மதுரை: மதுரை அழகர்கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 10 ல் நடக்கிறது. முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் மதுரையில் கலெக்டர் சகாயம் தலைமையில் நடந்தது. அவர் பேசியதாவது: அழகர்கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 10 ல் பக்தர்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்க வேண்டும். தற்காலிக கழிப்பறைகள், குடிநீர், சுகாதாரம், ஆம்புலன்ஸ் வசதி செய்ய வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும், என்றார். கோயில் நிர்வாக அதிகாரி செல்வராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜாராமன், ஆர்.டி.ஓ., மோகன்தாஸ் மற்றும் பொதுப்பணி, சுகாதாரம், போலீஸ், தீயணைப்பு, போக்குவரத்து, மின்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.