயிலில் கன்னி மூல கணபதி, நாகர், கிருஷ்ணர், மாளிகைபுரத்தம்மன் உள்ளிட்ட உப தேவதாக்களின் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் வரும் 7ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று (2ம் தேதி) பிரதிஷ்டா பூஜைகள் துவங்குகிறது. செங்கன்னூர் தாழமன் மடம் தந்திரி பிரம்ம ஸ்ரீ கண்டரு மகேஷ்வரரு தலைமையில் பூஜைகள் நடக்கிறது. காலையில் ஆச்சார்ய வர்ணம், கோ தானம், பஞ்சபுண்யாகம், கணபதி ஹோமம், 25 கலசம், பஞ்சகவ்யம் மற்றும் மதிய பூஜை நடக்கிறது. மாலையில் அம்குர பூஜை, பிரஸாத சுத்தி, கணபதி பூஜை ரக்ஷகலசம், ர÷க்ஷõக்ன ஹோமம், வாஸ்து ஹோமம், வாஸ்து கலசம், வாஸ்து பலி, கலசாபிஷேகம், வாஸ்து புண்யாகம் நடக்கிறது. தொடர்ந்து நாளை (3ம் தேதி) முதல் வரும் 5ம் தேதி வரை காலையில் கணபதி ஹோமம், அம்குர பூஜை, ஹோமம், கலசாபிஷேகம், மாலையில் அம்குர பூஜை, இரவு பூஜை நடக்கிறது. 6ம் தேதி காலையில் கணபதி ஹோமம், அம்குர பூஜை, தத்துவ ஹோமம், தத்துவ கலசம், கலசாபிஷேகம், 25 கலசம், மரப்பாணி, ஜீவகலச பூஜை, மதிய பூஜை, மாலையில் சயன பூஜை, கும்பேஷக்கரி பூஜை, பிரம்ம கலச பூஜை, அதிவாஸ ஹோமம், அதிவாஸ பூஜை நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான 7ம் தேதி காலையில் கணபதி ஹோமம், மரப்பாணி வாத்திய கோஷத்தோடு திருவீதி எழுந்தருளல், பிரதிஷ்டை, அஷ்டபந்தன கும்பாபிஷேகம் மற்றும் மதிய பூஜை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar