கும்பகோணம்: சுவாமிமலையில் சித்திரை மாத பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது. கும்பகோணம் அடுத்த சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில், பவுர்ணமி கிரிவலம் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி, சித்திரை மாத பவுர்ணமி கிரிவலம் நடந்தது. மாலை 6.30 மணிக்கு வல்லபகணபதி சன்னதியிலிருந்து புறப்பட்ட கிரிவலத்தை முன்னாள் எம்.எல்.ஏ., ராமலிங்கம், தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, தேவார திருப்புகழ் பாராயண முழக்கத்துடன் சுவாமிமலை கிரிவல கமிட்டியினரால் நடத்தப்படும், கூட்டுவழிபாடு மற்றும் கிரிவலம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிரிவல கமிட்டி குழுவினர் செய்திருந்தனர்.