மதுரை: துரை மாநகராட்சி ராஜாஜி சிறுவர் பூங்கா தண்டபாணி கோயில் உண்டியல் எண்ணும் பணி, மேயர் தேன்மொழி தலைமையில் நடந்தது. மாநகராட்சி திரு.வி.க., பள்ளி மாணவ, மாணவிகள், ஊண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். பக்தர்களின் காணிக்கையாக, இரண்டு லட்சத்து 51 ஆயிரத்து 114 ரூபாய் கிடைத்தது. மாநகராட்சி கோயில் நிதியில் இத்தொகை பராமரிக்கப்பட்டு, கோயில் அர்ச்சகர், ஊழியர்கள் சம்பளம், பராமரிப்பு செலவுகளுக்கு பயன்படுத்தப்படும். கணக்கு அலுவலர் பிரேம்குமார், பி.ஆர்.ஓ.,பாஸ்கரன் பங்கேற்றனர்.