யானைகளுக்கு சுக சிகிச்சை குருவாயூர் கோவிலில் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2011 10:07
குருவாயூர் : குருவாயூர் கிருஷ்ணர் கோவில் யானைகளுக்கு சுக சிகிச்சை துவங்கியுள்ளது. "கேசவன் குட்டி என்ற யானைக்கு மூலிகை கலந்த உணவு வழங்கி, சுக சிகிச்சையை அமைச்சர் சிவகுமார் துவக்கி வைத்தார். குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு சொந்தமான 62 யானைகள், புணத்தூர்கோட்டையில் பராமரிக்கப்படுகின்றன. இந்த யானைகளுக்கு ஆண்டு தோறும் மழைக்காலங்களில் சுக சிகிச்சை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டும் சிகிச்சை துவங்கியுள்ளது. அமைச்சர் சிவகுமார், சிகிச்சையை துவக்கி வைத்தார். தினமும் காலை வேளையில் மசாஜ் செய்து குளிப்பாட்டப்படும் யானைகளுக்கு, மூலிகை கலந்த சாத உருண்டைகளும், தென்னை மட்டைகளும் உணவாக வழங்கப்படுகின்றன. யானைகளின் உடல் நிலையை பரிசோதனை செய்து, அவற்றுக்கு தகுந்த சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. சுக சிகிச்சை துவக்க விழாவில், அமைச்சர் பேசுகையில், ""குருவாயூர் தேவஸ்தானத்துக்கு சொந்தமான யானைத்தாவளத்தில் சீரமைப்பு வேலைகள் விரைவில் துவங்கப்படும். இதற்காக இடது முன்னணி ஆட்சியில் அன்றைய சுற்றுலாத் துறை அமைச்சர் வேணுகோபால் ஐந்து கோடி ரூபாய் அனுமதித்திருந்தார். ஆனால், சரிவர சீரமைப்பு வேலைகள் நடக்கவில்லை. அந்த பணிகள் இந்த ஆட்சியில் சிறப்புடன் செய்து முடிக்கப்படும், என்றார்.