சென்னை : மயிலாப்பூர் நந்தலாலா கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. சென்னை மயிலாப்பூரில், டாக்டர் ரங்கா சாலையில், ஸ்ரீநந்தலாலா ரிலிஜியஸ் அறக்கட்டளை சார்பில், ஸ்ரீநந்தலாலா பெருமாள், ஸ்ரீவம்சீகர தேனு ரஷகர் (குழல் ஊதும் பசுபால சுவாமி) கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. கும்பாபிஷேகத்தில், நந்தலாலா அறக்கட்டளையின் அறங்காவலர் குழு தலைவர் சரஸ்வதி,மேற்கு தாம்பரம் ராஜகோபால பட்டாச்சாரியார், கணபதி ஸ்தபதி, ஆமதாபாத் சோம்புரா ஸ்தபதி ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.