வீரபாண்டி கவுமாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூலை 2011 04:07
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தேனி அருகே உள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் சித்திரை, வைகாசி மாதங்களில் நடக்கும் திருவிழாவில் தென் மாவட்டங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் பங்கேற்கின்றனர். இக்கோயிலில் கடந்த 2000ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது கும்பாபிஷேகம் முடிந்து 11 ஆண்டுகளாகி விட்டது. வரும் 2012ல் கும்பாபிஷேகம் நடத்த தேவையான ஏற்பாடுகளில் கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கு முன்னதாக ராஜகோபுரம் கட்டும் பணிக்கான நிதி திரட்டும் பணியில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. ராஜகோபுரம் கட்ட மட்டும் 3 கோடி ரூபாயில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. நிதி உதவி அளிப்பவர்கள் கோயில் நிர்வாக அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கண்ணீஸ்வர முடையார் கோயிலிலும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டன. எனவே வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு முன்னதாகவே கண்ணீஸ்வரமுடையார் கோயிலிலும் கும்பாபிஷேகத்தை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.